நடப்பு
தொடர்கள்
Published:Updated:

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய ‘மியூச்சுவல் ஃபண்ட் - முதலீட்டு மந்திரங்கள்’ என்கிற மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டம் அண்மையில் கும்பகோணத்தில் நடந்தது. 

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

இந்தக் கூட்டத்தில் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி பிரிவுத் தலைவர் கே.எஸ்.ராவ் பேசும்போது, ‘‘2,000 ரூபாயை பீரோவில் வைத்திருந்தால், 30 வருடங்களில் 300 ரூபாயாகக் குறைந்துவிடும். பணத்தின் மதிப்புக் குறையாமல் இருக்கவேண்டுமெனில், அதைக் கட்டாயம் முதலீடு செய்தே ஆகவேண்டும்’’ என்றார். 

ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதலீட்டாளர் கல்வி பிரிவு உதவித் தலைவர் எஸ்.குருராஜ், ‘‘நமது  ஓய்வுக்காலம் இனிதாக இருக்க, முதல் சம்பளம் வாங்கிய உடனே ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம், முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்துச் செய்வதுதான்” என்றார்.

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

அடுத்து ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.பாலசுப்பிரமணியன், நிதிச் சேவை துறையில் தனது 28 ஆண்டு கால அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘நான் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைந்த போது நிர்வகிக்கப்படும் தொகை ரூ.35,000 கோடியாக இருந்தது. அப்போது என்.ஏ.வி மதிப்பு எல்லாம் கிடையாது என்பதால், யாருக்கும் அவர்களின் முதலீட்டு மதிப்பு உடனடியாகத் தெரியாது. என் அப்பாகூட ரூ.2 லட்சம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தார். அது குறுகிய காலத்தில் ரூ.7 லட்சமாகப் பெருகியது. அப்போது சென்செக்ஸ் 3000 புள்ளிகளாக இருந்தது; இன்றைக்கு அது 35,000-ஆக அதிகரித்துள்ளது. 

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

நாங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்காக நிறுவனங்களை நன்கு அலசி ஆராய்ந்துதான் முதலீடு செய்கிறோம். எந்த ஒரு நிறுவனத்திலும் முழுத் தொகையையும் முதலீடு செய்வதில்லை. சிட்டி யூனியன் பேங்க் நல்ல பாரம்பர்யமான வளர்ச்சி கண்டுவரும் வங்கிதான். ஆனால், அதில் 100% தொகையை முதலீடு செய்யமாட்டோம்; அதிகபட்சம் 4.5% தொகையைதான் அந்த வங்கிப் பங்கில் முதலீடு செய்வோம். இப்படிப் பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கைக் குறைக்கிறோம். கூடவே லாபத்தை அதிகரிக்கிறோம். 

முதலீட்டின் முதல் முக்கிய மந்திரம்!

ஒரு காலத்தில் ஒரே பங்கில் 30% முதலீடு செய்யப்பட்டது. இதனால் பல மியூச்சுவல் ஃபண்டுகள் சிக்கலில் மாட்டிக்கொண்டன. இதற்குத் தீர்வு காணும் விதமாக செபி, எந்தவொரு  ஃபண்டிலும் 10 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது என விதிமுறை கொண்டு வந்தது.  இந்த ஏற்ற இறக்க சந்தையில் கடந்த 20 ஆண்டு களில் இந்திய ஈக்விட்டி ஃபண்டுகள் ஆண்டுக்குச் சராசரியாக 20% வருமானம் தந்துள்ளன’’ என்றார்.

இறுதியாகப் பேசிய முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், “ஒருவரின் வயது, குடும்ப உறுப்பினர் கள், கடன் போன்வற்றை கவனித்து அதற்கேற்ப முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு கெட்ட செய்தியும் பங்குச் சந்தைக்கு நல்ல செய்திதான். அதாவது, பங்கு விலை இறங்கும், அப்போது முதலீடு செய்யலாம். கடந்த 1963-ம் ஆண்டுக்குப் பிறகு எஃப்.டி வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளது. காரணம், அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் பணம் நகர்ந்திருப்பதுதான்’’ என்றார்.

இந்த நிறுவனத்தின் தென் மண்டலத் தலைவர் வைபவ் சுக், இந்த நிறுவனத்தின் எமெர்ஜிங் மார்க்கெட்ஸ் தலைவர் தீபக் குப்தா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-சி.சரவணன்

படங்கள்: எம்.அரவிந்த்