நடப்பு
தொடர்கள்
Published:Updated:

அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

எஸ்,ஸ்ரீதரன் நிதி ஆலோசகர், wealthladder.co.in

மீப காலமாக நிறைய நிறுவனங்கள் நான் கன்வர்ட்டபிள் டிபென்ச்சர்களை (என்.சி.டி)  வெளியிட்டு வருகின்றன. கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு இந்த பாண்டுகளுக்கு அதிக வட்டியையும் நிர்ணயம் செய்திருப்பது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக உள்ளது. வங்கி எஃப்.டி-யில் தரப்படும் வட்டி விகிதம் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துவரும் நிலையில், இந்த பாண்டுகளில் முதலீடு செய்து லாபம் பெறலாமா என்கிற எண்ணம் பலருக்கும் வந்திருப்பது இயற்கையே.  இந்த நிலையில், இந்த பாண்டுகளில் முதலீடு செய்யலாமா, அப்படி முதலீடு செய்ய வேண்டுமெனில், என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போம்.  

அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

முதலில், என்.சி.டி என்றால் என்ன என்பதையும், அண்மை காலத்தில் அதிக எண்ணிக்கையில் என்.சி.டி-க்கள் ஏன் வந்துகொண்டிருக்கின்றன என்று பார்ப்போம்.

என்.சி.டி என்றால்..?

 நான்-கன்வர்ட்டபிள் டிபென்ச்சர்கள் (Non Convertible Debentures) என்பதன் சுருக்கம்தான் என்.சி.டி என்று அழைக்கப்படுகிறது. இது நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களாகும். நிறுவனங்கள் தங்களின் தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான முதலீட்டைப் பொதுமக்களிடமிருந்து பெற, நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுக்காலம் கொண்ட கடன் பத்திரத்தைக் குறிப்பிட்ட வட்டியுடன்  வழங்குவதே என்.சி.டி ஆகும்.

அண்மைக் காலமாக வங்கிகள் வாராக் கடன் பிரச்னைகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. வங்கிகளின் வாராக் கடன் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளன. இந்த நிலையில், பெரு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுத்து வருகின்றன. இதனால் பெரிய நிறுவனங்கள் தங்களின் பணத்தேவைகளுக்கு என்.சி.டி வழியாகப் பணத்தைத் திரட்ட முயற்சி செய்கின்றன. அதிலும் குறிப்பாக, சமீப காலத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதினால், என்.சி.டி போன்ற கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட முயற்சி செய்கின்றன. 

அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!



அதிக வட்டி


சமீப காலமாக வங்கிகள் டெபாசிட்களுக்கு அளிக்கும் வட்டி விகிதம் வேகமாகக் குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகள் வரை டெபாசிட்களுக்கு தரப்பட்ட வட்டி விகிதம் சுமார் 8 சதவிகிதத்துக்குப் பக்கத்தில் இருந்தது. ஆனால், இப்போது சுமார் 6.5% வட்டி என்கிற அளவிலேயே டெபாசிட்களுக்கு வங்கிகள் வட்டி தருகின்றன. இந்த நிலையில்,  முதலீட்டாளர்கள் இதுபோன்ற என்.சி.டி-களின் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களால் உடனடியாக ஈர்க்கப் படுகிறார்கள்.

இரண்டு வகை என்.சி.டி

இரண்டு வகையான என்.சி.டி-கள் இருக்கின்றன. 1. செக்யூர்டு என்.சி.டி-கள், 2. நான்- செக்யூர்டு என்.சி.டிகள். முதலில், செக்யூர்டு என்.சி.டி-களைப் பார்ப்போம்.

1. செக்யூர்டு என்.சி.டி-கள்

கம்பெனிகளின் சொத்து மதிப்பை சார்ந்தவைகளாக இருக்கும் முதலீட்டாளர்கள் ஏதேனும் பிரச்னை என்றால், கம்பெனியின் சொத்து மதிப்பிலிருந்து பணத்தைத் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

2. நான்-செக்யூர்டு என்.சி.டி-கள்

கம்பெனி சொத்து மதிப்பை சார்ந்தவைகளாக இருக்காது. இதுபோன்ற என்.சி.டி-கள் க்ரைசில், இக்ரா போன்ற கிரெடிட் ஏஜென்சிகளால் ரேட்டிங் செய்யப்படுகின்றன. அதிகமான ரேட்டிங் (AAA, AAA+) செய்யப்படும் என்.சி.டி-கள் குறைவான வட்டி விகிதம் கொடுப்பினும் குறைவான அபாயம் உடையவையாக இருக்கின்றன. என்.சி.டி-கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ போன்ற எக்ஸ்சேஞ்சு-களில் பட்டியல் இடப்படுகின்றன. 

அதிக வட்டி தரும் கம்பெனி பாண்டுகள்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

முதலீட்டாளர்கள் அவர்களின் தேவைக்கேற்ப எக்ஸ்சேஞ்ச் மூலம் விற்பனை செய்துகொள்ளலாம். ஆனால், எக்ஸ்சேஞ்ச்களில் என்.சி.டி-கள் குறைவான அளவே வர்த்தகம் செய்யப்படுகின்றன என்பதைக் கணக்கில்கொள்ள வேண்டும்.

வரி கட்ட வேண்டுமா?

முதலீட்டாளர்கள் டீமேட் மூலம் விற்பனை செய்தால், குறைந்த கால விற்பனை வரி அல்லது நீணடகால விற்பனை வரிகளைச் செலுத்த வேண்டும். பேப்பர் ஃபார்ம் மூலமாக விற்பனை செய்தால், அதில் வரும் லாபம் அவர்களின் அந்த நிதியாண்டிற்கான வருமானத்தில் சேர்த்துக் கொள்ளப்படும்; அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும். வட்டி வருமானம் ரூ.5,000-க்கு மேல் இருக்குமானால், டி.டி.எஸ் பிடித்துக் கொள்ளப்படும். வரி தகுதியுள்ள முதலீட்டாளர்கள் ஃபார்ம் 15 G/H  கொடுக்கலாம் 

கவனிக்க வேண்டியவை


ஒரு என்.சி.டி-யில் முதலீடு செய்வதற்குமுன் முதலீட்டாளர்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்களை இனி பார்ப்போம்.

நிறுவனங்களின் பின்னணி, அவை செய்யும் தொழில்கள், லாப நஷ்டக் கணக்கு, அவை முதலீடு செய்திருக்கும் தொழில்கள், நிறுவனத்தின் கடன் மதிப்பு எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

கடன் பெற்றப்பின் அந்த நிறுவனங்கள் தாங்கள் செய்யும் தொழிலில் இருந்து வேறு தொழில்களிலும் முதலீடு செய்யப் போகிறார்களா, மற்ற நிறுவனங்களுக்குக் கடன் தரப் போகிறார்களா, ஏற்கெனவே வாங்கிய கடன்களை எவ்வளவுக்குத் திருப்பித் தரப் போகிறார்கள் என்பதையும் கணக்கில்கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, ரேட்டிங் ஏஜென்சி யின ரேட்டிங்கை கவனத்தில் கொள்வது நல்லது.

எதில் முதலீடு செய்யலாம்?

தற்போதைய என்.சி.டி-களான டி.ஹெச்.எஃப்.எல் (DHFL) மற்றும் ஜெ.எம். ஃபைனான்ஷியல் (JM Financial) மிகுதியான வட்டி விகிதத்துடன் வந்திருக்கின்றன. ஏற்கெனவே சொன்னதுபோல, ஜெ.எம். ஃபைனான்ஷியல் குறைவான ரேட்டிங்கும், டி.ஹெச்.எஃப்.எல்-லைவிட அதிக வட்டி விகிதத்துடன் வந்திருக்கிறது.

இந்த இரு நிறுவனங்களும் ரியல் எஸ்டேட் முதலீட்டுகளுக்கும், ரியல் எஸ்டேட் நிறுவனங் களுக்கு கடன் கொடுப்பதற்கும் தங்களுடைய முந்தைய கடன்களை அடைப்பதற்குச் சிறிய தொகையை உபயோகப்படுத்திக் கொள்வதற்குக் கடன் பெறுகின்றன. இதனைக் கவனித்து முதலீட்டு முடிவைச் சொந்தமாக எடுங்கள்.

நீண்டகால முதலீட்டாளர்கள், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கத்தை விரும்பாதவர்கள் சமீப கால வங்கி எஃப்.டி-யில் குறைவான வட்டி விகிதத்திற்கு மாற்று தேடுபவர்கள் தங்களின் முதலீட்டின் ஒரு பகுதியை என்.சி.டி-களில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும்முன் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்களை கவனத்தில் கொள்வது நல்லது.