நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன் தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் (மினி)

தங்கம் ஒரு குறுகிய எல்லைக்குள் சுழல்வதால், ஒரு வாரம் ஏற்றம்,  ஒரு வாரம் இறக்கம் என்று மாறி மாறி நிகழ்ந்து வருகிறது. பெரிய இறக்கத்தைத் தாண்டி, சென்ற வாரம் ஏற்றத்தில் முடிவடைந்தது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரம் சொன்னது… “தங்கம் நல்ல இறக்கத்திற்குப்பின்பு 30850 என்ற எல்லையை ஆதரவாக எடுத்துள்ளது. மேலே முக்கியத் தடைநிலையாக 31180 உள்ளது.’’

சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த முக்கிய ஆதரவான 30850-யைத் தக்கவைத்துள்ளது.  திங்கள் மற்றும் செவ்வாயன்று நாம் கொடுத்த ஆதரவு மற்றும் தடைநிலைக்கு இடையே சுழன்று கொண்டிருந்தது. புதனன்று தடை நிலையான 31180-ஐ உடைத்துப் பலமாக ஏறியது.  இந்த ஏற்றத்தின் உச்சமாக 31369-யைத்  தொட்டாலும், அந்த உச்சத்தைத் தக்கவைக்க முடியாமல் இறங்கி, 31186 என்ற எல்லையில் முடிந்தது.  ஆனாலும், நாம் கொடுத்த தடை நிலையான 31180-க்கு சற்று அருகே முடிந்துள்ளது. அடுத்து வியாழனன்று வலிமையாக ஏறி 31486-யைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. வெள்ளியன்று மீண்டும் வலிமை குன்ற ஆரம்பித்து உள்ளது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்இனி என்ன நடக்கலாம்? தங்கம் சென்ற வாரம் நன்கு ஏறியிருந்தாலும், தடையைத் தாண்ட முடியாமல், இறங்க ஆரம்பித்துள்ளது. இனி, ஜூன் மாதம் முடிவுக்கு வருவதால், ஜூலை மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்ளலாம்.  தற்போதைய தடைநிலை 31680 ஆகும். ஆதரவு நிலை 31240 ஆகும்.

வெள்ளி (மினி)

சென்ற வாரம் தங்கத்தைவிட வேகமான நகர்வைக் கொண்டிருந்தது வெள்ளி.

சென்ற இதழில் சொன்னது... “வெள்ளி 39850 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு ஏற முயற்சி செய்கிறது.  இந்த ஏற்றம் 40350 என்ற எல்லையில் தடுக்கப்படலாம்.  உடைத்தால் பெரிய ஏற்றம் வரலாம்.’’

வெள்ளி, 39850 என்ற ஆதரவையும் தக்கவைத்துள்ளது. அதையும் தாண்டி மேலே உள்ள தடைநிலை யான 40350-யும் உடைத்து ஏறியுள்ளது.  

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

சென்ற வாரத் தொடக்கத்தின்  ஆரம்பத்தில் முதல் இரண்டு நாள்களும் தங்கம் பக்கவாட்டு நகர்வில் இருந்தபோது, வெள்ளி யானது திங்களன்றே தடையை உடைத்து ஏற ஆரம்பித்தது.  செவ்வாயன்று இன்னும் பலமாக ஏறி உச்சமாக 40773-யைத் தொட்டு,  அதைத் தக்கவைக்க முடியாமல், இறங்கி 40509-ல் முடிந்தது.  ஆனாலும், வியாழனன்று இன்னும் பலமாக ஏறி உச்சமாக 40929 என்ற எல்லையைத் தொட்டது. அதன்பின் சற்றே வலிமை குன்ற ஆரம்பித்துள்ளது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இனி என்ன நடக்கலாம்? வெள்ளி வலிமையாக ஏறினாலும்கூட, தற்போது மிக வலிமையான தடைநிலையான 41000-க்கு அருகில் உள்ளது.  கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை இந்த எல்லைக்கு அருகில் வந்து தாண்டமுடியாமல் இறங்க ஆரம்பித்தது. தற்போது உடனடி ஆதரவு நிலை என்பது 40250 ஆகும்.

கச்சா எண்ணெய் (மினி)

சென்ற வாரம் சொன்னது… ‘‘மே மாத, கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், நாம் ஜூன் மாத கான்ட்ராக்ட்டை எடுக்கவேண்டும்.  தற்போது 4925 முக்கியத் தடைநிலை யாகவும், கீழே 4800 என்பது உடனடி ஆதரவாகவும் உள்ளது.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய்க்கு, ஜூன் மாத கான்ட்ராக்ட் அவ்வளவு சாதகமாக இல்லை. தொடர்ந்து பலமாக ஏறிக் கொண்டு இருந்த கச்சா எண்ணெய், சென்ற வாரம் கொஞ்சம் திணற ஆரம்பித்தது. சென்ற வாரத்தின் ஆரம்பத்தில் ஏற்றத்தைத் தொடர முயற்சி செய்து தடைநிலையான 4925-யைத் தாண்டி 4973-யைத்  தொட்டாலும், முடியும்போது 4929 என்ற புள்ளியில் முடிந்து ஒரு டோஜியை உருவாக்கியது. அதன் பின் நாம் கொடுத்த ஆதரவு நிலை யான 4800-யும் உடைத்து வலிமையாக இறங்கிக்கொண்டு இருக்கிறது.

இனி என்ன நடக்கலாம்? தற்போது வலிமை யான இறக்கத்திலுள்ள கச்சா எண்ணெய், கீழே 4600 என்ற எல்லையில் ஆதரவு எடுக்கலாம். மேலே 4850 என்பது முக்கியத் தடைநிலையாகும்.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டியைப் படிக்க : https://bit.ly/2xcmWWL