நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் ஆரம்ப நாளில் கரடியின் கையில் சிக்கியிருந்தது. இந்த நிலைதான் அடுத்துவந்த நாள்களிலும் காணப் பட்டது. வியாழக்கிழமை மதியத்துக்குமேல், சந்தைக்குள் காளைகள் பின்வழியாக வந்தார்கள். அவர்களின் ஆதிக்கம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது.  

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கடந்த வாரத்தில் சந்தையின் இறக்கமானது  கடுமையாகத்தான் இருந்தது. லார்ஜ்கேப் பங்கு களின் விலையும் இறக்கம் கண்டன. அதனால்தான், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள்கூட வேகமாக மீண்டுவரவில்லை. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் அதிக இறக்கம் கண்டதால், சென்டிமென்ட் மோசமாக இருந்தது. இந்த நிலையில், லார்ஜ்கேப் பங்குகள் விலை ஏற்றம் கண்டது. லாப நோக்கம் கருதி அவை விற்கப்பட்ட தால், அவற்றின் விலையும் இறக்கம் கண்டன.
சந்தை இறக்கத்தை வியாழக்கிழமை அன்று பேங்க் நிஃப்டி ஏற்றத்துக்குக் கொண்டுவந்தது. ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் நன்றாக விலை இறங்கிக் காணப்பட்டதால், வாங்குதல்  நடந்திருக்கிறது. ஐ.டி பங்குகள் விலையேற்றம் கண்டது, இண்டெக்ஸ் ஏற்றத்துக்கு உதவியது.

நிதிநிலை முடிவுகள் வெளியீடு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இதுவரைக்கும் வந்திருக்கும் நிறுவனங்களின் நிதிநிலைகளை மிகவும் மோசம் என்று சொல்ல முடியாது. சுமார் 45% நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட 25% நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் ஏமாற்றத்தை அளித்திருக்கின்றன. மீதி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்த்தபடி வந்திருக்கின்றன. பெரிதாகக் கொண்டாடும் விதமாக எந்த நிறுவனத்தின் மார்ச் காலாண்டு முடிவும் இல்லை. அதேநேரத்தில், அடுத்த காலாண்டில் நிறுவனங் களின் நிலைமை மேம்படும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கின்றன. 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!



வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டை வெளியே எடுத்துக்கொண்டிருந்தாலும் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் முதலீட்டைக் குவித்துவருவது சந்தை இன்னும் அதிக இறக்கத்தைச் சந்திப்பதைத் தடுத்து வருகிறது. வர்த்தகர்கள் சற்று உஷாராகச் செயல்படுவது நல்லது.

வரும் வாரத்தில் சென்டிமென்ட் மெதுவாக  மேம்படும். சில நல்ல செய்திகள் சந்தையை மேலேற்றக்கூடும்.

பல பங்குகள் அதிக விலை இறக்கம் கண்டி ருக்கும் நிலையில் அவை வாங்கப்பட்டிருக்கின்றன. வரும் வாரத்தில் நிஃப்டி ஃப்யூச்சர் 10700 மற்றும் 10350 இடையே வர்த்தகமாகக்கூடும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

வருண் பீவரேஜஸ் லிமிடெட் (VBL)

தற்போதைய விலை: ரூ.734.65

வாங்கலாம்


சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டன. பழச்சாறு தயாரிக்கும் இந்த நிறுவனம், பெப்சி நிறுவனத்தின் முக்கிய ஃப்ரான்சைஸியாக உள்ளது. இந்த நிறுவனம் நல்ல வருமானத்தைத் தந்துவருகிறது.கடந்த சில மாதங்களாக இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற, இறக்கம் இல்லாமல் காணப்பட்டது. பங்கின் விலை சார்ட்டில் ரவுண்டிங் பேட்டர்ன் உருவாகி யிருக்கிறது. தற்போது அந்த பேட்டர்னிலிருந்து பிரேக் அவுட்டைத் தேடிச் செல்கிறது. இந்த பிரேக் அவுட்டானது மேல்நோக்கித் தொடரக்கூடும். குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.840-க்கு உயரும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.720 என வைத்துக்கொள்ளவும்

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

சுதர்ஸன் கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (SUDARSCHEM)
 
தற்போதைய விலை: ரூ.497.30


வாங்கலாம்


கெமிக்கல்  தயாரிப்பு நிறுவனமான இது,  வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது. பங்கின் விலை பல மாத ஒருங்கிணைப்புக்குப் பிறகு அதிக வால்யூமுடன் ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் அதிக வால்யூமுடன் பிரேக் அவுட்டாகி மேல்நோக்கிச் சென்றது. ஆனால், சமீபத்தில் சந்தை சரிந்ததால், இதன் பங்கு விலையும் கீழ்நோக்கிச் சரிந்திருக்கிறது. ஒருங்கிணைப்பு மண்டலத்தின் உச்ச ஆதரவைப் பெற்று விலை மீண்டும் ஏறக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.  குறுகிய காலத்தில் இந்தப் பங்கின் விலை ரூ.600-ஐ தொடக்கூடும். தற்போதைய விலையில் முதலீடு செய்யலாம். ஸ்டாப்லாஸ் ரூ.485 என வைத்துக்கொள்ளவும். 

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

கிரி இண்டஸ்ட்ரீஸ் (KIRIINDUS)

தற்போதைய விலை: ரூ.461.10

வாங்கலாம் 


கெமிக்கல் இண்டஸ்ட்ரியில் மிகவும்  முக்கியமான தேர்வுகளில் இந்த நிறுவனப் பங்கும் ஒன்றாகும். பங்கின் விலை இறக்கம் சமீபத்தில்  முடிவுக்கு வருவதுபோல் உள்ளது. பங்கு விலை ரூ.400-410-க்கு அருகே சற்று நிலை பெற்று ஏறத் தொடங்கியுள்ளது. தற்போது பாசிட்டிவ் செய்திகள் வருவதாலும்,  கெமிக்கல் பங்குகளின் விலை மீண்டும் உயர்வதாலும்,  இதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கக்கூடும். இறக்கத்திலிருந்து மீண்டு, குறுகிய காலத்தில் ரூ.550  வரை உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய விலையில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் ரூ.415 என வைத்துக் கொள்ளவும். 

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.