நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்!

கம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்!

கம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்!

ன்ன படித்தால் வேலை கிடைக்கும் என்கிற கேள்விக்கு எல்லோரும் விடை தேடுகிற கேள்வி இது. இன்றைய நிலையில், கம்பெனி செகரட்டரி (Company Secretary) என்று சொல்லப் படும் நிறுவனச் செயலர் பற்றிய படிப்பு, படித்து முடித்தவுடன் வேலையைத் தேடிக்கொள்ள வாய்ப்புள்ள படிப்பாக இருக்கிறது.  

கம்பெனி செகரட்டரிஷிப் படிக்கலாம்... கைநிறைய சம்பாதிக்கலாம்!

இன்றைய நிலையில், ஒரு நிறுவனம் பல சட்டங்களின் வரையறைகளை அதிக அளவில் எதிர்கொள்ளவேண்டியிருப்பதால், நிறுவனச் செயலரின் பங்கு மிகவும் முக்கியமானது. மத்திய அரசின் கம்பெனிகள் சட்டம் 2013-ன்படி, ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு நிறுவனச் செயலர் கட்டாயமாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஒரு நிறுவனத்தில் முதன்மையான அதிகாரிகளில் ஒருவராக நிறுவனச் செயலர் இருக்கிறார்.

நிறுவனச் செயலர் படிப்பில் சேர்வது எப்படி?

‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா’ நாடாளுமன்றச் சட்டத்தின்படி நிறுவப்பட்டதாகும். இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. தென்னிந்திய மண்டல அலுவலகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. நிறுவனச் செயலர் படிப்பு அஞ்சல் வழி மூலம் கற்பிக்கப்படுகிறது.

படிப்பின் நிலைகள்

இந்தப் படிப்பு இரண்டு நிலைகளில் கற்றுத் தரப்படுகிறது. 1. அடிப்படை நிலை (Foundation Programme): 4 தாள்கள்

2. நிர்வாக நிலை (Executive Programme): 2 பிரிவுகள் (ஒரு பிரிவிற்கு - 4 தாள்கள் வீதம் இரண்டு பிரிவிற்கு - 8 தாள்கள்)

3. தொழில்முறை நிலை (Professional Programme): ஒரு பிரிவிற்கு 3 தாள்கள் வீதம் மூன்று பிரிவுகளுக்கு - 9 தாள்கள்)

கல்வித்தகுதி

மேல்நிலைப்பள்ளி (+2) தேர்வில் எந்த பாடப் பிரிவிலும் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படை நிலைத் தேர்வு எழுதலாம். +2 நுழைவுச்சீட்டு இருந்தாலே அடிப்படைப் படிப்பில் சேரலாம்.

அடிப்படை நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது கலைப்படிப்பு தவிர  வேறு ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்த வர்கள் நிர்வாக நிலைத் தேர்வில் நேரடியாகச் சேரலாம். மேலும், எந்தப் பட்டப்படிப்பிலும் ஐந்து செமஸ்டர்களில் தேர்ச்சி பெற்று ஆறாவது செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கு நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் நேரடியாக நிர்வாக நிலை யில் சேரலாம்.

பயிற்சிக் காலம்

நிர்வாக நிலைப் படிப்பில் சேர்ந்து பதிவு செய்தவர்கள் 36 மாதங்களும், நிர்வாக நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் 24 மாதங்களும்,  தொழில் முறை நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 12 மாதங்களும் மேலாண்மை பயிற்சி பெறலாம்.

இந்தப் பயிற்சிகளில் மாணவ / மாணவிகள் ஏதேனும் ஒன்றை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம். இந்தப் பயிற்சிக் காலத்தில் மாணவர்களுக்குத் தகுந்த ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

தொழில்முறை நிலை மற்றும் மேலாண்மைப் பயிற்சி முடித்தபிறகு இன்ஸ்டிட்யூட்டில் பதிவு செய்தால், ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா’ பதிவு செய்தால்,  அசோசியேட் கம்பெனி செகரட்டரி கோர்ஸ் (Associate Company Secretary Course) முடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் படிப்பில் சேரு பவர்கள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத முடியும்.

சிறப்பம்சங்கள்

* இந்தப் படிப்பில் ஆண்டு முழுவதும் எந்த நாளில் வேண்டுமானாலும் சேரலாம். இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்பும் இல்லை.தபால்வழி மூலம் இந்தப் படிப்பு கற்றுத் தரப் பட்டாலும், மண்டல மற்றும் இணை  அலுவலகங் களில் நடக்கும் நேர்முக வகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.

* ஓர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜூன் மற்றும் டிசம்பரில்) தேர்வு நடக்கும். மார்ச், 31-க்குள் சேரு பவர்கள் அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதலாம். செப்டம்பர், 30-க்குள் சேருபவர்கள் அடுத்த ஆண்டு ஜூனில் நடைபெறும் அடிப்படை தேர்வு (Foundation Program) எழுதலாம்.

* ஐ.சி.எஸ்.ஐ (ICSI) தேர்வுகள் இந்தியாவில் 200 தேர்வு மையங்களிலும், துபாயில் ஒரு மையத்திலும் நடக்கும். சிறந்த முறையில் தேர்வு பெறுபவர்களுக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் உதவித் தொகைகள் வழங்கப்படும். நிர்வாகம், தொழில் முறைப்பாடத் திட்டங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்ஸ்டிட்யூட் ஆஃப் கம்பெனி செகரட்டரீஸ் ஆஃப் இந்தியா நிறுவனமே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பினை செய்து தருகிறது.

-ஆகாஷ்


படம்: தி.குமரகுருபரன்