Published:Updated:

பணம் பழகலாம்! - 15

பணம் பழகலாம்! - 15
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் பழகலாம்! - 15

சொக்கலிங்கம் பழனியப்பன்

ட்டி கொடுப்பவன் முட்டாள்; வாங்குபவன் புத்திசாலி. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனே கண்டு வியந்த கான்செப்ட்தான் கூட்டுவட்டி. வட்டிக்கு வட்டி வாங்குவதுதான் கூட்டுவட்டி.

கூட்டுவட்டியை உலகத்தின் எட்டாவது அதிசயம் என்றே சொல்லலாம். நீங்கள் உங்கள் நண்பருக்கு 1 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வட்டிவிகிதம் சாதாரண மனிதனின் வழக்கில் ஒரு வட்டி (1%) என்று கணக்கில் எடுப்போம். அதாவது வருடத்துக்கு 12 சதவிகிதம் என வைத்துக்கொள்ளலாம். நீங்கள் அவரிடம் வருடாவருடம் வட்டி தருமாறு சொல்கிறீர்கள் என்றால், ஆண்டுக்கு 12,000 ரூபாயை வட்டியாகத் தந்துவிடுவார். ஐந்து வருடங்கள் கழித்துப் பார்க்கும்போது, நீங்கள் அதுவரை 60,000 ரூபாயை வட்டியாக வாங்கியிருப்பீர்கள். ஐந்து வருட முடிவில் உங்கள் அசலான 1 லட்சம் ரூபாயை அவர் திருப்பிக் கொடுத்திருப்பார். மொத்தத்தில் 1,60,000 ரூபாய் உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

பணம் பழகலாம்! - 15

நீங்கள் அவரிடம் ``எனக்கு வருடாவருடம் வட்டி தர வேண்டாம். ஐந்து வருட முடிவில் அசல் மற்றும் வட்டியைத் திருப்பிக் கொடுங்கள்’’ என்றால், அவர் உங்களுக்கு கொடுக்கவேண்டிய தொகை எவ்வளவு தெரியுமா? 1,76,234 ரூபாய். இப்படி வட்டி வாங்கினால் உங்களுக்கு 16,234 ரூபாய் கூடுதல் லாபம் கிடைக்கும். மேலே சொன்ன கணக்கில் முதலாம் வகையை `சாதாரண வட்டி’ என்று சொல்வோம். இரண்டாவதுதான் `கூட்டுவட்டி’க் கணக்கு.

பணம் பழகலாம்! - 15



கூட்டுவட்டிக் கணக்கு என்பது, முதல் வருட முடிவில் 1 லட்சம் ரூபாய்க்கு 1 லட்சம் ரூபாய் ப்ளஸ் 12 ஆயிரம் ரூபாய் வட்டியுடன் சேர்த்துக் கணக்கிடப்படும். இரண்டாவது வருடத்துக்கு 12 சதவிகிதம் வட்டி 1,12,000 ரூபாய்க்கு கொடுக்கப்படும். அதாவது வட்டி 13,440 ரூபாயாகக் கூடும். இதேபோல் ஒவ்வோர் ஆண்டும் உங்களின் வட்டிக்கு வட்டி கிடைக்கும். ஆக, ஐந்து வருட முடிவில் உங்களுக்கு 1,76,234 ரூபாய் கிடைக்கும். இதுவே நீங்கள் 10 வருடம் காத்திருந்தீர்கள் என்றால், உங்களின் அசலும் வட்டியும் சேர்ந்து 3,10,585 ரூபாயாக ஆகிவிடும். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 30 வருடம் கழித்து நீங்கள் கொடுத்த 1 லட்சம் ரூபாய், அசலும் வட்டியுமாகச் சேர்ந்து 29,95,992 ரூபாயாகிவிடும். ஆக, உங்கள் நண்பர் முட்டாளாகிவிடுவார், நீங்கள் புத்திசாலி ஆகிவிடுவீர்கள்!

பணம் பழகலாம்! - 15

கூட்டுவட்டியின் பலனை அனுபவிக்க, வட்டிவிகிதம் சற்று குறைவு என்றாலும், பி.பி.எஃப் (PPF – Public Provident Fund) போன்ற முதலீடுகள் சிறந்ததாக இருக்கும். நீண்டகாலத்தில், அதிக வட்டியை எதிர்பார்ப்பவர்கள் பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீடாக இருக்கும்.

கூட்டுவட்டியின் பலனை, நீங்கள் அனைத்து நீண்டகால முதலீடுகளிலும் பார்க்கலாம். உதாரணத்துக்கு, நீங்கள் 30 ஆண்டுகள் முன்பு வாங்கிய தங்கமோ அல்லது நிலமோ இன்றைய தினத்தில் பல மடங்கு உயர்ந்து காணப்படும். இது மறைமுகமாகப் பார்த்தால் கூட்டுவட்டியின் பலன்தான்.

தரமான முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ளும்போது, வட்டியை வாங்காமல் கூட்டுவட்டியை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

- வரவு வைப்போம்...