மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

தித்யாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. இண்டிஸ் கேப்பின் புதிய விளையாட்டான டவுன்ஸ்வில்லே அப்போதுதான் வெளியாகியிருந்தது. நீண்ட காலத்துக்குமுன்பு பிரிந்துபோன மகன் வருணும் திரும்பி வந்துவிட்டான். வாழ்க்கை மகிழ்ச்சியாகச்  செல்ல ஆரம்பித்தது. 

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

ஆதித்யா 20 வருடங்களுக்குப்பிறகு  வருணை கோவாவில் சந்தித்தார். அவர் வருணைக் கடைசியாகப் பார்த்தபோது, அவனுக்கு 10 வயது. அவன் குரல்கூட உடைந்திருக்கவில்லை.

ஆதித்யா எப்போதும் தனது வாழ்க்கையை  ரகசியமாகவே வைத்திருந்தார். அவர் மண வாழ்க்கை கொடூரமாக முறிந்திருந்தது.  அதுபற்றி இதுவரை அவர் வாய் திறந்து எதையும் சொன்னதில்லை. இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. சந்தீப்பும், சுவாமியும் அவரைப் பார்க்க வந்தபோது அவரது கடந்த கால வாழ்க்கை பற்றிக் கேட்டனர். ‘`அது ஒரு பெரிய கதை’’ என்று சொல்ல ஆரம்பித்தார்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14



‘`அப்போது எதன்மீதும் பற்றில்லாமல் இருந்தேன். என் குடும்பம், என் மனைவி, என் அதிர்ஷ்டம் என அனைத்திலும்… நான் மிகவும் கடுமையானவனாகவும், கோபக்காரனாகவும் இருந்தேன். வேலைநிமித்தம் மாதத்திற்கு 20 நாள்கள் பயணம் செய்துகொண்டிருந்தேன். பயணத்தை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது எனக்கு நிம்மதி வேண்டியிருந்தது. ஆனால், என் குடும்பத்தினரின் தேவையோ அதற்கு எதிர்மாறாக இருந்தது. நான் இருக்கும்போது என்னைச்  சுற்றி அவர்கள் இருக்கவேண்டுமென்றும், நேரத்தை என்னுடன் மகிழ்ச்சியாகச் செலவு செய்ய வேண்டும் என்றும் நினைத்தனர். இதனால் எதற்கு முன்னுரிமை தருவது என்பது குறித்து எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் எழுந்தது. அதனால் எங்களுக்கிடையே ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. நானும், என் மனைவியும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதைக்கூடத் தவிர்த்தோம்.

அப்போது வருணுக்குப் பத்து வயதிருக்கும். எனக்குக் குடும்பத்தின் மதிப்பு இப்போதுதான் தெரிகிறது, ஆனால், அப்போதெல்லாம் என் வேலையைத்தான் பெரிதாக நினைத்தேன். என் மனைவிமீது நான் காட்டாத அக்கறையை, யாரோ ஒருவர் அவள்மீது காட்டவும் அவள் என்னை விட்டுவிட்டு வருணைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாள்.

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

அது ஒரு விலையுயர்ந்த விவாகரத்து. அமெரிக்காவில் அவளுடைய வக்கீல்கள் என்னிடமிருந்த எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு விட்டார்கள். என் மகனையாவது நான் எனது கண்காணிப்பில் வைத்திருந்திருக்கலாம். அவனை என்னிடத்தில் வைத்திருக்க நான் கேட்டிருந்தால், என்னிடம் மிச்சம் மீதியிருந்ததையும் எடுத்துக் கொண்டு, என்னை `அம்போ’ என விட்டிருப்பாள். எனவேதான், அவன் என்னிடம் இருக்கவேண்டும் என்று கேட்க வில்லை. 

நான் எங்கே செல்கிறேன் என்று எனக்கே தெரியாமலிருந் தது. ஏறக்குறைய நான் `திவால்’ ஆகியிருந்தேன். அப்படிப்பட்ட  நிலையில் அவனுக்குத் தேவை யானதை என்னால் தரமுடியும் என்கிற நம்பிக்கை என்னிடத்தில் இல்லை. எனவே, அவனுடைய நலன் கருதி அவன் அம்மாவிடமே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

இது மிகவும் சிரமமான முடிவு தான். சொல்லப்போனால், என் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான முடிவு அதுவாகத்தான் இருக்கும். இதனால் அவனது தினசரி வாழ்க்கை செளகர்யமாக இருக்கும் என நான் நினைத்தேன். என் மனைவி எனது மகனை அவளது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள விரும்பினாள். அதற்கு அவள் போட்ட ஒரே நிபந்தனை... அவர்களது வாழ்க்கையில் நான் தலையிடக்கூடாது என்பதே. நீதி மன்றமும் அவளுக்கு ஆதரவாகத் தீர்ப்புச் சொன்னது.’’

ஆதித்யா அழ ஆரம்பித்தார். சந்தீப்பும், சுவாமியும் அவரை இந்த நிலையில் எப்போதும் பார்த்ததில்லை.

‘`அவர்களை விட்டுவிட்டேன், அதன்பின் திரும்பிக்கூட பார்க்க வில்லை.’’

அவர் அமைதியாக இருந்தார். அவருடைய கண்கள் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவரால் மேலே நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. ‘`மூன்று ஆண்டு களுக்குமுன்பு அவள் கேன்சர் வந்து இறந்துபோனாள். எனக்குத் தகவல் தெரிவிக்கவேண்டு மென்றுகூட யாருக்கும் தோன்ற வில்லை. வருண் அப்போது ஸ்டான்ஃபோர்டில் இருந்தான். நான் திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்திருந் தால், வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும். நாமெல்லோரும் பொய்யானதொரு இன்பத்தை விரட்டிச் செல்கிறோம். நமது உண்மையான மதிப்பு நமது வங்கிக் கணக்குகளில் இல்லை.’’

‘`உங்கள் உறவுமுறைகளைப் பொறுத்தவரை, நீங்கள் மிகவும் தாராள மாக இருந்திருக்கிறீர்கள். கடந்த காலத்தில் நடந்த தவறுகளைச்  சரிசெய்வதற்காக கடவுள் இப்போது இந்த வாய்ப்பைத் தந்திருக்கலாம்’’ என்றார் சந்தீப்.  

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

ருண் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியபின், அவனை அவருடைய உலகுக்கு அறிமுகப்படுத்த எண்ணி `தாஜ் லேண்ட்ஸ் எண்ட்’ ஹோட்டலில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார் ஆதித்யா. அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களில்  பெரும்பாலானோர் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள். அத்துடன் அவர்களது கேரியர் வளர்ச்சிக்காக இவருக்குக் கடன்பட்டவர்கள்.

ஆதித்யா, வருணை தன்னோடு அழைத்துச் சென்று அனைவரிடமும் அறிமுகப்படுத்தினார். அவருக்கு அது மிகவும் கெளரவமிக்க தருணங்களாக இருந்தன. அவர் அழைத்திருந்தவர்களில் யாரும் அவர் சங்கடப்படும்படியான கேள்விகள் எதையும் கேட்கவில்லை.

அப்போது மாள்விகா தன்னுடன் ஒருவரை அழைத்துக்கொண்டு பேங்க்விட் ஹாலுக்குள் நுழைவதைப் பார்த்தார். அவர் வருணின் முதுகில் தட்டி அவனைக் கதவை நோக்கி இழுத்தார். மாள்விகா அவருடைய தொடர்புகளைப் பயன்படுத்தி வருணை சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்ததற்காக ஆதித்யா அவருக்குத் தனது நன்றியைத் தெரிவிக்க விரும்பினார்.

மாள்விகாவை சந்திக்கத் திரும்பிய வருண், அவரை நோக்கிப் புன்னகைத்தான். அவன் அவருக்கு மனதார நன்றி கூற, அவனை இழுத்து அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டார். சம்பிரதாய விசாரிப்பு களுக்குப்பின், கூட்டத்திலிருந்து மற்றவர்களைச் சந்திப்பதற்காக அவர் சென்றார். மாள்விகாவும், ஆதித்யாவும் அங்கிருந்து சென்றபின்னர், வருண் மாள்விகாவுடன் வந்தவளுடன் பேச ஆரம்பித்தார். 

‘`நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? என்னைத் துரத்துவதில்  இவ்வளவு பிடிவாதமாக ஏன் இருக்கிறாய்?”

‘`உன்னுடைய அப்பாவின் விருந்தினரிடம் இப்படிப் பேசுவது  சரியா? அதுவும் யாருடைய அம்மா உன்னைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தாளோ, அவளிடம்..?’’

‘`சீரியஸாவாகவா..?’’

‘‘நான் எப்போதுமே சீரியஸ்தான். உன்னைத் துரத்துவதில்கூட. இப்ப எனக்கு தெரிஞ்சிருச்சு, நீ என்ன விட்டுட்டு ஓடல; ஆனா ஜெயில்ல இருந்தேன்னு…  எனக்கு போன் பண்ணு’’ என்று சொல்லிக்கொண்டே அவளுடைய நம்பரைக் கொடுத்துவிட்டு, அவளது அம்மாவை நோக்கி ரொம்பவும் `ப்ரிஸ்க்’காக நடந்துசென்றாள்.

நள்ளிரவு தாண்டிய சிறிது நேரத்தில் விருந்து முடிவுக்கு வந்தது. வந்திருந்த விருந்தினர் அனைவரும் சென்றுவிட்டனர். ஆனால், ஆதித்யா கவலையிலிருந்தார். காரணம், சந்தீப் அந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

(பித்தலாட்டம் தொடரும்)

தமிழில்:
சித்தார்த்தன் சுந்தரம்

பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14

அதிகம் உழைக்கும் மும்பை மக்கள்!

லக அளவில் அதிக நேரம் உழைக்கிற மக்கள் எந்த நகரத்தில் இருக்கிறார் கள் என்பதை அறிய சமீபத்தில் ஒரு சர்வே நடத்தப்பட்டது. இதன்படி, உலக அளவில் ஓர் ஆண்டுக்கு அதிகம் உழைக்கக்கூடிய மக்கள் மும்பையில்தான் அதிகம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. மும்பை வாசிகள் ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 3,315 மணி நேரம் உழைக்கிறார்கள். மும்பைக்கு அடுத்தபடி யாக, வியட்நாம் தலைநகர் ஹனோய்யில் ஓர் ஆண்டுக்கு 2,691 மணி நேரம் உழைக்கிறார்கள். டெல்லியில் ஓர் ஆண்டுக்கு 2,511 மணி நேரம் வேலை பார்க்கிறார் கள். சென்னையில் வசிப்ப வர்கள் ஓர் ஆண்டுக்கு எத்தனை மணி நேரம் பார்க்கிறார்களோ..?