மற்ற எபிசோடுகள்
Published:Updated:

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?

வழிகாட்டுகிறார் TiE ஷங்கர்சூப்பர் ஸ்டார்ட்அப்களின் தொழில் ஜாதகம்! - 23

ஸ் டார்ட்அப் நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெறும் போது அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்ப் பார்கள், இன்றைய ஸ்டார்ட்அப் யுகத்தில் ஸ்டார்ட்அப்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பது எப்படி என்பதற்கான வழிகளைச் சொல்கிறார் ஏஞ்சல் முதலீட்டாளரும், சென்னை டை (TiE) அமைப்பின் தலைவருமான ஷங்கர். இனி அவர் நமக்களித்த பேட்டி... 

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?

ஏஞ்சல் முதலீட்டாளர்கள் ஒரு ஸ்டார்ட்அப்பிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன?

“ஏஞ்சல் இன்வெஸ்ட்மென்ட் என்பது முன்பு இருந்ததைவிடவும் தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது. சமீபகாலம் வரை, ஏஞ்சல்  முதலீட்டாளர் ஒருவருக்கு ஒரு ஐடியா பிடித்திருந் தாலே போதும், அதன்மீது நம்பிக்கை வைத்துப் பணம் தந்துவிடுவார். ஆனால், இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமே இல்லை. தற்போதைய சூழ்நிலையில், ஒரு நிறுவனத்தைத் தொடங்கு வதற்கே இரண்டு கோடி  செலவாகும்.  இவ்வளவு பெரிய தொகையை, வெறும் ஐடியாவை மட்டுமே நம்பி ஒருவர் தந்துவிட வேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது. எனவே, ஒருவர் பிசினஸ் தொடங்குகிறார் எனில், அந்த பிசினஸ் சந்தையில் வெற்றியடையும் என்பதை நிரூபிக்க வேண்டும்; ஆரம்பத்தில் சில வாடிக்கையாளர்களையாவது அந்த ஐடியாவின் மூலம் பிசினஸில் ஈர்க்க வேண்டும். அப்போதுதான், இந்த ஐடியா என்றைக்காவது வெற்றியடையும் என  முதலீட் டாளருக்கு நம்பிக்கை ஏற்படும். முதலீடு செய்யவும் துணிவார்.

எனினும், தொடக்கக் காலத்தில் செய்யும் வேலைகளைச் சொந்தப் பணத்தில்தான் செய்ய வேண்டும்; இப்போதைய நிலையில், அதைத்தவிர வேறு வழியில்லை. ப்ரீ சீட் (Pre Seed), சீட் (Seed) என இரண்டிற்குமே எந்தவொரு முதலீட்டாளரும் நம்பிப் பணம் தரமாட்டார். எனவே, சொந்தப் பணத்தையோ அல்லது தெரிந்தவர்களின் பங்களிப்பையோ பெறுவது சிறந்தது.”

ஒரு நிறுவனம் சீட் ஃபண்டிங்கில் இருந்து ஏஞ்சல் முதலீட்டிற்கு எப்போது செல்லலாம்?

“பிசினஸின் ஆரம்பக் கட்டத்தைத் தாண்டும் வரைக்கும் சீட் ஃபண்டையேதான் பயன்படுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக, திருநெல்வேலியில் இருந்து சென்னையில் இருப்பவர் களுக்கு அல்வா வாங்கி தருவதற் காக ஒரு ஆப் டெவலப் செய்ய வேண்டும் என்பதுதான் ஐடியா எனில், ‘சீட்’ ஃபண்டைப் பயன் படுத்தி ஆப்பைத் தயார் செய்து விட வேண்டும். சோதனை முறையில் கடைகள், வாடிக்கை யாளர்கள் சிலரை இணைத்து, அந்த ஐடியாவிற்கு முதலில் உருவம் தரவேண்டும். பின்னர், அதில் நடக்கும் வர்த்தகத்தின் அளவை உயர்த்த வேண்டும். இதெல்லாம் முடிந்தால்தான், அந்த ஐடியா வர்த்தக ரீதியில் செயல்படத்தக்கதா (Minimum       Viable Product (MVP), இல்லையா என்பது தெரியவரும்.

இந்த நிலையிலேயே ஒருவர்    ரூ.25 லட்சம் அளவுக்கு வர்த்தகம் செய்துவிட்டீர்கள் எனில், ஏஞ்சல் முதலீட்டாளர் தைரியமாக முதலீடு செய்வார். இந்த அள வானது ஒவ்வொரு பிசினஸுக்கும் மாறும்.  உதாரணமாக, நிதி சார்ந்த (Fintech) ஸ்டார்ட்அப்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் பிசினஸே பணத்தை அடிப்படை ஆக வைத்துத்தான். எனவே, நிறையப் பணம் தேவைப்படும். அதுபோன்ற சமயங்களில், கொஞ்சம் முன்னதாகவேகூட ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் செல்லலாம். அதற்கு நிறையபேர் தயாராக இருப்பார்கள். பொது வாக, ஒரு ஐடியா, சந்தைக்கேற்ற பிசினஸாக மாறிவிட்டாலே போதும், ஏஞ்சல் முதலீட்டாளரிடம் சென்றுவிடலாம்.’’

முதலீட்டாளரைத் தேர்வுசெய்யும் முன்பு, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனர் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?

“ஒரு முதலீட்டாளர் ஸ்டார்ட் அப்பைத் தேர்வுசெய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இருப்பதுபோல, முதலீட்டாளரைத் தேர்வு செய்வதில் ஸ்டார்ட்அப் நிறுவனரும் கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், முதலீட்டாளர் கிடைப்பதே கடினமாக இருக்கும் சூழலில், இதையெல்லாம் கவனிக்கும் சாத்தியங்கள் குறைவு. 

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?

ஒரு முதலீட்டாளர் என்பவர், எப்போது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கு கிறாரோ, அப்போதிருந்தே அவரும் அந்த நிறுவனத்தில் ஓர் அங்கம் தான். எனவே, நிறுவனத்தின் முக்கியமான முடிவுகளை நிச்சயம் அவரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும்; அவர் செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொள்கிற மாதிரி இருக்கக்கூடாது.

அதேபோல, முதலீட்டாளர், ஸ்டார்ட்அப் நிறுவனரை எந்த இடத்திலும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாறாக, வழிநடத்தலாம்; ஸ்டார்ட்அப் நிறுவனரும் இது என்னுடைய கம்பெனி, என்னுடைய முடிவு என்று கறார் காட்டக்கூடாது. சில சமயங்களில் முதலீட்டாளரின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவும் செய்யவேண்டும். ஒருவேளை, முதலீட்டாளர் சம்பந்தம்பட்ட ஸ்டார்ட்அப் தொடர்பான துறையில் நிபுணத்துவம் பெற்றவர் எனில், மிகவும் உதவியாக இருக்கும். ஒரு முதலீட்டாளரிடம் செல்லும்முன்பு இதையெல்லாம் நன்கு  தெரிந்துகொண்டு செல்லவேண்டும்.”

ஏஞ்சல் நெட்வொர்க்குகளை எளிதில் இனம்கண்டுவிட முடிகிறது. ஆனால், தனி ஏஞ்சல் முதலீட்டாளர்களை எப்படிக் கண்டறிவது?

“ஏஞ்சல் நெட்வொர்க்குகளில் இருப்பவர்களைவிட, தனி ஏஞ்சல் முதலீட்டாளர்கள் தனித்துவமானவர்கள். உதாரணமாக, ஒருவர் பேங்கிங் துறையில் 20 வருடம் பணிபுரிந்தவர் எனில், அந்தத் துறையில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக இருப்பார். எனவே, பேங்கிங் தொடர்பான ஸ்டார்ட்அப்களில் மட்டும் முதலீடு செய்யத் தயாராக இருப்பார். இதுபோன்ற முதலீட்டாளர்கள் கிடைப்பது ஒரு நிறுவனத்திற்கு மிகவும் நல்லது; காரணம், முதலீடு மட்டுமின்றி, வழிகாட்டுதலும் கிடைக்கும் அல்லவா? ஆனால், இவர்களைக் கண்டறிவது கொஞ்சம் கடினம்தான்.’’

சமீப காலமாக ஏஞ்சல் முதலீட்டாளர்கள் சென்னையில் அதிகரித்துவருகின்றனர். இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்?

“2011-க்குப் பின்புதான் ஏஞ்சல் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் ஒரு காரணம். மேலும், 2011-ல் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யத் தொடங்கியவர்கள் அனைவரும் கடந்த இரு ஆண்டுகளாக லாபம் அடையத் தொடங்கினர். இது அவர்களுக்கு உந்துதலையும், புதிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தவே, தொடர்ந்து ஏஞ்சல் முதலீட்டில் முதலீடு செய்கிறார்கள்.”

இன்றைக்குப் பெரும்பாலான ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சி ஏஞ்சல் முதலீட்டைப் பெறுவதோடு நின்றுவிடுகின்றன. அவற்றால் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல முடிவதில்லை. ஏன்? 

“ஒரு ஸ்டார்ட்அப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனில், அதற்கு மூர்க்கத்தனமான உழைப்பும், திறமையும் வேண்டும். ஐடியாவைத் தாண்டி, ஒரு பிசினஸுக்கு இது மிகவும் முக்கியம். ஆனால், இந்த இடத்தில்தான் இன்றைய சி.இ.ஓ-க்கள் சறுக்கிவிடுகிறார்கள். எனவே, அடுத்த கட்டத்திற்குத் தேவையான முதலீட்டைத் திரட்டுவதிலும் சிக்கல் ஏற்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில் இரண்டே வழிதான். ஒன்று, அந்த நிறுவனம் அதே அளவில் அப்படியே இருக்கும். இரண்டாவது, சந்தையில் நிலைக்க முடியாமல் தோல்வியடைந்துவிடும். இந்த இரண்டு காரணங் களால்தான் ஸ்டார்ட்அப்கள் சறுக்கிவிடுகின்றன.”ஸ்டார்ட் அப் நிறுவனங்களைத் தொடங்கி, ஏஞ்சல் முதலீட்டாளர் களிடமிருந்து முதலீட்டைப் பெற நினைப்பவர்கள் ஷங்கர் சொல்வதைக் கவனிப்பது அவசியம்!

ஞா.சுதாகர், படங்கள்: தே.அசோக் குமார்

டெக்ஜாம்பவான்கள்! - #LetStartup - ஏஞ்சல் ஃபண்டிங்... முதலீட்டை எப்படிப் பெறுவது?

ட்விட்டரில் கலக்கும் எலான் மஸ்க்!

டெ
ஸ்லா நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் தனது எண்ணத்தை அடிக்கடி ட்விட்டரில் போட்டு பர பரப்பை ஏற்படுத்தி வரு கிறார். முன்பெல்லாம் தனக்கு முக்கியமானதாகப் படும் விஷயங்களை மட் டுமே ட்விட்டரில் ட்விட் செய்துவந்தார் எலான். ஆனால், தற்போது அப் படிச் செய்வதை விட்டு, தனது எண்ணத்தை ஒளிவு மறைவு இல்லாமல் அடிக் கடி வெளிப்படுத்தி வரு கிறார். கடந்த இரண்டு மாதத்தில் ஏறக்குறைய 400 முறை ட்விட்டர் மூலம் தனது கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் எலான். இதன்மூலம் ஒரு மாதத்துக்கு 84 ட்விட்டர் மெசேஜ் என்பது அதிக ரித்து, இப்போது அது 88-ஆக இருக்கிறது. கலக்குங்க எலான்!