நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்
பிரீமியம் ஸ்டோரி
News
கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி

சென்ற வாரம் கரடிகள், காளைகள் என எல்லோரும் பணம் பண்ணும் வாய்ப்புகளைத் தந்தது தங்கம். தொடர்ந்து பக்கவாட்டில் நகர்ந்து இருந்துவந்த தங்கம், கீழ்எல்லையைப் பலமாக உடைத்து இறங்கியது.  அந்தப் பலமான இறக்கத் திற்குப் பிறகு, தொடர்ந்து இறங்கலாம் என்ற சூழலில் ஒரு புல்பேக் ரேலியில் இருப்பதாகப் பார்க்கிறோம்.

சென்ற வாரம் சொன்னது… “நல்ல இறக்கத்தில் உள்ள தங்கத்திற்கு 30800 என்பது அடுத்த முக்கிய ஆதரவு. மேலே 31180 என்பது உடனடித் தடைநிலை ஆகும்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தங்கம், நாம் கொடுத்திருந்த முக்கிய ஆதரவான 30800-யை  உடைத்து பலமாக இறங்கியது.  இந்த இறக்கம் குறைந்தபட்ச புள்ளியான 30458-யைத்  தொட்டது. அதன்பின், தங்கம் மேல்நோக்கி திரும்பியது.  பொதுவாக, டெக்னிக்கல் அனாலி சிஸ்படி, ஆதரவுநிலை உடைக்கப்பட்டால், கீழே விலை இறங்கியபிறகு, அந்த ஆதரவே பலமான தடைநிலையாக மாற வாயப்புண்டு. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்


 
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், தங்கம் 30800 உடைத்து இறங்கியபின்பு, மேல்நோக்கி ஏற ஆரம்பித்தபோது, அதே 30800 என்ற எல்லையில் வலிமையாகத் தடுக்கப்பட்டது.  சென்ற வாரம் புதன்கிழமை வரை 30800 என்ற எல்லையைத் தாண்டி ஏறமுயன்று மீண்டும் மீண்டும் கீழே இறங்கி முடிந்தது. ஆனால், வியாழனன்று மிகவும் பலமாகக் காளைகள் களத்தில் இறங்கி 30800 என்ற எல்லையை உடைத்து, தங்கத்தை 31075 என்ற எல்லையைத் தொட வைத்தன. 

இப்போது நாம் ஏற்கெனவே கொடுத்திருந்த 31180 என்ற தடைநிலையை நோக்கித் தங்கம் நகர்ந்துகொண்டிருக்கிறது.  இந்த முறை காளைகள், 31180 என்ற எல்லையை உடைப்பார்களா என்பது கேள்விக்குறியே.

இனி என்ன நடக்கலாம்? தங்கத்தின் தற்போதைய ஏற்றத்தை ஒரு புல்பேக் ரேலி என்றே அழைக்கலாம். எனவே, உடனடித் தடைநிலையான 30180-யை உடைக்கச் சிரமப்படலாம்; அதையும் தாண்டினால், 31500 என்பது மிக வலிமையான தடைநிலை ஆகும். தற்போது ஆதரவு நிலை அதே 30800 ஆகும். 

வெள்ளி மினி


சென்ற இதழில் சொன்னது... ‘‘தற்போது முக்கிய ஆதரவான    39700-யும் உடைத்த நிலையில் பலமான இறக்கம் வரலாம்.  உடனடி ஆதரவு 39250.  வலிமையான தடைநிலை 40150 ஆகும்.’’

வெள்ளி, நாம் கொடுத் திருந்த ஆதரவு நிலையான 39250 என்ற எல்லையைச் சென்ற வாரம் தக்க வைத்துக்கொண்டது. இந்த ஆதரவை எடுத்துக்கொண்டு ஒரு பலமான ஏற்றத்திற்கு வழிவகுத்தது. சென்ற வாரம் திங்களன்று சற்றே பக்கவாட்டு நகர்வில் இருந்து ஒரு டோஜியை உருவாக்கியது.  அதன்பின் செவ்வாய், புதனன்று மெள்ள மெள்ள ஏற ஆரம்பித்தது. வியாழனன்று நாம் கொடுத்திருந்த  தடை நிலையான 40150-யை உடைத்து உச்சமாக 40733-யைத் தொட்டது. 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

இது மிகவும் பலமான ஏற்றம் ஆகும்.  வியாழனன்று பலமாக ஏறினாலும், முடியும்போது சற்றே இறங்கி 40485-ல் முடிவடைந்துள்ளது. வெள்ளியன்று பக்கவாட்டில் நகர்ந்துள்ளது.

இனி என்ன நடக்கலாம்? நாம் முன்பு கொடுத்த தடைநிலையான 40150 என்பது இப்போது ஆதரவுநிலையாக மாறி வருகிறது.  மேலே 41000 என்ற எல்லை எட்டு மாதத்தின் தடைநிலை ஆகும். இதைத் தாண்ட காளைகளுக்கு அதிக வலிமை வேண்டும்.

கச்சா எண்ணெய் மினி

சென்ற வாரம் சொன்னது… ‘‘கச்சா எண்ணெய் பக்கவாட்டு நகர்வில் உள்ள நிலையில் 4440 என்ற எல்லை முக்கிய ஆதரவு ஆகும். மேலே முந்தைய ஆதரவான 4600 தடைநிலையாக மாறலாம்.’’ 

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய், எந்த அளவிற்கு பலமாக ஏறியதோ, அந்த அளவிற்கு பலமாகவும் இறங்கிக்கொண்டு இருந்ததைப் பார்க்கிறோம். சென்ற வாரம் நாம் கொடுத்திருந்த ஆதரவான 4440-யை உடைத்து பலமாக இறங்கியது.

திங்கள், செவ்வாய், புதன் என்று மூன்று நாள்களும் படிப்படியாக இறங்கி 4306 வரை இறங்கியது. அதன்பின் வியாழனன்று நல்ல ஏற்றம் கண்டாலும், நாம் கொடுத்திருந்த தடைநிலையான 4440-யைத் தொட்டு அதன் அருகில் முடிந்துள்ளது. வெள்ளியன்று அதன் அருகிலேயே வியாபாரம் ஆகிவருகிறது.

கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

அக்ரி கமாடிட்டியைப் படிக்க: https://bit.ly/2kZe4uE