
எஸ்.எம்.எஸ் மோசடிகள் உஷார்!
ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கு இந்தியா மாறிவரும் சூழலில், வித விதமான மோசடியாளர்களும்

உருவாகி வருகிறார்கள்.
தற்போது எஸ்.எம்.எஸ் மூலம் புது விதமான மோசடிகள் ஆரம்பித்திருக் கின்றன. குறிப்பாக, பொதுத் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களை இலக்காக வைத்து, இந்த மோசடி நடைபெறுகிறது. ‘‘உங்களுடைய டெபிட் கார்டை எங்களுடைய இணையதளத்தில் பதிவு செய்யவில்லை; உடனே அப்டேட் செய்ய இந்த இணையதள முகவரியைக் கிளிக் செய்யவும்’' என்று முதலில் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். அதுவும் பொதுத் துறை வங்கிகளின் பெயருடன் வருவதுபோலக் காட்டுவதால், பலரும் சந்தேகப்படாமல் கிளிக் செய்துவிடு கிறார்கள்.

அவர்கள் தந்துள்ள இணைப்பை கிளிக் செய்ததும் டெபிட் கார்டுக்கான விண்ணப்பப் பக்கம் திறக்கிறது. அதில் கார்டு எண், சி.சி.வி எண், பிறந்த தேதி போன்றவை கேட்கப்படுகின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் வாங்கிய சில நிமிடங்களில் நமது வங்கிக் கணக்கி லிருந்து பணத்தை எடுத்துவிடுகிறார்கள்.
இதேபோல, இன்னொரு மோசடியும் பரவலாக நடந்துவருகிறது. ‘‘உங்களுக்கு உரிய வருமான வரி ரீஃபண்ட் பணம் இவ்வளவு வந்திருக்கிறது. இங்கே தரப்பட்டுள்ள வங்கி எண் உங்களுடையது தானா என்று சரிபாருங்கள். தவறாக இருந்தால், இந்த லிங்க்கினை கிளிக் செய்யுங்கள்'' என்கிறார்கள்.
லிங்கில் அவர்கள் தந்துள்ள வங்கி எண் தவறாகவே இருக்கும். உடனே நமது வங்கிக் கணக்கின் சரியான எண்ணை நாம் தருவோம். வங்கிக் கணக்கு தொடர் பான விவரங்களை நாம் தந்தவுடன், நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடிவிடுவார்கள்.
நமது வங்கிக் கணக்ந்த் தொடர்பான விவரங்களை யாருக்கும் அளிக்கத் தேவையில்லை என்பதைத் தெளிவாகத் செயல்பட்டால் மட்டுமே, இத்தகைய மோசடிகளிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்!
- தெ.சு.கவுதமன்