மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9


பெரும்பாலான சமயங்களில் இன்டெர்வியூவில் தோற்பதற்குக் காரணம் நம் தயாரிப்பின்மைதான். இன்டெர்வியூவில் வெற்றியடைய சமயோசிதம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தயாரிப்பும் அவசியம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

ங்கள் இன்டெர்வியூ முடிவை பாதிப்பதில் 'ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழி நூற்றுக்கு நூறு நிஜம். சரியோ, தவறோ நிறைய சமயங்களில் நாம் அணிந்திருக்கிற உடை, ஹேர் ஸ்டைல் போன்றவைதான் இன்டெர்வியூ நடத்துபவர் நம் மீது வைக்கப் போகும் முதல் அபிப்ராயத்தைத் தீர்மானிக்கிற விஷயங்களாக இருக்கிறது. எனவே, இன்டெர்வியூக்குப் போகும்போது நம் வெளித்தோற்றம், நடை உடை போன்றவற்றிலும் அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்டெர்வியூக்கு எப்போதும் ஃபார்மல் உடைகளையே அணியுங்கள். வெளிர்நிற அல்லது மெல்லிய கோடிட்ட முழுக்கைச் சட்டையும், டார்க் நிற கால் சட்டையும் அணிவதே ஆண்களின் பொதுவான ஃபார்மல் டிரஸ் கோட். சட்டை நிறத்தோடு கான்ட்ராஸ்ட் ஆன நிறத்தில் டை இருந்தால் அணியலாம். இடுப்பு பெல்ட்டின் நிறமும் ஃபார்மல் ஷூவின் நிறமும் நன்றாக இருப்பது அவசியம்.

##~##
இன்டெர்வியூ செல்லும்போது ஆண்கள் பிரேஸ்லெட், செயின் போன்ற அணிகலன்களை தவிர்க்கவும். சவரம் செய்யப்பட்ட முகமும், படிய வாரிய சிகையும், உங்களுக்கு 'நல்ல பையன்’ இமேஜைத் தரும்.

பெண்கள் மேற்கத்திய ஃபார்மல் உடைகளையோ, காட்டன் புடவை, சுடிதாரையோ  அணியலாம். நீளமாகத் தொங்கும் காதணி, கண்ணைப் பறிக்கும் பளபள நகைகள், உடை அலங்காரங்களைத் தவிர்க்கவும்.

இருபாலினரும் மூக்கை துளைக்காத மென்மையான ஃபர்பியூம் உபயோகிப்பது நல்லது. இந்த சின்னச் சின்ன விஷயங்களில் தவறுவது பெரிய பாதிப்பைத் தரலாம்.

சரி, இதில் எல்லாம் சரியாக இருந்து விட்டால் வேலை கிடைத்துவிடுமா? கிடைக்காது. வேலைக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, மேலும் சில தயாரிப்புகள் தேவை.

இன்டெர்வியூக்கு முன், கடந்த மாதத்தில் நடந்த முக்கியமான உலக பொருளாதார, விளையாட்டு, அரசியல், இலக்கிய நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் துறைச் சார்ந்த விஷயங்களில் தயார் செய்யும்போது புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். மிக முக்கியமாக நீங்கள் அப்ளை செய்திருக்கும் வேலை மற்றும் நிறுவனம் பற்றிய தகவல்களையும் செய்திகளையும் அறிந்து கொள்ளுங்கள்.

இன்டெர்வியூக்குப் போகும்போது கண்டிப்பாக உங்கள் ரெஸ்யூம், இன்டெர்வியூ கால்லெட்டர், சான்றிதழ்கள், வெற்றுத்தாள்கள், நோட்புக், பேனா போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.

ஒருசில பொதுவான கேள்விகளுக்கு எப்படி தயார் செய்வது என்பதைப் பார்ப்போம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மேலாளர் பணிக்காக ஆட்களை தேர்வு செய்ய இருக்கின்றனர். ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் 'டிரெயினி இன்ஜினீயரிங் கேடெட்’ எனும் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். பி.இ., பி.டெக்., பி.எஸ். (மரைன் இன்ஜினீயரிங்) முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 1.4.2012-ல் 28 வயதுக்குள்ளே உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி பிப்ரவரி 2, 2012.

1. உங்களைப் பற்றி சொல்லுங்கள்:

உங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகம் தந்தால் போதும். உங்கள் கல்விப் பின்னணி, உங்கள் நற்குணங்கள், சாதனைகள் போன்றவற்றை இரண்டு, மூன்று வரிகளுக்கு மிகாமல் சொல்லவும். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை தவிர்க்கவும். சில சமயம் உங்கள் சுய அறிமுகத்தில் இருந்து மேலும் கேள்விகள் கேட்கப்படலாம். அதற்கும் தயாராக இருங்கள்.

2. உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்..? அடுத்த ஐந்து வருடத்தில் உங்கள் லட்சியம்?  

உங்களுக்குத் தெளிவும் திட்டமிடும் குணமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்த கேள்வி. அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் அடைய விரும்பும் பதவி, கற்றுக் கொள்ள விரும்பும் புதிய திறன்கள், வாழ்க்கையிலும் வேலையிலும் நீங்கள் சாதிக்க விரும்பும் குறிக்கோள்களைப் பற்றி சுருக்கமாக எடுத்துச் சொல்லுங்கள்.  இந்த லட்சியங்கள் உயர்வானதாகவும், அதேசமயம் அடையக் கூடியதாகவும் இருப்பது அவசியம்.

3. உங்கள் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?

வேலைக்கு அவசியமான திறன்கள் உங்கள் பலமாக அமையலாம். பலவீனங்கள்  உங்கள் வேலை வாய்ப்பை தடுக்கக் கூடாது. பாசிட்டிவ்வான விஷயங்களையே உங்கள் பலவீனம் போல குறிப்பிடலாம். உதாரணத்திற்கு, நான் ஒரு பெர்பக்ஷனிஸ்ட் என்று சொல்லுங்கள். கற்பனையான பதிலை தவிர்த்து விடுவது நல்லது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

4. இந்த வேலைக்கு நீங்கள் எப்படி பொருந்துவீர்கள்?

உங்கள் தனித்திறன்களும், கல்விப் பின்புலத்தையும், முன்அனுபவத்தையும் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் முந்தைய சாதனைகளுக்கு காரணமாக இருந்த விடாமுயற்சி, அறிவுத்திறன், கடின உழைப்பு போன்றவை உங்கள் புதிய வேலையிலும் பிரதிபலிக்கும் என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.

5. பழைய வேலையைவிட்டு விலகிய காரணம் என்ன?

ஒருபோதும் சம்பளத்தையோ, தனிப்பட்ட மனிதர்களையோ குற்றம் சாட்டாதீர்கள். வளர்வதற்கான வாய்ப்பில்லை; உங்கள் திறன்களை முழுமையாக பயன்படுத்த இயலாமை போன்றவற்றைக் காரணங்களாக கூறலாம்.

6. நீங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் என்ன?

இதுபோன்ற வேலைக்கும் பதவிக்கும் நல்ல நிறுவனங்கள் தரும் சம்பளம் என்ன என்பதை முன்பே தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் தொகையைவிட  சற்று அதிகமாகவே கேட்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் இந்த இன்டெர்வியூ ஒரு வாழ்வா, சாவா சூழ்நிலை என்பதைப் போல காட்டிக்கொள்ள வேண்டாம்.

(தயாராவோம்)
படம்: ச.இரா.ஸ்ரீதர்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

''இன்றைய தேதியில் பலருக்கும் நிதி நிர்வாகம் குறித்து பல சந்தேகங்கள். சரியான நிதி நிர்வாக ஆலோசனை சொல்கிறவர்களுக்கு இப்போது ஏகப்பட்ட டிமாண்ட். டாக்டரை போல தேடிவந்து, பணத்தைக் கொடுத்து ஆலோசனை வாங்கி செல்கிறவர்கள் பலர். சி.எஃப்.பி. என சுருக்கமாகச் சொல்லப்படும் இந்த படிப்பு அமெரிக்காவில் 1972-ல் அறிமுகமானது. இந்தியாவில் 2002-ல் கொண்டு வந்தார்கள். இந்த படிப்பை 23 நாடுகள் அங்கீகரித்துள்ளன.

ஃபைனான்ஷியல் பிளானிங் ஸ்டாண்டர்டு போர்டு (எஃப்.பி.எஸ்.பி.) எனும் இன்ஸ்டிடியூட்தான் இப்படிப்பை நடத்துகிறது. இந்த இன்ஸ்டிடியூட் மூலம் படித்து சி.எஃப்.பி. ஆகிறவர்கள் இந்த படிப்பை அங்கீகரித்துள்ள நாடுகளிலும் ஃபைனான்ஷியல் பிளானிங் செய்து கொடுக்கலாம். எஃப்.பி.எஸ்.பி. இன்ஸ்டிடியூட்டில் விண்ணப்பித்து பதிவு செய்து கொண்டபின் ஒரு ஆண்டுக்குள் இந்த தேர்வை எழுத வேண்டும். இந்த படிப்பிற்கான தேர்வை நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்

தினமும் நடத்துகிறது. இன்ஷூரன்ஸ், ஓய்வுகாலத் திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட், தனிநபர் வரி போன்ற பாடங்கள் இதில் இடம் பெறும்.

வேலைவாய்ப்பு?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9

தற்போது இந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது. இதனால் தங்கள் வாழ்க்கையின் ஃபைனான்ஸ் குறிக்கோள்களை அடைய சி.எஃப்.பி.-யை நாடுகின்றனர். தவிர, ஃபைனான்ஸ் பிளானிங் செய்து தருபவர்கள் தங்களது ஆலோசனைக்கு கட்டணம் வாங்கலாம் என செபி சொல்லி யிருக்கிறது. இதனால், இத்துறைக்கான வாய்ப்புகள் வருங்காலத்தில் அதிகமாக இருக்கிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை சி.எஃப்.பி. படிக்க சொல்கின்றன. பதவி உயர்வு, இன்கிரிமென்ட் போன்ற விஷயங்களில் இந்த படிப்பை முடித்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டிலும் இந்த படிப்பை கொண்டு பிஸினஸ் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.''

-பானுமதி அருணாசலம்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்! - 9