மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

உங்களுக்கு நல்ல கல்லூரியில் மேலாண்மை மேற்படிப்பு (MBA) படிக்க விருப்பமா? அல்லது மேலாண்மை சார்ந்த வேலையில் சேர வேண்டுமா? உங்கள் பதில் 'ஆம்’ எனில் உங்களுக்கு குழுக் கலந்தாய்வு (Group Discusion) பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

னெனில், பெரும்பாலான நல்ல கல்லூரிகளில் எம்.பி.ஏ. மாணவர்களைத் தேர்வு செய்யவும், நிறுவனங்களில் மேனேஜர்களைத் தேர்ந்தெடுக் கவும் குழுக் கலந்தாய்வுமுறை பயன்படுத்தப்படுகிறது.

இம்முறையில் தேர்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப் பதாரர்கள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிக்கப்படுவார் கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைப்பு (Topic) அல்லது பிரச்னைச் சூழல் (Problem Scenario) தரப்படும். குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் குழுவில் விவாதித்து ஒரு பொதுவான முடிவு கொண்டுவர வேண்டும். இதுவே இம்முறையின் சாரம்.

சில சமயம் குழுக் கலந்தாய்வு இன்டெர்வியூவுக்கு ஆட்களை வடிகட்டி தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படலாம். அந்தச் சூழலில் இதில் சிறப்பாக செயல்படுவது மிகவும் அவசியம். பெரும்பாலும் குழுவின் அளவு 5 முதல் 15 நபர்கள் வரை இருக்கலாம். குழுவில் உள்ள நபர்களின் எண்ணிக்கை அதிகமானால் தனிப்பட்ட உறுப்பினர்களுக்குப் பங்களிக்க கிடைக்கும் வாய்ப்பு குறையும். அதனால் குழுவுக்குள் போட்டியும் கூச்சலும் அதிகமாகும்.

##~##
குழுவில் உள்ள அனைவரும் ஒரே பதவிக்குப் போட்டியிடுவதால் குழு மனப்பான்மையைவிட போட்டி மனப்பான்மையே எல்லோரிடமும் மேலோங்கியிருக்கும். ஆனால், இந்த போட்டி மனப்பான்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் குழு மனப்பான்மையுடன் பங்கு பெறுவதே இதில் வெற்றியடைய உதவும் ரகசியம். ஏனெனில், இது விவாத மேடையோ, பட்டிமன்றமோ அல்ல. இது குழுவாக ஒரு பிரச்னையை அணுகி தீர்வு காணும் முறை. எனவே, குழுவோடு இணைந்து அர்த்தம் உள்ள பங்களிப்பைத் தருவது அவசியம்.

இந்த முறையைப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கம், ஒரு குழுவில் நீங்கள் எப்படி ஒரு கருத்தை முன்வைக்கிறீர்கள், மாற்றுக் கருத்தோ அல்லது எதிர்க்கருத்தோ வரும்போது அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வதற்காகவே.

பொதுவாக சமூகம், பொது அறிவு தொடர்பான தலைப்புகள் தரப்படும். சில சமயம் பிஸினஸ் சார்ந்த பிரச்னைகளும் விவாதப் பொருளாகத் தரப்படலாம். எனவே, இத்தலைப்புகளில் உங்கள் புரிதலை அதிகரித்துக் கொள்ள பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள், கருத்தாய்வுகளைத் தொடர்ந்து படிப்பது அவசியம்.

பெரும்பாலும் விவாதம் தொடங்க 5-10 நிமிடங்கள் முன்பே தலைப்பு தரப்படும். இந்த இடைப்பட்ட நேரத்தில் உங்கள் கருத்துக்களை கோர்வையாகவும் தெளிவாகவும் எழுதி வைத்துக் கொள்ளலாம். தலைப்பை பன்னோக்கு பார்வையுடன் அணுகினால், அது உங்கள் விவாதத்தின் செறிவை அதிகரிக்கும்.

பொதுவாக குழுக் கலந்தாய்வு செய்ய 15-20 நிமிடங்கள் தரப்படும். விவாதத்தின் போது உங்கள் நடத்தை, பங்களிப்பு போன்றவற்றை தேர்வாளர்கள் வெளியிலிருந்து மதிப்பிடுவார்கள். இந்த மதிப்பீட்டில் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் குணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. குழுவோடு இணைந்து செயல்படும் பண்பு

2. பேச்சுத்திறன்

3. ஒரு பிரச்னையை பல நோக்கில் இருந்து ஆராயும் திறன்.

4. பொது அறிவு

5. சிந்தனைத்திறன் (Logical thinking)

6. தலைமைப் பண்பு

7. தன்னம்பிக்கை

8. முனைப்பு (Intiative)

9. பிறர்கருத்தைப் பொறுமையுடன் கேட்கும் பண்பு.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


குழுக் கலந்தாய்வில் நீங்கள் வெற்றி பெற சில டிப்ஸ்:

• தலைப்பு தொடர்பாக உங்களுக்குக் குழப்பமோ, கேள்வியோ இருந்தால் அவற்றைத் தேர்வாளர்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.

• முடிந்தவரை முதல் நபராக விவாதத்தைத் தொடங்குங்கள். இது உங்கள் முனைப்பையும், தலைமைப் பண்பையும் பிரதிபலிக்கும்.

• முதல் நபராகப் பேசமுடியாதபட்சத்தில் பதற்றம் வேண்டாம். பின்பு கிடைக்கும் வாய்ப்புகளில் செறிவான கருத்துக்களை முன்வையுங்கள்.

• முடிந்தவரை விவாதத்தை வழி நடத்த முயற்சி செய்யுங்கள். பிறர் கருத்தை வழி மொழிவது, விவாதத்தில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை இணைத்து புதிய பரிமாணம் தருவது, விவாதத்தின் போக்கை ஆக்கப்பூர்வமான திசையில் செலுத்துவது போன்றவை சிறந்த தலைமைப்பண்புகள் ஆகும்.

• பிறரது கருத்துக்கள் அர்த்தமற்றவையாக இருந்தால்கூட அதை நாசூக்காக மறுத்து பேசுங்கள்.

• விவாதத்தில் பிறர் உங்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டால் கோபமோ, எரிச்சலோ பட வேண்டாம். அதே சமயம் உங்கள் நிலைப்பாட்டை தன்னம்பிக்கையோடு முன்னிறுத்துங்கள்.

• வாய்ப்பு உங்களைத் தேடிவரும் என்று எதிர்பார்த்து மௌனமாக இல்லாமல், பேச வாய்ப்புகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே தன் முனைப்பாகக் கருதப்படும். அதேசமயம், பிறர் பேசும்போது குறிக்கிட்டு அவர்கள் வாய்ப்பை பறிக்க வேண்டாம்.

• பேச வேண்டும் என்பதற்காக ஏனோ தானோ என்று கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம். நீங்கள் எழுதி வைத்துள்ள செறிவான கருத்துக்களை சுருக்கமாகத் தெரிவியுங்கள்.

• புள்ளிவிவரங்கள், செய்திச் சான்றுகளோடு கருத்துக்களை தெரிவிப்பது உங்கள் பொது அறிவை பிரதிபலிக்கும். இது உங்கள் கருத்தை வாக்குவாதத்தின் போது நிலைநிறுத்தவும், பிறர் உங்கள் கருத்தை ஏற்கெனவே சொல்லிவிட்டால் சமாளிக்கவும் உதவும்.

• குழுவில் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தால் தலைமைப் பண்புடன் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களை நட்போடு கட்டுப்படுத்துங்கள். பேச வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பளிக்க குழுவில் பரிந்துரை கொண்டு வர உதவுங்கள்.

இவை உங்கள் தலைமைப் பண்பை பிரதிபலிக்கும்.

• உங்கள் பேச்சுத்தொனி, உடல் மொழி போன்றவை இயல்பாகவும் அதே சமயம் உங்கள் தன்னம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கட்டும். பேசும் போது தேர்வாளர்களைப் பார்க்காமல் குழுவை பார்த்து பேசுங்கள்.

• சமூக பிரச்னையோடு பெண்கள், சிறுபான்மையினர், மாற்று திறனாளிகள் போன்றவர்களுக்கு மதிப்பளித்து நடுநிலை யோடு கருத்துக்களை தெரிவியுங்கள்.

• உங்கள் நண்பர்களோடும் வகுப்பு தோழர்களோடும் மாக் (Mock) குழுக் கலந்தாய்வில் பங்கு பெறுவது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


சமூக சேவை தொடர்பான படிப்புகள்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''சமூக சேவை என்பது யார் வேண்டு மானாலும் செய்யலாம். ஆனால், அதையும் நேர்த்தியாகச் செய்வது எப்படி என்பதைக் கற்றுத் தருகின்றன சமூக சேவை தொடர்பான படிப்புகள். ஒரு இயற்கை பேரிடர் நடக்கும்போது அந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் ஏற்படும், அவர்களுக்கு எந்த வகையில் எல்லாம் உதவ வேண்டும் போன்ற ஒவ்வொரு விஷயங்களும் இந்த படிப்புகள் மூலம் கற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள்.

1952-ம் வருடம் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க் தென் இந்தியாவில் சமூக சேவை தொடர்பான படிப்புகளுக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி. இங்கு இருக்கும் அனைத்துப் படிப்புகளும் முதுகலைப் படிப்புகள். மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் (எம்.எஸ்.டபிஸ்யூ.), எம்.எஸ்.சி. கவுன்சிலிங் சைக்காலஜி, எம்.ஏ. மனிதவள மேம்பாடு, எம்.ஏ. என்.ஜி.ஓ. மேனேஜ்மென்ட், எம்.ஏ. ஹியூமன் ரிசோர்ஸ் அண்ட் ஆர்கனைசேஷன் டெவலப்மென்ட் போன்ற படிப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சென்னை பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டவை.

இந்த படிப்புகளைப் பொறுத்தவரை, தியரி வகுப்புகளைவிட களப்பணிதான் அதிகமாக இருக்கும். அதாவது, வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தான் வகுப்பறையில் பாடம் நடத்துவார்கள். மற்ற நாட்களில் களப்பணிக்குச் சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். வார இறுதியில் அவர்கள் மேற்கொண்ட களப்பணியின் ரிப்போர்ட்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எந்த வகையான டிகிரி முடித்தவர்களும் இந்த படிப்பில் சேரலாம். நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத் தேர்வில் வாங்கும் மதிப்பெண் மற்றும் டிகிரியில் வாங்கிய சதவிகிதம் ஆகியவற்றைக் கணக்கிட்டு மெரிட்டில் மதிப்பெண் வாங்குகிறவர்களுக்கு அட்மிஷன் கிடைக்கும்.

வேலை வாய்ப்பு எப்படி?

தற்போது சமூக சேவை என்பது புரொஃபஷனல் படிப்பாக அங்கீகரிக்கப் படுவதால் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. மருத்துவ மனோதத்துவம், தொழிற்சாலை மனோதத்துவம், குடும்ப நல நீதிமன்றங்கள், சமூக விழிப்புணர்வு, சுகாதாரத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் துறை, சி.எம்.டி.ஏ., என்.ஜி.ஓ. அமைப்புகள் போன்றவற்றில் இப்போது வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. கேம்பஸ் இன்டெர்வியூ மூலம் மாணவர் களைத் தேர்வு செய்கின்றனர். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் சமூக சேவை தொடர்பான படிப்புக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன.''

-பானுமதி அருணாசலம்
படங்கள் : வி.செந்தில்குமார்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!