மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

வேலை ரெடி, நீங்க ரெடியா?

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

நல்ல வாழ்க்கைத் துணை மட்டுமல்ல, நல்ல மேலதிகாரி அமைவதும்கூட இறைவன் கொடுத்த வரம்தான். குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞர்களுக்கு நல்ல மேலதிகாரி அமைந்துவிட்டால் அதைவிட நல்ல விஷயம் வேறு எதுவும் இல்லை.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

புதிய வேலையில் சேர்ந்த உடன், நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் உங்கள் மேலதிகாரி எப்படிப்பட்டவர், அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான். நல்ல வழிகாட்டியாக, ஒரு ரோல் மாடலாக எத்தனையோ நல்ல

மேலதிகாரி களைச் சந்திக்கும் அதே வேளையில், சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாகச் சிலரையும் நீங்கள் உங்கள் பணிவாழ்வில் சந்திக்கக் கூடும்.

கடவுளோ, சாத்தானோ, உங்கள் மேலதிகாரியை சரியான விதத்தில் சமாளித்து, உங்கள் துறையில் உங்களை நிலைநிறுத்திக் கொள்வதே வெற்றியின் ரகசியம். ஆனால், கல்லூரி முடித்து முதல் வேலையில் நுழைந்த இளைஞர்களுக்கு அது ஒரு சவாலான விஷயம்.

##~##
எந்த உறவையும் சரியாக கையாள அது பற்றிய புரிதல் மிக மிக அவசியம். அதேபோல உங்கள் மேலதிகாரியுடன் சுமூகமான உறவு அமைய அவரை புரிந்து கொள்வது மிக அவசியம். மேலும், மேலதிகாரியும் நம்மைப் போல் நிறை, குறை கொண்ட மனிதர்தான் என்பதை உணர்ந்து கொண்டாலே, அவர் மீது உள்ள தேவையற்ற பயமோ, கசப்புணர்வோ அல்லது அளவுக்கு மீறிய கீழ்ப்படிதல் உணர்வோ அகன்றுவிடும்.

பெரும்பாலான சமயங்களில் உங்கள் இருவருக்கும் இடையே பிரச்னைகள் வருவதற்குக் காரணம், அணுகுமுறை சார்ந்த வேறுபாடுகளினால்தான். எனவே, உங்கள் மேலதிகாரி எப்படிப்பட்டவர்? அவரது நிறை, குறை என்ன? அவர் வொர்க்கிங் ஸ்டைல் என்ன? என்பது போன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டால் அதற்கு ஏற்ற மாதிரி உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு, உங்கள் மேலதிகாரி பல வேலைகளை ஒரே சமயத்தில் இழுத்துப் போட்டுக் கொண்டு படபடப்பாகச் செயல்படும் நபராக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் அவர் அதே குணத்தை எதிர்பார்க்கக்கூடும். ஒரே காரியத்தில் கண்ணும் கருத்துமாகச் செயல்படும் உங்கள் குணத்தை உங்கள் இயலாமையாக அவர் கருதக்கூடிய வாய்ப்பு உண்டு. எனவே, அத்தகைய சமயங்களில் சரியான நேர திட்டமிடுதலின் மூலம் நீங்களும் பல செயல்களில் பதற்றமடையாமல் செயல்பட கற்றுக் கொள்வது அவசியம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் மூலம் மத்திய ஆயுதப் படைக்கு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அசிஸ்டன்ட் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. 20-25 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் 16-ம் தேதிக்குள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

நேஷனல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் 345 நிர்வாக அலுவலர்களை நியமிக்க உள்ளது. 21-30 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் மார்ச் 17-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி.

ஒருங்கிணைக்கப்பட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் இந்தாண்டு 16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என ஹெச்.ஆர். நிறுவனமான மா ஃபாய் தெரிவித்துள்ளது.

அதேபோல் வாரத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் செய்து முடித்த காரியங்களையும், செய்ய இருக்கும் வேலைகளையும் பட்டியலிட்டு மேலதிகாரிக்குத் தெரிவிப்பது நல்லது. இது உங்கள் செயல்திறன் குறித்த நல்ல அபிப்பிராயத்தை அவரிடம் உருவாக்கும். மேலும், அவர் உங்கள் மேல் அளவுக்கு மீறிய வேலைப்பளு திணிப்பதைத் தவிர்க்கவும் உதவும்.

சில மேலதிகாரிகள் ஒரு வேலையை தந்துவிட்ட பின், அதை நிறைவேற்ற உங்களுக்கு முழு சுதந்திரம் தருவதுண்டு. ஆனால், சிலரோ வேலை முடியும் வரை அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்கள். இது உங்கள் மேல் உள்ள நம்பிக்கைக் குறைவினால் அல்ல. அந்த காரியம் குறித்த எல்லா தகவல்களும் தனக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான்.

அதேபோல சில மேலதிகாரிகள் உங்களுக்கு அளிக்கப்பட்ட வேலையில் முன்னேற்றத்தை அறிய விலாவாரியான எழுத்து அறிக்கையை (கீக்ஷீவீttமீஸீ ஸிமீஜீஷீக்ஷீt) எதிர்பார்ப்பார்கள். சிலரோ வெறும் வாய்வழி தகவலே போதும் என்று நினைப்பார்கள். முதல் வகை மேலதிகாரியிடம் நீங்கள் வாய்வழி தகவல் மட்டுமே தந்தால், நீங்கள் அந்த வேலையை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என கருதக்கூடும். அதேபோல, இரண்டாம் வகை மேலதிகாரியிடம் எழுத்து அறிக்கையைத் தந்தால், நீங்கள் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவதாக நினைப்பார். எனவே, இதில் உங்கள் மேலதிகாரியின் எதிர்பார்ப்பை முதலிலேயே அறிந்து கொள்வது நல்லது.

சில சமயங்களில் மேலதிகாரி உங்களிடம் எந்த காரணமும் இல்லாமல் எரிச்சல் அடையக் கூடும். அது, அவர் வேலைப்பளுவினாலோ அல்லது தனிப்பட்ட பிரச்னையினாலோ இருக்கலாம். அத்தகைய தருணங்களில் நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இயல்பாக இருங்கள். எல்லை மீறிச் செல்லும் பட்சத்தில் மட்டுமே உரிய அதிகாரியிடம் புகார் சொல்லலாம்.

உங்கள் மேலதிகாரியோடு அலுவலக வேலைகளை கடந்து நட்போடு இருப்பது தவறல்ல, அதே சமயம் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருப்பது இருவருக்கும் நல்லது. குறிப்பாக பார்ட்டி போன்ற சமயங்களில் மிகவும் பெர்சனலான விஷயங்களை பேசுவதைத் தவிருங்கள். அரசியலும் பேச வேண்டாம். சில மேலதிகாரிகள் உங்கள் முயற்சிகளுக்கு சரியான அங்கீகாரம் தராமல், உங்கள் சாதனைகளை அவர்கள் சாதனையாக தன் மேலதிகாரிகளிடம் பறைசாற்றி கொள்ளக்கூடும். அத்தகைய மேலதிகாரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது.

எந்த ஒரு புதிய கருத்தையும் நேரடியாக அந்த மேலதிகாரியிடம் தனிமையில் தெரிவிப்பதைத் தவிர்த்து துறை கூட்டங்களில் தெரிவிக்கலாம். நீங்கள் செய்துமுடித்த காரியங்களை பட்டியலாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது பிற்காலத்தில் உங்கள் சாதனைகளுக்கு எழுத்துப் பூர்வமான சான்றாக அமையும். அதேசமயம் நல்ல மேலதிகாரிகளை அவர்கள் முகத்திற்கு நேரே பாராட்ட தவறாதீர்கள்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


ஃபைனான்ஷியல் மார்க்கெட்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

''பங்குச் சந்தை பற்றிய விழிப்புணர்வு இப்போதுதான் மக்களிடம் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிதி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு உருவாக இருக்கிறது. மும்பை பங்குச் சந்தை இந்தியாவின் பழைமையான பங்குச் சந்தை. இதன் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் 1989-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல பகுதி நேர மற்றும் முழு நேர படிப்புகளை வழங்குகிறது. இதில் இளநிலை பட்டம் முடித்தவர்கள் பல கோர்ஸ்களில் சேரலாம்.

குளோபல் ஃபைனான்ஷியல் மார்க்கெட் புரொஃபஷனல் புரோகிராம் (ஜி.எஃப்.எம்.பி.) என்கிற படிப்பு இரண்டரை வருடங்கள் படிப்பது. நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நிதி மேலாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு தகுந்த படிப்புதான் ஜி.எஃப்.எம்.பி.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

மேலும், இந்திராகாந்தி நேஷனல் ஓப்பன் யுனிவர்சிட்டியுடன் இணைந்து எம்.பி.ஏ. ஃபைனான்ஷியல் மார்க்கெட்ஸ் படிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். இது இரண்டு வருட முழு நேர படிப்பு.

இது தவிர, கேப்பிட்டல் மார்க்கெட், கமாடிட்டி மற்றும் கரன்சி மார்க்கெட், ஃபைனான்ஷியல் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என சான்றிதழ் படிப்புகளும் வழங்குகிறோம். இந்த படிப்புகள் பற்றிய முழு விவரத்தை பி.எஸ்.இ. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு எப்படி?

வங்கி, பங்குச் சந்தை போன்ற நிதி சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் 2020-ம் ஆண்டு பத்து மில்லியன் ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதனால் வருங்காலத்தில் நிதி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது.

-பானுமதி அருணாசலம்,
படம்: என்.விவேக்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!