இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


வேலை ரெடி, நீங்க ரெடியா?
வாரத்தின் கடைசி வேலை நாள்... மாலை ஏழு மணி... நீங்கள் அலுவலகத்தைவிட்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருக்கும்போது, இன்னும் ஒரு மணி நேரத்திற்கு வேலை இருப்பதாக உங்கள் மேலதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அந்த வேலை முக்கியமானதோ, அவசரமானதோ இல்லாதபட்சத்தில் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

''ஸாரி சார், என்னால் அந்த வேலையைச் செய்ய முடியாது!'' - நம்மில் எத்தனை பேரால் இப்படி தைரியமாகச் சொல்ல முடியும். மேலதிகாரியின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது மிகவும் அவசியமான விஷயம்தான். ஆனால், வேலையில் உங்களுக்கும் சில தார்மீக உரிமைகள் உள்ளன. அவற்றை சரியான விதத்தில் நிலைநிறுத்துவது அவசியம்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் மாலை ஏழு மணிக்குமேல் மேலதிகாரியிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்பை எடுப்பது முட்டாள்தனமானச் செயல் என்ற கருத்துடையவர். இவர் போலவே நம்மில் பலரும் நெருக்கடியான சூழல்களை சந்திப்பதைவிட, தவிர்ப்பதையே விரும்பு கிறோம். ஆனால், நெருக்கடியான சூழல்களை தவிர்ப்பது நிலையான தீர்வாக இருக்க முடியாது; நம்முடைய நிலைப்பாடு நியாயமானதாக இருக்கும்பட்சத்தில் அதை நிலை நிறுத்துவது மட்டுமே இத்தகைய சூழல்களுக்குச் சரியான தீர்வு. இந்த மன உறுதியைத்தான் உளவியல் அறிஞர்கள் தன்நிலை நிறுத்தம் (Assertiveness) என்று அழைப்பார்கள்.
தன்னிலை நிறுத்தம் என்பது முழுவதும் தெளிந்து சரியென்று அறிந்த தன் நிலைப்பாட்டை மற்றவர்கள் முன் துணிவோடு நிலை நிறுத்துவது ஆகும்.
##~## |
இரண்டாம் வகையினர், பிறரை திருப்திப்படுத்த தன் நியாயமான உரிமை களைக்கூட இழக்கத் தயாராக இருக்கும் சுயமரியாதை அற்றவர்கள். இவர்களை மௌனிகள் (assive) என்று அழைக்கலாம்.
மூன்றாம் வகையினர் தன் உரிமையை நிலைநாட்டும் அதே நேரத்தில், பிறர் உணர்வு களுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு தருபவர்கள். இந்த மூன்றாம் வகையினரை தன் நிலை நிறுத்தவாதிகள் (Assertive) என்று அழைக்கிறோம்.
இது தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, உங்கள் பணியிலும் அவசியமான குணமாகும். குறிப்பாக, புதிதாக பணியில் சேர்ந்த இளைஞர்கள், மேலதிகாரி அல்லது சக பணியாளர்களிடம் தன் அதிருப்தியையோ அல்லது மாற்றுக் கருத்தையோ தெரிவிப்பது கடினமான விஷயம். அதேசமயம் துணிவாகவும், நாசூக்கா கவும் இத்தகைய கருத்துக் களை பிறர்முன் வைக்க கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மேலதிகாரி களும், தங்கள் அலுவலகப் பணியாளர்களிடம் இந்த பண்பை வளர்ப்பது நல்லது. ஏனெனில், இது தொழில் நிறுவனங்களில் புதிய, நல்ல மாற்றுக் கருத்துகள் செழிக்க வழிவகுக்கும்.
மாற்றுக் கருத்தையோ, மறுப்பையோ பிறரிடம் தெரிவிக்க நினைப்பவர், மேலதிகாரி நம்மை தவறாக எடுத்துக் கொள்வாரோ அல்லது மனவருத்தம் அடைவாரோ என்று நினைப்பதால் உண்மையான நிலைப்பாட்டை தெரிவிப்பது இல்லை. இதனால், பிரச்னைகள் தற்காலிகமாக தவிர்க்கப்பட்டாலும், உறவில் நம்பகத்தன்மை குறைய வாய்ப்புண்டு.
அதேபோல் வேலைப்பளு மிக அதிகமாக இருந்தால்கூட, அலுவலகத்தில் பிறர் உதவி கேட்டால் மறுப்பு சொல்ல தயங்குகிறோம். உதவ இயலாது என்று சொன்னால் நம் மீது சுயநலவாதி என்ற முத்திரை விழுந்துவிடும் என்ற பயத்தினால், தேவையற்ற பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம். இத்தகைய செயல்களினால் நம் பணியும் பாதிக்கப்படுகிறது; ஏற்றுக்கொண்ட பொறுப்பிலும் முழுமனதோடு ஈடுபட முடிவதில்லை. எனவே, இத்தகைய தருணங்களில் நம் வேலைப்பளுவினால் உதவ இயலாத சூழ்நிலையை பணிவோடு எடுத்துச் சொல்வதே இருவருக்கும் நல்லது. இவற்றைச் செய்யத் தவறினால், நாம் அலுவலகத்தில் தேவையற்ற வேலைகளை சுமக்கும் பொதிமாடு ஆகும் வாய்ப்புகளும் உண்டு.
அது சரி, மேலதிகாரி கேட்கும் உதவிகளையோ, நியாயமற்ற எதிர்பார்ப்பு களையோ எப்படி மறுப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கும் வழிமுறை உண்டு.
உங்கள் மேலதிகாரி இடும் கட்டளையை உங்களால் நிறைவேற்ற இயலாத நிலையில் நீங்கள் இருந்தால், அதை நேரிடையாகத் தெரிவிப்பது உங்களுக்கு பிரச்னைகளைத் தரலாம். எனவே, மறுப்பை முதலில் தெரிவிக்காமல், அவர் கட்டளையை முழுவதுமாகக் கேளுங்கள். பிறகு உங்கள் இயலாமையையும் அதற்கான நியாயமான காரணத்தையும் துணிவாகவும், அதே நேரம் பணிவாகவும் சொல்லுங்கள். அந்த கட்டளைகளை நிறைவேற்ற உங்களிடம் மாற்று வழிமுறைகள் இருந்தால் அதையும் சொல்லலாம்.
செய்ய இயலாத காரியத்தை மறுக்க துணிவு எவ்வளவு அவசியமோ, அதே அளவு துணிவு, செய்ய முடிந்த காரியத்தை ஏற்றுக்கொள்ளவும் தேவை. ஏனெனில், நம் திறமைகளை நிரூபிக்க வாய்ப்புகள் வரும்போது அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம் இல்லாவிட்டால், அவை நம் கை நழுவி போய்விடும். எனவே, பணியிடத்தில் புதிய புராஜெக்ட்கள், பொறுப்புகள் வரும்போது அவை எந்த அளவுக்கு நம் திறமைகளை வளர்க்க உதவும் என்று அறிந்து அவற்றை பயன்படுத்திக் கொள்வது உங்கள் பணி வாழ்வுக்கு உதவும்.
புதிய வாய்ப்புகளை ஏற்கும்முன் உங்களுக்கு குழப்பமும், சுய சந்தேகமும் ஏற்படுவது இயற்கை. அவற்றைச் சமாளிக்க அடுத்துவரும் இரண்டு விஷயங்களை நீங்கள் நன்கு புரிந்து கொண்டால் போதும்.
தோல்வியைக்கண்டு அஞ்சாதீர்கள்: பெரும்பாலான நேரங்களில் தோற்று விடுவோம் என்ற பயத்தினால்தான் நாம் முயற்சி செய்வதையே தவிர்த்து விடுகிறோம். தோல்வி என்பது இகழ்ச்சிக்கு உரிய விஷய மில்லை. நாம் எத்தனை முறை தோற்கிறோம் என்பது, நாம் எத்தனை முறை முயற்சி செய்தோம் என்பதன் அடையாளம். எனவே, தோல்வி பயத்தை தவிர்த்து துணிவோடு செயல்படுங்கள்.
திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் பணியில் வளர புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் வரும்போது நீங்கள் கற்றுக்கொண்ட புதிய திறமைகளை மெருகேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.

(தயாராவோம்)

|

''இந்தியா போன்ற நாடுகளில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் தேவை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒரு நிறுவனம் அல்லது தொழிற்சாலை எனில் அதில் மிக முக்கியம் அங்கு பணிபுரியும் பணியாட்கள்தான். இவர்களை தேர்வு செய்வது, இவர்களுக்கு பயிற்சி வழங்குவது போன்ற பணிகளை செய்வதுதான் ஹெச்.ஆர். துறையின் பணி. எம்.பி.ஏ. படிப்பு ஒரு வருடம், இரண்டு வருடங்கள் என இருக்கிறது. எந்த இளங்கலை பட்டம் பெற்றவர்களும் எம்.பி.ஏ. |

படிக்கலாம். கிரேட் லேக்ஸ், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ், கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங்ஸ் போன்ற தனிப்பட்ட இன்ஸ்டிடியூட்களும், பல்வேறு தனியார் கல்லூரிகளும் எம்.பி.ஏ. படிப்பை வழங்குகின்றன. மனித வளம் மற்றும் ஃபைனான்ஸ், மனிதவள மேம்பாடு போன்ற பிரிவுகளில் இருக்கும் இந்த படிப்புகளில் உங்களுக்குத் தேவையான பிரிவைத் தேர்வு செய்து படிக்கலாம். மற்றவர்களுடன் சகஜமாக பழகக்கூடிய தன்மை, தகவல் பரிமாற்றம், சட்டம் மற்றும் உளவியல் நுணுக்கங்கள், மாற்றி யோசிக்கும் திறன் போன்ற குணங்கள் கொண்டவர் களுக்கு ஹெச்.ஆர். துறை நல்ல தேர்வாக இருக்கும். மதிப்பெண்களை வைத்து மட்டுமல்லாமல், மேலே சொன்ன அனைத்து குணங்களும் இருக்கும் நபர் ஒரு சிறந்த ஹெச்.ஆர்.- பணியாளராக ஜொலிக்கலாம். வேலைவாய்ப்பு எப்படியிருக்கும்? 200 ஆட்கள் பணிபுரியும் இடத்தில் ஒரு ஹெச்.ஆர். அலுவலர் தேவைப்படுகிறார். மருத்துவமனை, வங்கி, டெலிகாம், ஐ.டி. என எந்தத் துறைச் சார்ந்த நிறுவனம் என்றாலும் அங்கு கண்டிப்பாக ஹெச்.ஆர். அலுவலர்கள் தேவைப்படுகிறார்கள். இன்னும் பத்து முதல் பதினைந்து வருடங் களுக்கு ஹெ.ஆர்.-ன் தேவை இந்தியாவில் அதிகமாகவே இருக்கும். மற்ற வேலைகளுடன் ஒப்பிடும்போது நல்ல சம்பளத்தில் உடனே வேலை கிடைக்கும்.'' - பானுமதி அருணாசலம். |