மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் ஒரே கருத்துடையவர்களாக மாறிவிட்டால் இந்த உலகம் எப்படியிருக்கும்? சச்சரவுகள் இல்லாத இடமாக இந்த உலகம் மாறிவிடும் என்பது, உண்மை! ஆனால் அதேசமயம் புதுமையும், மாற்றுக் கருத்துக்களும் இல்லாத ஒரு சுவாரஸ்யமற்ற இடமாகவும் இந்த உலகம் ஆகிவிடும் அல்லவா? அமைதி என்பது கருத்து வேறுபாடுகள் அற்ற நிலை அல்ல; வன்மம் இல்லாத நிலையே அமைதி.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

னிப்பட்ட உறவுகளில் கருத்து வேறுபாடுகள் எவ்வாறு தவிர்க்க முடியாத விஷயமோ, அதேபோல அலுவலக மற்றும் சமூக உறவுகளிலும் கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தவிர்க்க முடியாத விஷயங்கள். ஆனால், அவை தீர்க்க முடியாத விஷயங்கள் அல்ல. இதை புரிந்து கொள்ளாததால்தான் நாம் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கப் பார்க்கிறோம் அல்லது அவற்றைத் தவறாக கையாண்டு சண்டை, சச்சரவுகளாகப் பெரியதாக்கி விடுகிறோம்.

பணியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தால் அது அவர்களிடையே உள்ள உறவை பாதிக்கும். அதனால் அலுவலகத்தில் சுமூகமான சூழல் கெடும். இது அவர்கள் செயல்திறனை குறைக்கும் என்பது பொதுவான கருத்து.

##~##
ஆனால் இது முற்றிலும் சரியான கருத்தில்லை. பணியாளர்களிடையே நிலவும் மாற்றுக் கருத்துக்களை சரியானபடி கையாண்டால் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதுடன், புதுமையான செயல் திட்டங்களை வகுக்க முடியும். குறிப்பாக, புதிதாகப் பணியில் சேர்ந்த இளைஞர்கள் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தால் தேவை இல்லாதச் சச்சரவுகள் வரலாம் என்று நினைத்து, பேசாமல் இருந்துவிடுகிறார்கள். இதனால் அவர்கள் கருத்துக்கள் முடங்கிப் போய்விடுகிறது.  

அலுவலகத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை சரியாக கையாள்வது எப்படி?

கருத்து வேறுபாடுகள் ஏற்பட தனிமனித காழ்ப்புணர்ச்சிகளே முதன்மையான காரணம் என்பது  இன்னொரு பொதுவான கருத்து. இதுவும் முழுக்க உண்மையில்லை. பெரும்பாலான சமயங்களில் சரியாக கையாளப்படாத கருத்து வேறுபாடுகளே தனிமனித காழ்ப்புணர்ச்சிகளாக மாறிவிடுகின்றன. எனவே, பிறரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவற்றை முதிர்ந்த மனநிலையோடு அணுகுவது அவசியம். கௌரவப் பிரச்னையாக அணுகுவது இருவருக்கும் பயன் தராது.

பெரும்பாலான சமயங்களில் கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்களாக மாற காரணம், ஒரு பிரச்னைக்கு ஒரேயரு சரியான தீர்வுதான் இருக்க முடியும் என்ற நம் குறுகிய மனநிலைதான். ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் இருக்க வாய்ப்புண்டு. எனவே, வாக்குவாதத்தில் ஒருவர்தான் வெற்றியடைய வேண்டும் என்று அவசியமில்லை. கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வாக்குவாதத்தை அடிப்படையாக கொண்டால், சில சமயம் இருவருமே தோற்கும் நிலை ஏற்படலாம். எனவே, கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது பிறருடைய மாற்றுக் கருத்துகளையும் திறந்த மனநிலையோடு அணுகுவது அவசியம்.

இதனால் வாக்குவாதம் தவிர்க்கப்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் எனும் அரசு நிறுவனம் மொழிபெயர்ப்பாளர், டெக்னிக்கல் மேனேஜர், சிஃப்ட் மேனேஜர் போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

 ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்டு அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ வெவ்வேறு பணிகளுக்கு ஆட்களை எடுக்க இருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஆசிய நாடுகளில், அதிக சம்பள உயர்வு கொடுக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2011-2012-ம் ஆண்டில் இந்தியா 8.3 சதவிகித சம்பள உயர்வு கொடுத்து முதலிடத்திலும், சீனா 6.5% உயர்வு கொடுத்து இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மெர்சர் தெரிவித்துள்ளது.

படுவதோடு, உலகத்தைப் பற்றிய நம் பார்வையும் விரிவடையும். இவ்வாறு கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் இருவரும் பலன் பெறும் சூழலை (Win-Win Situation), இருவரும் வெற்றியடையும் சூழல் என்று உளவியல் அறிஞர்கள் அழைப்பார்கள்.

இதைவிடுத்து, எந்த வாக்குவாதத்திலும் நானே வெற்றியடைய வேண்டும் என்று நினைப்பது சில சமயம் நமக்கே தோல்வியைத் தரலாம். இது (Win-Lose Situation) போட்டி மனப்பான்மையைப் பிரதிபலிக்கும். இப்படி இருவருமே போட்டி மனப்பான்மையோடு கருத்து வேறுபாட்டை அணுகினால் ஒருவர் கருத்தை மற்றவர் கேட்காமல், அது கௌரவ பிரச்னையாகவும், காழ்ப்புணர்ச்சியாகவும் மாறிவிட வாய்ப்புண்டு. கடைசியில், தான் தோற்றாலும் பரவாயில்லை எதிராளியும் தோற்க வேண்டும் என்ற மோசமான நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். இது இருவருக்கும் தோல்வியைத் தரும் சூழல் (Lose-Win Situation). சில சமயங்களில்

தன்னம்பிக்கை இன்மையால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, (விவாதத்தைத் தவிர்க்கவும்) கண்மூடித்தனமாக நாம் மற்றவர்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுண்டு. இது ஒரு வகையில் தோல்வி மனப்பான்மையைக் (Lose-Win) குறிக்கும்.

சில சமயங்களில் நாம் திறந்த மனதோடு பிணக்குகளை அணுகினாலும் மற்றவர்கள் நம்மை காழ்ப்புணர்ச்சியோடு நடத்தக்கூடும். அதன் வெளிப்பாடாக அவர்கள் உங்களோடு பேசுவதையும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதையும் நிறுத்திக் கொள்ளக்கூடும்.

அந்த சூழல்களில் அவர்கள் உங்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாகப் பேசவும் வாய்ப்புண்டு. இத்தகைய கசப்பான சம்பவங்களின்போது நீங்கள் உணர்ச்சி வசப்படுவது தவிர்க்க முடியாததே. இருப்பினும், உங்கள் நிலை தவறாமல் இருப்பது அவசியம். ஏனெனில் உணர்ச்சி வயப்படு வதினால் பிரச்னைகள் பெரிதாக மட்டுமே ஆகும்.

இத்தகையச் சூழல்களை கையாள சரியான வழி, நேரடியாக அவர்களிடமே உங்கள் அதிருப்தியைத் தெரியப்படுத்திவிடுவது (Confrontation). இதனால், உங்கள் இருவருக்குமே ஏற்படும் பாதகமான விளைவுகளை தடுத்துவிட முடியும்.

இதைத்தவிர, மனதில் கொள்ள வேண்டிய சில பொதுவான விஷயங்கள்:

1. எந்த காலகட்டத்திலும் மனிதர்கள் மீதும், மனிதத்தன்மையின் மீதும் உள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள்.

2. நன்மை, தீமை இரண்டும் கலந்ததே மனித இயல்பு. இது உங்களுக்கும் பொருந்தும்.

3. பிறர் மீதான எந்த அபிப்பிராயத்தையும் உருவாக்கி கொள்வதற்கு முன், அவர்கள் கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் முழுமையாக கேட்டறியுங்கள்.

4. எதிரியாக இருந்தால்கூட அவரும் மனிதரே. உங்கள் எதிரியை எப்படி நடத்துகிறீர்கள் என்பது அவர் குணத்தை அல்ல, அது உங்கள் குணத்தையே பிரதிபலிக்கும்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


ஃபிளைட் டிஸ்பேட்சர்!

''விமானப் பணி என்றாலே ஏர் ஹோஸ்டர்ஸ் மட்டுமே அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், ஃபிளைட் டிஸ்பேட்சர் (Flight-Dispatcher) பணி நல்ல சம்பளத்துடன் கூடியதாகும். இந்த ஃபிளைட் டிஸ்பேட்சர்கள்தான் விமானம் பறப்பதற்கான பிளானிங் செய்து தருகிறவர்கள்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

அதாவது, ஒரு விமானம் சென்னையிலிருந்து மலேசியா செல்ல வேண்டும் எனில், அந்த விமானம் எத்தனை மணிக்குப் புறப்பட வேண்டும், எந்தெந்த நாடுகளிலெல்லாம் இறங்க வேண்டும் என திட்டமிடுபவர்கள் இந்த ஃபிளைட் டிஸ்பேட்சர்கள்தான். அது மட்டுமல்லாமல் சீதோஷ்ண நிலை, எரிபொருள் எவ்வளவு அளவு இருக்க வேண்டும் என அனைத்து விஷயங்களையும் பிளானிங் செய்து கொடுப்பதும் இவர்கள்தான்.

இதற்கு டிப்ளமோ இன் ஃபிளைட் டிஸ்பேட்சர் படிக்க வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களே, இந்த டிப்ளமோ படிப்பை படிக்கலாம். எனினும், பி.எஸ்.சி. இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.இ. போன்ற பட்டம் வாங்கியவர்கள் படிக்கும்போது டெக்னிக்கலான விஷயங்களை சுலபமாகப் புரிந்து படிக்க முடியும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

டிப்ளமோ இன் ஃபிளைட் டிஸ்பேட்சர் முடித்தவர்கள் முதலில் அஸிஸ்டென்ட் ஃபிளைட் டிஸ்பேட்சராக வேலை பார்க்க முடியும். அதன்பிறகு டைரக்டர் ஆஃப் சிவில் ஏவியேஷன் நடத்தும் தேர்வு எழுதி தேர்ச்சி யடைந்த பிறகு ஃபிளைட் டிஸ்பேட்சராக பணியில் அமரலாம்.

வேலைவாய்ப்பு எப்படி?

தற்போது நாட்டில் அதிகளவில் புதிய விமான நிலையங்கள் வரவுள்ளன. அதிலும் இதுபோன்ற படிப்புகள் குறித்து யாருக்கும் தெரிவதில்லை. அஸிஸ்டென்ட் ஃபிளைட் டிஸ்பேட்சராக பணிபுரிய 25,000 ரூபாய் வரையிலும், ஃபிளைட் டிஸ்பேட்சராக பணிபுரிய 80,000 ரூபாய் வரையிலும் சம்பளம் கிடைக்கும். இந்த பணிகளுக்கு தற்போது ஆட்கள் குறைவான அளவிலே இருப்பதால் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

- பானுமதி அருணாசலம்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!