இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

தொலைக்காட்சி மெகா தொடர்களைப் போல மெகா ஊழல்களும் நமக்கு தினசரி விஷயமாகிவிட்டன. இந்த ஊழலில் பெரிய தொழில் நிறுவனங்களின் பெயரும் அடிபடுவதை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. இந்த சீர்கேடுகளுக்கு தனிமனித ஒழுக்கநெறி பிறழ்வுகளும் முக்கியமான காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

இந்த மெகா ஊழல்களில் தொடர்புடைய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மட்டுமல்ல, இவற்றை கண்டும் காணாமல் இருந்த மேலாளர்களும் குற்றவாளிகளே.
இந்த மெகா முறைகேடு கள் மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களில் நடக்கும் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்களும், நிதி முறைகேடு களும், நுகர்வோரை ஏமாற்றும் செயல்களும் இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல, எதிர்காலத்தில் அந்த நிறுவனங்களின் ஸ்திரத்தன்மைக்கே சவாலாக மாறிவிடும். இத்தகைய முறைகேடுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பொறுப்பு அந்த நிறுவன மேலாளர்களையே சேரும்.

ஒழுக்க நெறிகளை (Morality) பொறுத்தவரை மேலாளர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.
1) சுய லாபத்திற்காக முறைகேடுகளில் ஈடுபடு பவர்கள் (Immoral).
2. எந்த நிலையிலும் ஒழுக்க நெறியிலிருந்து தவறாத மனஉறுதி உள்ளவர் கள் (Moral).
3. எது சரி, எது தவறு என்ற தெளிவான நிலைப்பாடு எடுக்க இயலாதவர்கள் (Amoral).
இதில் முதலிரண்டு வகையினரை மாற்றுவது கடினம். ஆனால், இந்த மூன்றாம் வகையினர் மதில் மேல் பூனையைப் போன்றவர்கள். இவர்கள் நல்லவர்களாக மாறவும் வாய்ப்புண்டு, தீயவர்களாக மாறவும் வாய்ப்புண்டு. பணியில் புதிதாகச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களே. நம்மில் சிலர் இந்த மூன்றாம் நிலைப்பாடு எடுப்பதற்குக் காரணம், தெளிவின்மை மட்டுமல்ல, பிறர் எப்படிப் போனால் எனக்கென்ன என்ற சமூக அக்கறை இன்மைதான். தவிர, பிறர் தவறுகளை திருத்தப் போய் நாம் ஏன் பிரச்னையில் சிக்க வேண்டும் என்ற தயக்கம்!
##~## |
1. நீதி நெறிகள் சமூக நலனுக்காகவே வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றாத சமுதாயம் பேராசை மற்றும் எதேச்சையான போக்கினாலும், அவற்றால் ஏற்படும் கட்டுப்பாடற்ற தன்மையினாலும் விரைவில் அழிவை சந்திக்கும். இது தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
2. போக்குவரத்து நெரிசலில் அனைவரும் குறுக்குவழியில் செல்ல முற்படும்போது அனைவரது பயணமும் தடைப்படுவது போல, குறுக்குவழி பாதைகளினால் சமூகச் சிக்கல்கள் அதிகமாகும். அது நம் அனைவரையுமே பாதிக்கும்.
3. சிறிய மீனைத் தின்று பெரிய மீன் வாழ்வது யதார்த்தமான உண்மை தான். ஆனால், நாம் அந்த சிறிய மீனாக ஆகும்போது நம் மனநிலை எப்படியிருக்கும்? வலியும், துன்பமும் நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானதே என்பதைப் புரிந்துகொண்டால் எளியவரை தின்று வலியார் வாழும் நிலை மாறும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 1,500 புரபேஷனரி ஆபீஸர்களை வேலைக்கு எடுக்கவுள்ளது. இதற்காக ஏப்ரல் 19-ம் தேதி வரை (ஆன்லைன் மூலமாக மட்டுமே) விண்ணப்பிக்கலாம். |
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கிளார்க் பணிக்கு 2,000 ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். இதற்கு (ஆன்லைன் மூலம் மட்டும்) விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10. |
ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு பல்வேறு பணிகளுக்கு 6,449 ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 9 கடைசி தேதி. |
ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதன் மூலம் சமூகத்திற்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நன்மை கிடைக்கும். பணி வாழ்வின் தொடக்கமான முதல் வேலையிலேயே உங்கள் ஒழுக்க நெறிகளை சரியாக அமைத்துக் கொண்டால், உயர்பதவிகளுக்குச் செல்லும்போது, உங்களின் கீழ் பணிபுரிபவர்களின் உண்மையான மதிப்பை பெறமுடியும். ஒழுக்க நெறிகளை அடிப்படையாக கொண்ட செயல்களே உங்களுக்கு உறுதியையும் உயர்வையும் தரும்.
எது சரி? எது தவறு?
என்பதற்கான விளக்கம் சமூகங்களுக்கு இடையேயும், வெவ்வேறு காலகட்டங் களிலேயும் மாறினாலும், சில அடிப்படை தார்மீக விஷயங்கள் மட்டும் மாறுவதே இல்லை. உலகம் அனைத்துக்கும் பொதுவான நெறிகள் சிலவற்றைப் பார்ப்போம்.
- அனைவருக்கும் நிலை யான நன்மை தருவன எல்லாமே சரியான காரியங்கள். ஒரு செயல் சிலருக்கு நன்மையும், பலருக்கு தீமையும் தருமெனில் அது தவறான காரியம். உதாரணத்திற்கு, லஞ்சம் தந்து அதிகாரிகளை சரி கட்டுவது ஒரு சிலருக்கு, அதுவும் தற்காலிகமாக மட்டுமே நன்மையைத் தரும்.
- வாய்மையை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்படும் எல்லா செயல்களும் சரியான செயல்களே.

|

உலகில் நடக்கும் 90 சதவிகித சரக்குப் போக்குவரத்து கடல் மார்க்கமாக நடக்கிறது. மூலப் பொருட்கள், செய்து முடிக்கப்பட்ட சரக்குகள் என அனைத்தும் கடல் வழியாகவே உலகெங்கும் கொண்டு செல்லப்படுகின்றன. ஷிப் மேனேஜ்மென்ட், துறைமுக வேலை, பவர் பிளான்ட் போன்ற பல துறைகளில் மரைன் இன்ஜினீயரிங் படிப்பு முடித்தவர்கள் பணிக்குச் செல்லலாம். டிப்ளமோ இன் மரைன் இன்ஜினீயரிங், பி.டெக். மரைன் இன்ஜினீயரிங், பி.எஸ்.சி. நாட்டிகல் சயின்ஸ், டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் போன்ற படிப்புகள் மரைன் இன்ஜினீயரிங் துறை சார்ந்த படிப்புகள். பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியல், கணக்கு மற்றும் ஆங்கிலம் போன்ற பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும். 17-25 வயதுள்ளவர்கள் இந்த படிப்பை படிக்கலாம். இந்த படிப்பில் மிக முக்கிய தகுதியாகப் பார்க்கப்படுவது கண் பார்வை. அதாவது, படிப்பில் சேர்வதற்கு முன்பு மரைன் டிபார்ட்மென்ட் சொல்லும் அளவுக்கு கண் பார்வை இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு? மேற்கண்ட படிப்புகளில் தேர்ச்சியடைந்த உடன் ஷிப்பிங் மாஸ்டரிடமிருந்து சி.டி.சி. லைசன்ஸ் பெற்றபின்பு உள்நாடு மற்றும் வெளிநாட்டு கப்பல்களில் வேலைக்குச் செல்லலாம். அதிகரித்து வரும் கடல் சார்ந்த போக்குவரத்து காரணமாக அதிகளவில் வேலைவாய்ப்புகள் நல்ல சம்பளத்துடன் கிடைக்கிறது. உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.-பானுமதி அருணாசலம். |
எளியோரை துன்புறுத்தும் எல்லா செயல்களும் தவறான செயல்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பணியிடத்திலும் சரி, தவறு என்ற வரையறைக்குள் அகப்படாத, நன்மை-தீமை இரண்டும் கலந்த தர்மசங்கடமான சூழ்நிலைகள் (ணிtலீவீநீணீறீ பீவீறீமீனீனீணீ) ஏற்படுவதுண்டு. இத்தகைய சூழல்களில் சரியான முடிவை தேர்ந்தெடுக்க உதவும் சில வழிமுறைகள் என்ன என்று பார்ப்போம்!
1. குழப்பமான சூழல்களில் எழுதி வைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் வழிமுறை களையோ (நீஷீபீமீ ஷீயீ நீஷீஸீபீuநீt), சட்டதிட்டங்களையோ பின்பற்றுவது மிகவும் நல்லது.
2. தெளிவான சட்டதிட்டங் கள் இல்லையெனில், வாய்மை (உண்மை) சார்ந்த நிலைப்பாட்டை எடுப்பது அவசியம்.
3. உண்மை எது, பொய் எது என்று பிரித்துணர முடியாத சூழல் நிலவினால், உங்கள் செயல்பாட்டினால் (அல்லது முடிவினால்) பாதிக்கப் போகும் நபர்கள் யார்? அவர் களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் என்ன? என்று மனிதத் தன்மையோடு அந்த சூழலை அணுகுவது நல்லது.
4. நீங்கள் எடுக்கப் போகும் முடிவு உங்களுக்கும், பிறருக்கும் நிலையான நன்மையைத் தருமா? என்பதை அறிந்து முடிவெடுங்கள். இவை அனைத்தையும் கடந்து உங்களுக்கு குழப்பம் நீடித்தால் நல்ல நண்பர்களிடமோ, வழிகாட்டிகளிடமோ ஆலோசனை கேட்பது நீங்கள் சரியான தீர்வை தேர்ந்தெடுக்க உதவும்.
உங்கள் பணியிடத்தில் ஒழுக்க நெறிகளை நீங்கள் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் பிறர் கடைப்பிடிக்கவும் உதவுங்கள். நெறிமுறை களை மீறுபவர்களையும் தவறு செய்பவர்களையும் துணிவோடு கண்டியுங்கள். அது முடியாத பட்சத்தில் சரியான நபர்களிடம் முறையீடு செய்யுங்கள். மனசாட்சியின் சொல்படி செயல்பட்டால் உங்களுக்கு என்றுமே தாழ்வில்லை.
(தயாராவோம்)
