மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

உலகமயமாக்கத்தினால் நாடுகளுக்கிடையே தொழில் மற்றும் பண்டப் பரிமாற்றங்கள் மட்டுமல்ல, மக்களை பரிமாறிக்கொள்வதும் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக, பன்னாட்டு நிறுவனங்களின் வருகையினாலும், நிறுவனங்களுக்கிடையே அதிகமாகிவரும் கூட்டு ஒப்பந்தங்களினாலும் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தவிர, இணையம் சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் மற்ற நாடுகளில் உள்ளவர்களோடு தொடர்புகொண்டு அவர்களோடு இணைந்து பணியாற்றுவதும் எளிதாகி உள்ளது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

த்தகைய மாற்று கலாசார மற்றும் கலாசார பண்மைச் சூழலில் திறமையாகப் பணியாற்ற அச்சூழல் சார்ந்த புரிதலையும், திறன்களையும் வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பல மாநில கலாசாரங்களை சார்ந்தவர்களோடு பணியாற்று வதால் இந்தியர்களாகிய நாம் இந்த திறன்களை வளர்த்துக் கொள்வது எளிது. அதேசமயம் நமக்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள கலாசார இடைவெளியைக் கணக்கிடும்போது, இந்திய மாநிலங்களுக்கு இடையே உள்ள கலாசார வேற்றுமைகள் மிகக் குறைவே.

ஒரு மனிதனின் எண்ணம், செயல், பார்வை, மதிப்பீடுகள் என எல்லா பரிணாமங்களிலும் சக்தி வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது கலாசாரம். இதை நாம் மாற்று கலாசாரத்திற்குச் சென்று வாழும் போதுதான் உணர்வோம். ஒரு சமுதாயத்தின் இயற்கை மற்றும் சமூக பொருளாதாரச் சூழலும் அதன் கலாசார மதிப்பீடுகளும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, இன்றைய வாழ்க்கை மட்டுமே நிஜம் என்று நாளையைப் பற்றி கவலைப்படாத மதிப்பீடுகளினால்தான் மேலைநாட்டு மக்களிடையே சேமிக்கும் பழக்கம் குறைகிறது. அந்த நாடுகளின் தற்போதைய பொருளாதாரச் சூழலுக்கு இத்தகைய மதிப்பீடுகள் ஒரு முக்கிய காரணம்.

மாற்றுக் கலாசார மக்களுடன் பணிபுரியும்போது அவர்களது கலாசார மதிப்பீடு களை (Cultural Values) அறிந்து கொள்வது மிகவும் அவசியம். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலாசாரங்களுக்கு இடையே மதிப்பீடுகளால் சில அடிப்படை யான வேறுபாடுகள் உள்ளன. ஹாஃப்ஸ்டீட் (Hoefstede)  என்ற சமூகவியல் அறிஞர் தன் ஆராய்ச்சியின் மூலம் வறையறுத்துள்ள அந்த மதிப்பீடுகள் எவை என்று பார்ப்போம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஃபிட்டர், வெல்டர், டர்னர், எலெக்ட்ரிஷியன் உள்ளிட்ட 750 பதவிகளுக்கு திருச்சி பி.ஹெச்.இ.எல். நிறுவனம் ஆட்களை எடுக்க உள்ளது. இந்த பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 25-ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு:www.bheltry.co.in   

யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஸ்பெஷலிஸ்ட் மற்றும் ஜெனரலிஸ்ட் ஆபீஸர் பணிகளுக்கு ஆட்களை எடுக்க இருக்கிறது. சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., எம்.காம்., ஏ.சி.ஏ., இன்ஜினீயரிங் இன் சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல்  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 25-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. ஜூன் 3-ம் தேதி எழுதுத் தேர்வு நடைபெறும்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கடைசி தேதி ஏப்ரல் 30.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா புரபேஷனரி ஆபிஸர் பதவிக்கு 1000 நபர்கள், கிளார்க் பதவிக்கு 2000 நபர் களை எடுக்க உள்ளது.

Power Distance: இது அதிகாரத்திற்கும், அதிகாரம் படைத்தவர்களுக்கும் அளிக்கப்படும் மதிப்பை குறிக்கிறது. இந்தியா, ஜப்பான் போன்ற கிழக்கத்திய நாடுகளில் அதிகாரத்திற்கு மறுபேச்சின்றி கீழ்படியும் தன்மை இருக்கும்.

ஆனால், வட அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் விதிமுறைகளுக்கே மதிப்பளிக்கப்படும், அதிகாரிகளுக்கு அல்ல. எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் பெரும்பாலும் ஆசிரியர்களையோ, மேலதிகாரிகளையோ, பெயர் சொல்லி அழைப் பதில்லை. ஆனால், மேலைநாடுகளில் அது சகஜம்.

Individualism-Collectivism: தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பு அளிக்கப்படு கிறதா? அல்லது சமூக விருப்பு, வெறுப்புகளுக்கு அதிகம் மதிப்பளிக்கப்படுகிறதா? என்பதை இது குறிக்கும். கிழக்கத்திய கலாசாரங்களில் தனி மனித விருப்பங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுவதில்லை. மேலும், அது சுயநலத்தின் பிரதிபலிப்பாக  கருதப்படுகிறது. எடுத்துக் காட்டாக, நம் நாட்டில் காலணி வாங்குவதற்குகூட குடும்பத்தையே அழைத்துச் செல்கிறோம். ஆனால், மேலைநாடுகளில் திருமணங் களில்கூட உறவினர் விருப்பத்தைவிட சொந்த விருப்பமே முக்கியமானதாக கருதப்படுகிறது.

##~##
Uncertainity Avoidance:
இது நிச்சயமற்ற/ஒழுங்கற்ற தன்மையை தவிர்ப்பதைக் குறிக்கும். நேரம் தவறாமை, வரிசையில் நிற்பது போன்றவை இந்த மதிப்பீட்டின் வெளிப்பாடே. எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் ஐந்து நிமிடம் என்பது அரை மணி நேரத்தைக் குறிக்கும். மேலை நாடுகளில் அப்படியல்ல! நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக் கொள்வதில் நன்மையும் உண்டு. மாறுதல்களினால் ஏற்படும் குழப்பமான சூழ்நிலை களில் மனதை அமைதியாக வைத்திருக்க இந்த குணம் உதவும். அதனால்தான் இந்தியர்களாகிய நாம் குழப்பவாதிகள் மட்டுமல்ல, அதை திறம்பட சமாளிக்கும் வல்லவர்களும்கூட!

Masculinity-Faminity:  ஒரு கலாசாரத்தில் அன்பு, கருணை, பொறுமை போன்ற மென்குணங்களுக்கு மதிப்பு அளிக்கப்படுகிறதா? அல்லது போட்டி மனப்பான்மை, கோபம், வலிமை போன்ற ஆண் குணங்களுக்கு மதிப்பு அளிக்கப் படுகிறதா? என்பதைக் குறிப்பது இது.  

Long Term Orientation: இது நீண்ட கால நன்மைகளுக்காக, குறுகிய கால தற்காலிக சுகங் களை தவிர்ப்பதைக் குறிக்கும் மதிப்பீடு. மேலைநாட்டு மக்களிடம்  இது குறைவு. நம் நாட்டு மக்களிடம் அதிகம்.

மேற்கூறிய இந்த மதிப்பீடுகள், வளரும் நாடுகளில் இளைய தலைமுறையினர் இடையே மாறி வந்தாலும், சில மதிப்பீடுகள் மாறுவது இல்லை. கலாசாரங்கள் இடையே உள்ள இந்த வேறுபாடுகளே பணியாற்றும் முறைகளில் உள்ள வேறுபாடுகளாக பிரதி பலிக்கின்றன. இவையே கூட்டு முயற்சிகளில் ஏற்படும் தோல்விகளுக்கு ஒரு முக்கிய மான காரணம்.

கருத்து பரிமாற்ற முறைகளி லும் (Communication Styles)   கலாசாரங்களுக்கிடையே வேறுபாடு உண்டு. கிழக்கு கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் தகவல் பரிமாற்றத்தின்போது சூழ்நிலைக்கு (சிஷீஸீtமீஜ்t) அதிக முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், மேற்கத்திய கலாசாரத்தைச் சார்ந்தவர்கள் இதை 'சுற்றி வளைத்து’ பேசும் குணமாக கருத வாய்ப்புண்டு.

மேலும், நாம் நம் மறுப்பையோ, விருப்பம் இன்மையையோ சொல்லும் போது நேரடியாக அல்லாமல் 'பார்க்க லாம்’, 'செய்வது கடினம்’ என்றே சொல்ல விரும்புகிறோம். இத்தகைய செயல்களும் கலாசாரங்களிடையே மாறுபடும்.

உடல் மொழி (Body Language), வார்த்தை உபயோக முறை போன்றவற்றிலும் கலாசாரங்களுக்கு இடையே வேறுபாடுகள் உண்டு.

இப்படி பல வேறு பாடுகள் இருந்தாலும் விழிப்புணர்வுடனும், திறந்த மனதுடனும் இத்தகைய சூழல்களை அணுகினால் எந்த கலாசார தடைகளையும் எளிதில் கடக்கலாம்.

(தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!


ஆசிரியர் தகுதித் தேர்வு!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

த்திய அரசு இலவச கட்டாய கல்வித் திட்டத்தின்படி 2010 முதல் அனைத்து மாநிலங்களிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

ஆசிரியர் பயிற்சி படித்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தாள்-1 தேர்வையும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்திருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் தாள்-2 தேர்வையும் எழுத வேண்டும். ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட். படித்துவிட்டு பணிக்காக காத்திருப்போர் இரண்டு தாளையும் எழுதலாம். இதற்கான தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என ஆயக்குடி இலவசப் பயிற்சி மைய இயக்குநர் ராமமூர்த்தி சொல்கிறார்.

''தமிழைப் பொறுத்தவரையில் எழுத்துகள், உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்க் குறில், உயிர் நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம், ஒரெழுத்து ஒரு மொழி, தொடர்மொழி, தன்மை, முன்னிலை, படர்க்கை, திணை, பால், இலக்கணக் குறிப்பு, நூல் ஆசிரியர், பொருத்துக, பொருந்தாச் சொல், பெயர்ச் சொல்லின் வகை. அறிதல், அகர வரிசையில் எழுதுதல், ஆங்கில சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், விலங்குகளின் இளமை பெயர்கள் அவற்றின் ஒலி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ளவற்றைப் படித்தாலே போதுமானது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஆங்கிலத்தைப் பொறுத்தவரையில் அடிப்படை ஆங்கில இலக்கணம் தெரிந்தாலே போதுமானது.

கணிதத்தில் முழு எண்கள், இயல் எண்கள், ஒற்றை, இரட்டை எண்கள், வர்க்க எண்கள், கணங்கள், பகு எண், பகா எண், ஏறுவரிசை, இறங்கு வரிசை, விகிதமுறு, விகிதமுறா எண்கள், பின்னங்கள் தனிவட்டி, அல்ஜிப்ரா, வடிவியல் பகுதிகள் அளவியல் போன்ற எளிமையான இப்பகுதிகளுக்குப் பயிற்சி செய்தாலே போதும்.

சுற்றுச்சூழல் கல்விக்கு நாம் செய்யும் அன்றாட நிகழ்வுகள், பூமி, சூரியன், போன்ற கோள்களின் செயல்பாடுகள், மழை நீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, தாவரங்கள் விலங்குகள் இவற்றின் தேவைகள் போன்றவற்றைப் பார்த்தாலே போதும். குழந்தை வளர்ச்சிக்கு கரு உண்டானதிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வரை குழந்தையின் வளர்ச்சி நிலைகள், குறைபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதனைப் போன்றே அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகப் பயிற்சிகளை செய்து, படித்தாலே போதும். ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த தேர்விற்கு 1-5 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படித்தால் போதும் என கூறியிருந்தாலும், 8-ம் வகுப்பு வரையும், பி.எட். தேர்விற்கு 6-8 ம் வகுப்பு வரை கூறியிருந்தாலும், 10-ம் வகுப்பு வரையும் உள்ளப் புத்தகங் களைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டால் இந்த தேர்வைச் சந்திப்பதற்கு எளிதாக இருக்கும். நிச்சயம் வெற்றி பெறலாம்."

- கு.பிரகாஷ்

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!