மற்ற எபிசோடுகள்
Published:Updated:

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

எறும்பு மாதிரி சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்பார்கள். சுறுசுறுப்புக்கு மட்டுமல்ல, நிர்வாக மேலாண்மை மற்றும் செயல்திறனுக்கும்கூட சிறந்த எடுத்துக்காட்டு எறும்புகள்தான்! உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஒரு காலனியையே உருவாக்கி அதைத் திறம்பட நிர்வகிப்பதில் எறும்பு களுக்கு நிகர் எறும்புகளே!

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

றும்புகளின் கடின உழைப்பு, அர்ப்பணிக் கும் குணம் மற்றும் தங்கள் காலனியின் நலனுக்காக எதையும் செய்யத் துணியும் குழு உணர்வு என இவைகள்தான் இந்த செயல்திறனுக்கு காரணம்.

இதுபோலத்தான் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கும் பணியாளர்களிடையே குழு உணர்வு மிக அவசியம். அதனால்தான் குழு உணர் வும், குழுத் திறன்களும் சிறந்த மேலாளர்களின் அடிப்படைத் திறன்களாகக் கருதப்படுகின்றன. எனவே புதிதாகச் சேரும் இளைஞர்கள் உயர்ந்த பதவிகளை அடைய தொழில்நுட்ப திறன்களோடு, குழுத் திறன்களையும் வளர்த்துக் கொள்வது அவசியம்.

பொதுவாகவே சேவைத் துறைகளில் மட்டுமின்றி உற்பத்தி சார்ந்த துறைகளிலும் குழுக்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சாஃப்ட்வேர் துறைகளில் புராஜெக்ட் குழுக்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. கால இலக்குகள் தொடக்கத்திலேயே வரையறுக்கப்படுவதால் புராஜெக்ட்களில் வேலைப்பளு அதிகம் உணரப் படுகிறது.

##~##
மேலும், குழு உறுப்பினர்களிடையே ஒருவருக் கொருவர் சார்ந்திருக்கும் நிலை அதிகம். ஏனெனில், உறுப்பினர்கள் குழுவின் இலக்குகளையும், தங்கள் தனிப்பட்ட வேலை இலக்குகளையும் அடைய ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதின் அவசியம் அதிகம். இத்தகைய வேலைப் பளு மற்றும் சார்பு நிலை அதிகம் உள்ள சூழ்நிலையில் பணியாற்ற நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள்...

1. ஒத்துப்போதல் (Adaptability): விரைவாகப் புதிய தொழில்நுட்பத் திறன்களைக் கற்றுக்கொள்வது; புதிய சகபணியாளர்களின் வேலை பாங்கோடு (Working Style) எளிதில் ஒத்துப்போவதையே இது குறிக்கும்.

2. இணைந்து செயலாற்றும் திறன் (Co-operation): புதியவர்களோடு இணைந்து பணியாற்றுவது, தனக்குத் தெரிந்த தொழில் நுணுக்கங்களை குழு உறுப்பினர்களோடு பகிர்ந்து கொள்வது, சகபணியாளர்களுக்கு உதவுவது போன்றவை இதில் அடங்கும்.

3. உறுதித் தன்மை (Assertiveness):  குழுவில் பெரும்பான்மையினர் நிராகரித்த போதும்கூட, சரியான கருத்தை வலியுறுத்தி முன்மொழியும் உறுதித் தன்மையை இது குறிக்கும். ஏனெனில் இது குழுவில் மந்தை மனப்பான்மை ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

4. சிறந்த மனப்பான்மை: குழுவில் பிறர் கூறுவதைக் காது கொடுத்து கேட்டு அவற்றின் நம்பகத்தன்மையையும், பயன்பாட்டையும் முழுமையாக எடை போட்ட பின்பு அதை ஏற்றுக்கொள்ளும் குணத்தை இது குறிக்கும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

திறமையின்மை காரணமாக உலகளவில் பத்து மில்லியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக உலக பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ரயில்வே துறையானது கெமிக்கல், மெட்டாலர்ஜிகல் அசிஸ்டென்ட் மற்றும் சூப்பர்வைஸர் உள்ளிட்ட 222 பதவிகளுக்கு ஆட்களை எடுக்கவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 21 கடைசி தேதி.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா கிளார்க் பதவிக்கு 453 நபர்களை எடுக்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 10 கடைசி தேதி.

புராஜெக்ட்டில் வாழ்க்கைச் சுழற்சியின் ஒவ்வொரு நிலையிலும் குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் உறவின் தன்மையும், பரிவர்த்தனைகளும் மாறுபடும். எனவே, இத்தகைய மாற்றங்களை அறிந்து கொள்வதும் கூட குழுத்திறன்களை வளர்த்துக் கொள்ள உதவும். இந்த மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. தொடக்க நிலை (Life Cycle): இது குழு உறுப்பினர்கள் முதன்முறையாகச் சந்தித்து கொள்ளும் கட்டம். புதிய மனிதர்களை அறிந்து கொள்ளும் ஆர்வம், இலக்குகளை அடைய முடியுமா என்ற கேள்வி, அதனால் ஏற்படும் பதற்றம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஊக்கம் என குழுவில் பல்வேறு உணர்வுகள் நிலவுவது இந்த நிலையில் சகஜம். உறுப்பினர்கள் ஏற்கெனவே முந்தைய புராஜெக்ட்களில் இணைந்து பணியாற்றியிருக்கும் பட்சத்தில், இத்தகைய உணர்வு களின் ஆதிக்கம் குறைவாக இருக்கும்.

அதேசமயம் அந்த முந்தைய அனுபவங்களில் பிரச்னைகள் ஏற்பட்டிருந்தால் அது புதிய புராஜெக்ட்டிலும் கசப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இத்தகைய நிலையில் நீங்கள் திறந்த மனதோடு உறுப்பினர்களை அணுகுவது அவசியம். ஏனெனில் இது அவர்கள் குறித்த தேவையில்லாத அனுமானங்களைத் தவிர்க்க உதவும்.

மேலும், புராஜெக்ட்  தொடங்கும் முன் உங்களுக்கு திட்ட வரைமுறைகள் குறித்த விளக்க ஏடுகள் தரப்பட்டிருந்தால் அவற்றை படித்துப் பார்ப்பது நல்லது. இது புராஜெக்ட்டில் உங்கள் பங்களிப்பில் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவும்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

2. குழப்ப நிலை (Storming Stage): புராஜெக்ட் குழுக்களில் ஆரம்ப நிலைகளில் உறுப்பினர்களிடையே குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. எது சரி, எது தவறு, குழுவில் நடத்தை வரையறைகள் என்ன என்பது போன்ற கேள்விகளால் உறுப்பினர்களிடையே மாற்று கருத்துக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.  

மேலும், முன்கூட்டியே தரப்பட்டுள்ள திட்ட வரையறை கள் தெளிவாக இல்லாத பட்சத்தில், இந்த குழப்பநிலை  நீடிக்கவே செய்யும். இதனால் உறுப்பினர்களிடையே குழு உணர்வும், மன உறுதியும் குறையும். இந்நிலையில் குழுவில் ஏற்பட்டுள்ள குழப்பச் சூழலை கடந்து தெளிவாகச் சிந்திக்க முயற்சி செய்யுங்கள். உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரும்போது, அவற்றைத் தீர்த்து வைத்து சுமூக உறவு வளர உதவி செய்யுங்கள். இதனால் குழுவில் உங்கள் மதிப்பு உயர்வதோடு உங்கள் தலைமை பண்புகளும் அதிகரிக்கும்.

3. வரைமுறை உருவாக்க நிலை (Norming Stage): இது குழுவில் இருந்த குழப்பங்கள் குறைந்து, நடத்தை வரைமுறைகள் குறித்த தெளிவு உருவாகும் நிலை. பெரும்பாலான சமயங்களில் எழுதப்பட்ட சட்ட வரைமுறை களைவிட, எழுதப்படாத குழு சார்ந்த வரையறைகளே உறுப்பினர்களிடையே நம்பிக்கை உணர்வும், ஒற்றுமையும் வளர உதவுகின்றன. அதே சமயம், இந்த வரையறைகள் மிகவும் இறுக்கமானதாக இருக்கும் பட்சத்தில் அது உறுப்பினர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், உருவாக்கத் திறனையும்  பாதிக்கக்கூடும். எனவே, இந்த கட்டத்தில் குழு ஒற்றுமையை வலியுறுத்தும் அதே சமயத்தில், தனிமனித கருத்தாக்கத்தையும் அங்கீகரிக்கக் கூடிய வரைமுறைகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

4. செயல்பாட்டு நிலை (Performance Stage): இது குழப்பங்கள் ஏதுமின்றி, ஒற்றுமை உணர்வோடு குழு தன் உச்சகட்ட செயல் திறனை அடையும் நிலை. தகவல் பரிமாற்றமும், இணைந்து செயலாற்றும் குணமும் இந்த நிலையில் அதிகம் காணப்படும். இந்த நிலையில், பிறரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இவற்றைத் தவறவிடாது உங்கள் குழுவின் சக உறுப்பினர்களிடமிருந்து உங்கள் வளர்ச்சிக்கு உதவும் திறன்களை கற்றுக் கொள்ளுங்கள். அதேபோல ஆர்வத்தோடு அணுகுபவர்களுக்கு உங்களுக்குத் தெரிந்தவற்றைக் கற்றுத்தர தயங்காதீர்கள். மேலும், தலைமை பொறுப்பு ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதை தன்னம்பிக்கையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

5. பிரிவு நிலை (Adjourning Stage): இது இலக்குகளை அடைந்தபின் குழு கலைந்து செல்லும் கடைசி நிலை. இந்நிலையில் முடிந்தவரை யாரோடும் பகைமையோ, வெறுப்புணர்வோ இன்றி விடைபெறுவது நல்லது. ஏனெனில், பிற்காலத்தில் அவர்களோடுச் சேர்ந்து பணியாற்றும் பிற வாய்ப்புகள் வரலாம். குழுவில் கிடைத்த நல்ல நண்பர்களோடு தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல, பணியிடத்திலும் உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

( தயாராவோம்)

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!
இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!

ஆர்த்தி ராஜாராமன்,
வில்லியம்ஸ் லீ நிறுவனம்

''ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஆசை பெரும்பாலான இளைஞர்களுக்கு உண்டு. பி.இ., எம்.சி.ஏ. போன்ற பட்டப்படிப்புகள் பெற்றால் மட்டுமே ஐ.டி. துறையில் பணியாற்ற முடியும் என அனைவரும் நினைக்கிறார்கள். பி.காம், பி.ஏ., எம்.ஏ., பி.எல்., எம்.பி.ஏ., முடித்தவர்கள் கூட ஐ.டி. துறையில் பணியாற்றலாம். இந்த படிப்புடன் கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் போதும். வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் தங்களது பேலன்ஸ் ஷீட் தயாரிக்கவும், காலாண்டு முடிவுகள் தயாரிக்கவும் இங்குள்ள நிறுவனங்களை அணுகுகிறார்கள். இந்த பணிகளை பி.காம். மற்றும் எம்.காம். முடித்தவர்கள் செய்யலாம்.

இதுபோல ரியல் எஸ்டேட் துறையில் அக்ரிமென்ட் பத்திரம், வில்லங்கம் போன்ற ஆவணங்களைத் தயாரித்துக் கொடுப்பதற்கு சட்டம் படித்தவர்கள்தான் தேவை என்றில்லை. சாதாரண டிகிரி முடித்தவர்களும் செய்து கொடுக்கலாம். மேலும், விஸ்காம் படித்தவர்கள் இங்கிருந்தே வெளிநாடுகளுக்கு விஷ§வல் கிராஃபிக்ஸ் செய்து கொடுப்பதும் தற்போது அதிகளவு நடக்கிறது. எங்கள் நிறுவனத்தில்கூட இதுபோன்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து வேலைக்கு அமர்த்துகிறோம். நல்ல சம்பளம் கிடைக்கும் என்பதால் ஐ.டி. துறையில் அனைவரும் கலக்கலாம்'' என்றார்.

-பானுமதி அருணாசலம்.

இளைஞர்களுக்கான நாணயம் ஜாப்!