தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

2022-ல் பங்குச் சந்தை 5% வளர்ச்சி... ஈக்விட்டி ஃபண்டுகள் 20% வருமானம் தந்தது எப்படி?

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

முடிவடைந்த 2022-ம் ஆண்டின் ஆரம்பம் முதல் டிசம்பர் 26 வரையிலான காலத்தில் இந்தியப் பங்குச் சந்தையின் முக்கியமா குறியீடு களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் சுமார் 5% உயர்ந்துள்ளது.

ஹசன் அலி 
நிறுவனர், 
Siptiger.com
ஹசன் அலி நிறுவனர், Siptiger.com

அதிக லாபம் தந்த மியூச்சுவல் ஃபண்டுகள்...

இந்த நிலையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பல, இரட்டை இலக்கத்தில் வருமானம் தந்திருக்கின்றன. சில திட்டங்கள் 20 சத விகிதத் துக்கும் மேல்கூட வருமானம் கொடுத்துள்ளன. முதலீட் டாளர்களுக்கு இவ்வளவு அதிக வருமானம் கிடைக்க காரணம், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறைதான்.

20 சதவிகிதத்துக்கும் மேல் வருமானம் தந்த 20 ஃபண்டுகள்...

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டதில் கிட்டத்தட்ட 20 ஈக்விட்டி ஃபண்டுகள் 2022-ல் 20 சத விகிதத்துக்கும் மேல் வருமானம் தந்திருக்கின்றன. அதே நேரத்தில், மொத்த முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் பங்குச் சந்தை கொடுக்கும் வருமானத்தை ஒட்டியே ஈக்விட்டி ஃபண்டு களும் வருமானம் தந்திருக் கின்றன.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்டதில் குவான்ட் வேல்யூ ஃபண்டு தான் மிக அதிகமாக 31.5% வருமானம் கொடுத்துள்ளது.

2022-ம் ஆண்டில் ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் கணிசமான வருமானம் தந்திருக்கின்றன. டாடா ஸ்மால்கேப் ஃபண்ட் சுமார் 28%, குவான்ட் மிட்கேப் ஃபண்ட் 27.50% வருமானம் தந்திருக்கிறது. ஏழு திட்டங் கள் 25 சதவிகிதத்துக்கும் மேல் வருமானம் தந்திருக் கின்றன.

ஃபண்ட் நிறுவனப்படி பார்த்தால், எஸ்.ஐ.பி முறை யில் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டதில் 20 சதவிகிதத்துக்கு மேல், வருமானம் தந்த அதிக திட்டங்களைக் கொண்ட முதல் நிறுவனமாக குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் இருக் கிறது. இந்த நிறுவனத்தின் ஏழு ஈக்விட்டி ஃபண்டுகள் 2022-ம் ஆண்டில் 20 சதவிகி தத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன.

இதே போல, ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்த ஆறு ஈக்விட்டி திட்டங்கள் 20 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன.

எஸ்.பி.ஐ கான்ட்ரா ஃபண்ட், கோட்டக் மல்ட்டி கேப் ஆகியவையும் 20 சத விகித்துக்கு மேல் வருமானம் தந்துள்ளன.

2022-ல் பங்குச் சந்தை 5% வளர்ச்சி...
ஈக்விட்டி ஃபண்டுகள் 20% வருமானம் தந்தது எப்படி?

ஃபண்ட் பிரிவுப்படி பார்த்தால், 2022-ல் எஸ்.ஐ.பி முறையில் தலா நான்கு வேல்யூ ஃபண்டுகள் மற்றும் மல்ட்டிகேப் ஃபண்டுகள் 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்துள்ளன. மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்ட் பிரிவைச் சேர்ந்த மூன்று ஃபண்டுகள் 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் தந்துள்ளன. ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகள், லார்ஜ் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் மற்றும் இ.எல்.எஸ்.எஸ் பிரிவைச் சேர்ந்த தலா இரண்டு ஃபண்டுகள் 20 சதவிகிதத்துக்குமேல் வருமானம் கொடுத்துள்ளன.

ஃபோகஸ்டு ஃபண்ட், கான்ட்ரா ஃபண்ட், லார்ஜ்கேப் பிரிவில் தலா ஒரு ஃபண்ட் 20 சத விகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துள்ளன. (பார்க்க அட்டவணை) சில ஈக்விட்டி ஃபண்டுகள் 2022-ம் ஆண்டில் நெகட்டிவ் வருமானம்கூட தந்திருக்கின்றன. எனவே, ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும்.

2022-ல் பங்குச் சந்தை 5% வளர்ச்சி...
ஈக்விட்டி ஃபண்டுகள் 20% வருமானம் தந்தது எப்படி?

எஸ்.ஐ.பி முறையில் அதிக வருமானம் கிடைக்க காரணம்...

2022–ல் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 5% வருமானம் கொடுத்திருக்கும் நிலையில் இந்த 20 ஃபண்டுகள் எப்படி 20% வருமானம் தந்தன என்கிற கேள்வி சிறு முதலீட்டாளர்களுக்கு எழுவது இயற்கையே. இந்த ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுக்க, அதன் ஃபண்ட் மேனேஜர்களின் திறமை மற்றும் முதலீட்டாளர்களின் பொறுமை ஆகும். அதாவது, ஃபண்ட் மேனேஜர்கள் பங்குச் சந்தை மற்றும் நிறுவனப் பங்குகளின் ஏற்ற இறக்கத்தை சரியாகக் கணித்து சரியான பங்குகளை சரியான நேரத்தில் வாங்கி இருப்பதுடன், சரியான நேரத்தில் விற்று லாபம் பார்த்திருக் கிறார்கள்.

இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர் களும் சந்தை இறக்கத்தின்போது பயத்தில் யூனிட்டுகளை விற்று விட்டு வெளியேறாமலும், எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்தாமலும் இருந்தால் மட்டுமே இந்த 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட லாபம் கிடைத்திருக்கும். அதே நேரத்தில், சந்தை இறக்கத்தில் கூடுதல் முதலீடு செய்திருப்பவர் களுக்கு இதைவிட கூடுதல் லாபம் கிடைக்கும்.

2022-ல் பங்குச் சந்தை 5% வளர்ச்சி...
ஈக்விட்டி ஃபண்டுகள் 20% வருமானம் தந்தது எப்படி?

இங்கே அலசப்பட்டிருக்கும் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறை யில் முதலீடு செய்ய வேண்டும் எனப் பரிந்துரை செய்யவில்லை. காரணம், ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை யில் கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் நிச்சயமில்லை.

மேலும், ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டுக்கு வருபவர்களின் முதலீட்டுக் காலம் கட்டாயம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்க வேண்டும்.

ஒரு ஃபண்ட் தொடர்ந்து கடந்த 3 ஆண்டு, 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகளில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தைக் கொடுத் துக்கொண்டிருக்கும் பட்சத்தில் அதில் முதலீடு செய்யலாம் என்பதை மறக்காதீர்கள்!