மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!

கல்வி-வேலை

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!

என்னதான் பெட்ரோல் விலை ஏறினாலும் கார் வாங்குவதையும், டூ வீலர் வாங்குவதையும் யாரும் நிறுத்தப் போவதில்லை. ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஒரு டூ வீலராவது இருக்கவே செய்கிறது. பல வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தனது தயாரிப்பு யூனிட்களை நடத்தி வருகிறது. பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கிவரும் ஆட்டோ துறை குறித்து இந்த வாரம் சொல்கிறார் நவ்கரி டாட் காம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் தலைவர் சுமித் சிங்.

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!

''ஆட்டோ துறையைப் பொறுத்த வரை இன்னும் மூன்று வருடங்களில் ஐந்து மில்லியன் நபர்கள் நேரடி மற்றும் மறைமுகப் பணிக்கு எடுக்கப்பட இருப்பதாக சொஸைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய வாகனங்களின் தேவையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும், 2012-2016-ம் ஆண்டு வரை இன்னும் கூடுதலாக ஏழு மில்லியன் நபர்களை எடுக்க இருப்பதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. கார் மற்றும் பைக்குகளின் தேவையை இந்தியாவில் இந்த நிதியாண்டில் 24% அதிகரித்துள்ளதால் இங்கிருக்கும் இன்ஜினீயர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

கிராமத்து மக்களின் தேவை மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆட்டோ துறைக்கான தேவை அதிகரித்துள்ளதால் கார் மற்றும் டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்பு யூனிட்களை விரிவாக்கம் செய்து வருகிறது.

புதிய கார்கள் வடிவமைப்பு செய்யப் பட்டு ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கும் இங்கிருந்துதான் செல்கின்றன. எனவே, ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை, பல வகையான வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது. தகுதியான நபர்களுக்கு அதிகப்படியான சம்பளமும் வழங்கப்படுகிறது.

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!
##~##
என்னென்ன வேலைகள்?

இன்ஜினீயரிங், ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட், நிதி நிர்வாகம், மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். எம்.பி.ஏ. படித்து மார்க்கெட்டிங் துறையில் பத்து வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு 8,00,000 ரூபாய் வரை முன்னணி நிறுவனங்கள் சம்பளம் வழங்குகிறது. புது வாகனங்களின் விலையை நிர்ணயிப்பது, செலவுகளைக் குறைப்பது, போட்டி நிறுவனங் களின் செயல்பாடுகளை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட் பணிக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!

இதற்கு காமர்ஸ் படிப்பில் முதுகலை பட்டமும் அல்லது எம்.பி.ஏ. படிப்பில் ஃபைனான்ஸ் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்தும் படித்திருக்க வேண்டும். கார் வடிவமைப்புக்கும், புதுப்புது தொழில்நுட்பங்களுடன் புதிய கார்களை வடிவமைப்பதற்கும் மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்தவர் களுக்கு முன்னுரிமை கொடுக் கப்படுகிறது. இதிலும் அனுபவம் கொண்டவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.

நாணயம் ஜாப்: அட்டகாசமான ஆட்டோ துறை!


சம்பள உயர்வு!

ஆட்டோமொபைல் துறையைப் பொறுத்தவரை சம்பள உயர்வு என்பது பத்து முதல் பதினைந்து சதவிகிதமாக இருக்கிறது. சில நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து அதை அடைந்தால் அதற்கு தகுந்த பதவி உயர்வும், சம்பளமும் கிடைக்கும்.

- பானுமதி அருணாசலம்