மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

மேனேஜ்மென்ட் குரு!  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

நீங்கள் எம்.பி.ஏ. படித்து முடித்து மேனேஜர் ஆகப் போகிறீர்களா? நீங்கள் நன்றி சொல்லவேண்டிய முதல் மனிதர் பீட்டர் டிரக்கர் (1909-2005). ஏன் தெரியுமா? நிர்வாகத் திறமைக்கும் வயதுக்கும் பெரிய சம்பந்தம் எதுவுமில்லை என்பதை முதன் முதலில் எடுத்துச் சொன்னவர் இந்த பீட்டர் டிரக்கர்தான்.  

டிரக்கர் களத்தில் நுழையும் வரை நிர்வாகத் திறமை அனுபவத்தால் மட்டுமே வரும்; படிப்பால் அதைப் பெற முடியாது என்று எல்லோருமே நம்பினார்கள். அங்கீகார வெளிச்சம் விழவேண்டுமானால், தாடியும் மீசையும் நரைத்திருக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. அப்போது டிரக்கர், தனது 30-ம் வயதில் The End of Economic man என்னும் புத்தகத்தை வெளியிட்டார்.  

இந்த புத்தகத்தைப் படித்துப் பார்த்த இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், 'தன் திடுக்கிடவைக்கும் கருத்துகளால், நம் சிந்தனையைத் தூண்டியவர்'' என்று மனமாரப் பாராட்டினார். சர்ச்சில் மட்டுமல்ல,  ஜெனரல் எலெக்ட்ரிக், கோகோ கோலா, ஐ.பி.எம், இன்டெல், சிட்டி பேங்க் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் டிரக்கரின் திறமை கண்டு வியந்தன. அவரிடம் நிர்வாக ஆலோசனை கேட்டன. நிர்வாகத் திறமைக்கு அனுபவம் வேண்டாம், படிப்பு அறிவு போதும் என கம்பெனிகள் உணர்ந்தன. இளைஞர்களுக்கு மேனேஜர்  பதவி கதவுகளை திறந்துவிட்டன. அந்த கதவு வழியாகத்தான், நீங்களும் கார்ப்பரேட் உலகத்தில் எளிதாக நுழையப் போகிறீர்கள்.        

தன் 30-ம் வயதில் எழுதத் தொடங்கியவர் 95 வயது வரை எழுதிக்கொண்டேயிருந்தார். மொத்தம் 41 புத்தகங்கள். இவற்றில் ஒன்றுகூட சொத்தை இல்லை.  பிஸினஸோடு தொடர்புகொண்ட ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து, தங்கள் செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வைத்த நூல்கள். அதில் Practice of Management கட்டாயம் படித்தாக வேண்டிய புத்தகம்.    

1939-ல் முதலாவதாக எழுதிய The End of Economic man புத்தகம் தொடங்கி, ஒவ்வொரு புத்தகத்திலும், டிரக்கரின் தொலைநோக்குப் பார்வையும், கருத்துகளை எடுத்துவைக்கும் துணிச்சலும் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அன்றைய காலகட்டத்தில், உழைப்பு என்றால், வெறும் உடல் உழைப்பு மட்டும்தான். 1980-க்குப் பிறகுதான், கம்ப்யூட்டர், இணையதளம், இ-மெயில் ஆகியவை பரவலாகப் பயன்படத் தொடங்கின. இந்த காலகட்டம் தகவல் பரிமாற்றப் புரட்சி (Information Revolution) காலம் என்று அழைக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் திரையில் மாயாஜாலம் காட்டி, தன் வீட்டுக்கும், கம்பெனிக்கும், நாட்டுக்கும் டாலர்களைக் கொண்டுவந்து குவிக்கிறார்களே, டி.சி.எஸ்., விப்ரோ, இன்ஃபோசிஸ், காக்னிசன்ட், ஹெச்.சி.எல். போன்ற சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பணிபுரியும்      அஞ்சலி, அகிலா, கிருத்திகா, பிரீத்தி, மீனாட்சி, அத்வைத், மது, முகுந்த், நாராயணன், கார்த்திகேயன் ஆகிய இளைஞர் படையின் உழைப்பு மூளை உழைப்பு, அறிவின் உழைப்பு. இப்படி ஒரு வர்க்கம் உருவாகும் என்று கணித்தவரும், அவர்களுக்கு அறிவு உழைப்பாளிகள் (Knowledge Workers) என்று பெயர் சூட்டியவரும் டிரக்கர்தான்!              

இன்று இந்தியாவும், சீனாவும் பொருளாதார வல்லரசு கிரீடத்தை அமெரிக்காவிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சியில் மும்முரமாக இருக்கின்றன. இதற்குக் காரணம்,  அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்தியை சீனாவுக்கும், அக்கவுன்டிங், சம்பளப் பட்டுவாடா, ஹெச்.ஆர். பணிகளை இந்தியாவுக்கும் புலம்பெயர்த்தத் தொடங்கியதுதான். அவுட்சோர்ஸிங் என்னும் இந்த துறை ஆலமரமாகும்; மரம் விழுதுகள் விடும்; விழுதுகள் வேர்கள் விடும்; வேர்கள் மரங்கள் தரும்; தனிமரம் காடாகும் என்று கணித்தவர் டிரக்கர்தான்! கர்ணன் காதுக் குண்டலங்களோடு அவதரித்ததுபோல், டிரக்கரும், வருங்காலத்தைத் துல்லியமாகக் கணிக்கும் பைனாக்குலர்களோடு பிறந்துவிட்டாரோ?  

##~##
இவை மட்டுமா? பிஸினஸ் என்றால் என்ன, மேனேஜ்மென்ட் என்றால் என்ன என்று அகராதியும், கலைக் களஞ்சியமும் எழுதியவர் டிரக்கர். அவர் அரங்கத்துக்குள் வருவது வரை, பிஸினஸ் என்றால் லாபம் பார்க்கும் நடவடிக்கை, மேனேஜ்மென்ட் என்றால், லாபம் பார்க்க முதலாளிகள் பயன்படுத்தும் யுக்தி என்றுதான் எல்லோரும் நம்பினார்கள். இதனால், ஆடம் ஸ்மித் போன்ற பொருளாதார மேதைகளும், ஹென்றி ஃபோர்டு, ஃபிரெடரிக் டெய்லர் போன்ற பொறியியல் வல்லுநர்களும் மட்டுமே பிஸினஸ் உலகின் ஹீரோக்களாக இருந்தார்கள். வில்லியம் ஜேம்ஸ், எல்ட்டன் மேயோ ஆகிய மனோதத்துவ அறிஞர்கள் துணை நடிகர்கள்தாம்.

மேனேஜ்மென்ட்  பொருளாதாரத்தின் கிளைக்கதையாக நடத்தக்கூடாது. அது தனித் துறை. பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்ற அறிவியல் துறைகளும், மனோதத்துவம் போன்ற கலைகளும் சங்கமிக்கும் தனிப்பெரும் கடல். லாபம் பார்க்க உதவும் கருவியாக மட்டுமே பயன்படுத்தி, இந்த கடலை, குழம்பிக் கிடக்கும் குட்டையாக்கி விடாதீர்கள் என்று டிரக்கர் எச்சரிக்கை மணியடித்தார். அவருடைய தனிமனித முயற்சியால்தான் மேனேஜ்மென்டின் எல்லைகள் விரிந்தன. பொருளாதாரம், அறிவியல், மனோதத்துவம் ஆகியவற்றோடு மேனேஜ்மென்டுக்கும் சரியாசனம் கிடைத்தது. மேனேஜ்மென்ட் என்கிற துறை உருவானது, தனி சாம்ராஜ்ஜியமாக வளர்கிறது.      

மேனேஜ்மென்ட் என்றால் என்ன, பிஸினஸை மேனேஜ் பண்ணுவது எப்படி, மேனேஜர்களை எப்படி நிர்வகிக்க வேண்டும், தொழிலாளிகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்று முதன் முதலாக வரையறுத்தவர் டிரக்கர்தான்.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

என்று வரிசையாகப் பதில்களை அடுக்குகிறீர்களா? அட, நீங்க செம புத்திசாலி!   உங்களுடைய  எல்லா பதில்களும் கரெக்ட்.

நீங்கள் லிஸ்ட் போட்ட அத்தனை வேலைகளையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க மேனேஜர்களுக்குப் பல திறமைகள் இருக்க வேண்டும். எது இருக்கிறதோ இல்லையோ, ஒரே ஒரு திறமை கட்டாயம் வேண்டும். அந்த திறமை, முடிவெடுக்கும் திறமை. முடிவுகள் எடுக்கத் தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள், தெரியாதவர்கள் தோற்கிறார்கள்.

இதை சாதிக்க, மேனேஜர்கள் அதிமேதாவிகளாக இருக்கவேண்டுமா? இல்லை, சாதாரண மனிதர்களும் வழி நடத்திச் செல்லும்படியாக கம்பெனிகளை உருவாக்கவேண்டும் என்றார் டிரக்கர். சாதாரணமாக மேனேஜ்மென்ட்  மேதைகள் மானாவாரியாக ஆலோசனைகளை அள்ளி வீசிவிட்டுப் போவார்கள். அவை சாத்தியமா, இல்லையா, அவற்றைச் செயல்படுத்துவது எப்படி என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.  

ஆனால், தான் சொன்ன கருத்துகளுக்கு  டிரக்கர் தார்மீகப் பொறுப்பேற்றார். முடிவெடுக்கும் திறமை நிறுவனத்தின் தலைவர் முதல் கடைநிலை ஊழியர் வரை எல்லோரிடமும் இருக்கவேண்டும் என்று அடித்துச் சொன்ன டிரக்கர், அதற்குக் காட்டிய பாதை - இலக்குகள் வழி நிர்வாகம் (விணீஸீணீரீமீனீமீஸீt தீஹ் ளிதீழீமீநீtவீஸ்மீs).        

இந்த கொள்கை என்ன சொல்கிறது? கம்பெனிகளில், முதலாளிகள் மட்டுமே நிறுவனங்களின் வருங்கால இலக்குகளை முடிவு செய்வார்கள். உதாரணமாக, ஏபிசி கம்பெனி சோப் தயாரிக்கும் கம்பெனி என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் முதலாளி சரவணன். அவர்களின் வருட விற்பனை       100 கோடி. அடுத்த வருடம் தங்கள் விற்பனை 110 கோடியைத் தொடவேண்டும், அதாவது, 10 சதவிகிதம் அதிகமாகவேண்டும் என்று சரவணன் விரும்புகிறார். என்ன செய்வார்? தன் சேல்ஸ் மேனேஜரிடம் விற்பனை 110 கோடியாக வேண்டும் என்று சொல்லுவார். (இல்லை, கட்டளை இடுவார்!) சேல்ஸ் மேனேஜர் தன் கீழ் பணியாற்றும் நான்கு  ஏரியா மேனேஜர்களிடமும் இந்த கட்டளையைத் தெரிவிப்பார். 110 கோடியை நான்கு பேரிடமும் பங்கிட்டுக் கொடுப்பார். ஏரியா மேனேஜர், தன் பங்கை, தன் கீழ் வேலை பார்க்கும் ஐந்து விற்பனைப் பிரதிநிதிகளிடமும் பங்கு போடுவார்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஐந்து  விற்பனைப் பிரதிநிதிகளில் ஒருவர் முத்து. மிகத் துடிப்பானவர். அவரிடம், தன் விற்பனையை 10% அதிகமாக்குமாறு ஏரியா மேனேஜர் சொல்கிறார். 10 சதவிகித உயர்வு முத்துவுக்கு ஜுஜுபி. அவரையே தன் இலக்கை நிர்ணயிக்கச் சொன்னால், அவர் 20 சதவிகித உயர்வைக் காட்டுவார். ஆனால், இலக்கைத் தீர்மானிப்பதில் அவருக்குப் பங்கே கொடுக்காவிட்டால், 10 சதவிகித வளர்ச்சியோடு தன் விற்பனையை நிறுத்திக்கொள்வார்.

இதைத்தான் டிரக்கரின் விஙிளி கொள்கை சொல்கிறது. ஊழியர்களின் முழுத்திறமையும் வெளிப்பட வேண்டுமானால், இலக்குகளை நிர்ணயிப்பதில் எல்லா ஊழியர்களையும் பங்கேற்க வைக்கவேண்டும் என்கிறது. உலகில் ஏகதேசம் எல்லாக் கம்பெனிகளும் இன்று கடைப்பிடிக்கும் கொள்கை இது.            

லாபம் தேடும் பிஸினஸ் நிறுவனங்கள் மட்டுமே மேனேஜ்மென்ட் கொள்கைகளைப் பயன்படுத்த முடியும் என்னும் எண்ணம் அந்த நாட்களில் இருந்தது. டிரக்கர் இந்த மாயபிம்பத்தைச் சுக்கு நூறாக்கினார். அரசாங்கம், சேவை நிறுவனங்கள் என எங்கெல்லாம் ஆட்கள் பணிபுரிகிறார்களோ, அங்கெல்லாம் மேனேஜ்மென்ட் தேவை என்று அடித்துச் சொன்னார். இத்தகைய நிறுவனங்களின் நிர்வாகத் திறமைகளின் பலனை அனுபவிக்கும்போதெல்லாம், நாம் டிரக்கருக்கு நன்றி சொல்லவேண்டும்.    

(கற்போம்)
படம்: ர.அருண்பாண்டியன்.