பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

கால் நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவில் நான்கு கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் கால் நூற்றாண்டைக் கடந்து சாதனை படைத்துள்ளன.

முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், நிலையான வருமானம் எதிர்பார்ப்பவர் களுக்கு ஏற்றதாக கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கின்றன. குறிப்பாக, குறுகிய கால நிதித் தேவை களுக்கு கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. இவை மிக நீண்ட காலமாக வங்கி மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர்,  https://www.wmsplanners.com/

ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்கம் ஃபண்ட், டி.எஸ்.பி பாண்ட் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் டெப்ட் ஃபண்ட், ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட் ஆகிய கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளன. இந்த ஃபண்டுகள் ஆரம்பம் முதல் சுமார் 6 முதல் 9 சத விகிதம் வருமானம் கொடுத் திருக்கின்றன.

பொதுவாக, கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்தால் கடன் ஃபண்டுகளின் வருமானம் குறையும். இதேபோல், கடனுக்கான வட்டி விகிதம் குறைந்தால், கடன் ஃபண்டுகளின் வருமானம் அதிகரிக்கும்.

ஜே.எம் மீடியம் டு லாங்க் டூரேஷன் ஃபண்ட்

இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட முதல் கடன் ஃபண்ட் ஆகும். ஆரம்பித்து கிட்டத் தட்ட 27 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஃபண்ட் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது.

மேலும் கடந்த 10 ஆண்டு, ஐந்தாண்டு, மூன்றாண்டு மற்றும் ஓராண்டுக் காலத்தில் இதன் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட குறை வாகத்தான் வருமானம் கொடுத்து வருகிறது. கடந்த ஓராண்டுக் காலத்தில் சுமார் 0.35 சதவிகிதம்தான் வருமானம் கொடுத்திருக் கிறது. மேலும், இந்த ஃபண்ட் அதிக ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டதாகும். ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 6 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

கால் நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்கம்ஃபண்ட்

இந்த ஃபண்ட் மீடியம் டு லாங்க் டூரேஷன் பிரிவை சேர்ந்ததாகும். ரூ.1,538 கோடியை நிர்வகித்து வரு கிறது. இதன் பெஞ்ச் மார்க்கை விட அதிக வருமானத்தைத் தொடர்ந்து அளித்து வருகிறது.

கடந்த ஓராண்டில் சுமார் 3 சதவிகித வருமானத்தைத் தான் தந்திருக்கிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

கால் நூற்றாண்டு கடந்த 4 கடன் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

ஹெச்.டி.எஃப்.சி டைனமிக் டெஃப்ட் ஃபண்ட்

இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ, அதன் பெயருக்கு ஏற்ப வட்டி விகித மாற்றத்தை அனுசரித்து, நிதி மேலாளர் முடிவுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும்.இந்த ஃபண்ட் மூலம் ரூ. 505 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 8.15 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

டி.எஸ்.பி பாண்ட் ஃபண்ட்

இது ஒரு மீடியம் டூரேஷன் ஃபண்ட் ஆகும். இந்த ரூ.341 கோடியை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்ட் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 7.75% சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது.

முதலீடு செய்யலாமா?

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் நீண்ட காலமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதால் மட்டும் அதில் முதலீடு செய்யத் தேவையில்லை. முதலீட்டுக் காலத்தைப் பொறுத்தும் கடந்த ஓராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டுகளில் பணவீக்க விகிதத்தை விட அதிக வரும் தந்திருக்கும் கடன் ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.