மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

கம்பெனிகள் தங்கள் ஊழியர்களின் செயல்பாட்டினை ஆண்டுக்கொரு முறை எப்படி மதிப்பீடு செய்கின்றன, எப்படி மதிப்பீடு செய்தால் சரியாக இருக்கும் என கடந்த இதழில் விளக்க மாகப் பார்த்தோம்.

##~##
தாவது, எந்த ஒரு பொருளையும் அல்லது மனிதனையும் எல்லா கோணங்களிலிருந்தும் பார்ப்பதே 360 டிகிரி மதிப்பீடு. ஒரே பொருள் அல்லது மனிதன்தான் என்றாலும் ஒவ்வொரு கோணத்திலும் மதிப்பீடுகள் மாறுபடுகிறது. எனவே, ஒன்றினைப் பற்றி முழுமையாகத் தெரியவேண்டுமானால்,  எல்லாக் கோணங் களிலிருந்தும் பார்ப்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த 360 டிகிரி மதிப்பீட்டை நீங்கள் உங்கள் நிறுவனத் திலும் செய்யலாம். உங்கள் கம்பெனி பெயர் இந்தியா இண்டஸ்ட்ரிஸ். பெரிய பெரிய இயந்திரங் களைத் தயாரிக்கும் நிறுவனம். தொழிற்சாலையில் மெஷினிங் என்ற பிரிவுக்கு நீங்கள் சூப்பர்வைஸர். இதில் மூன்று பிரிவுகள் உண்டு. செந்தில், ராபர்ட், சேகர் ஆகியோர் இந்தப் பிரிவுகளின் சூப்பர்வைஸர்கள்.

உங்கள் அனைவருக்கும் மேலதிகாரி புரொடக்ஷன் மேனேஜர் மணி. உங்களின் கீழ் ஐந்து ஆபரேட்டர்கள் வேலை பார்க்கிறார்கள். கம்பெனியில் ஆபரேட்டர்களுக்கு நீங்கள் மேல்அதிகாரி. செந்தில், ராபர்ட், சேகருக்கு சகா. மணிக்குக் கீழ் பணிபுரிபவர். நீங்கள் வேலையில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்..?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஐந்து ஆபரேட்டர்களும் தங்கள் இலக்குகளை எட்ட வேண்டும். ஒரு பிரிவிலிருந்து அடுத்த பிரிவுக்குக் காலதாமதமில்லாமல் பாகங்கள் போனால்தான், மொத்த உற்பத்தி சீராக நடக்கும். எனவே, செந்தில், ராபர்ட், சேகர் ஆகிய மூன்று பேரும் தங்கள் வேலையைச் செம்மையாகச் செய்யவேண்டும். உங்களு டைய திட்டங்களை நிறைவேற்ற, மணி ஊக்கமும் தேவைப்படும்போது உதவிகளும் தரவேண்டும்.

இவை மட்டும் போதுமா? பர்ச்சேஸ் பிரிவு தேவையானப் பொருட்களைச் சரியான நேரத்தில் உங்களுக்கு அளிக்கவேண்டும். தரக்கட்டுப்பாட்டுப் பிரிவினர் தாமதமில்லாமல் நீங்கள் தயாரித்தப் பாகங்களைச் சோதனை செய்யவேண்டும். நீங்கள் இத்தனைபேரை நம்பியிருப்பதுபோல், உங்கள் முயற்சியையும் நம்பிப் பலர் இருப்பார்கள். கூட்டு உழைப்பின் ஆதாரமே இதுதானே?  

MBA - மூன்றெழுத்து மந்திரம்
MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஒரு வருடம் முடிந்துவிட்டது. உங்களுடைய சாதனை எடை போடப்படுகிறது. மணி எப்படி உங்கள் உழைப்பை எடை போடுவார்? முன்னாட்களில், மணி மனக்கணக்குப் போடுவார். தன் மதிப்பீட்டை முடிவு செய்வார்.

இன்று, இந்தியா இண்டஸ்ட்ரிஸ் 360 டிகிரி மதிப்பீட்டை அல்லவா கடைப்பிடிக்கிறது? மணி, ராகவ், செந்தில், ராபர்ட், சேகர், ஐந்து ஆபரேட்டர்கள், பர்ச்சேஸ் பிரிவு அதிகாரி, தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரி ஆகிய அத்தனை பேரிடமும் கேள்விப் படிவங்கள் தரப்படும். எல்லாம் ஒரே கேள்விகளல்ல. எந்தப் படிநிலை வேலையில் இருப்பவர்கள் எந்தக் குணநலன்களை மதிப்பீடு செய்யலாம் என்பதை வல்லுநர்கள் வரையறுத்தபடி இப்படிவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே, மதிப்பீடு மிகத் துல்லியமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

360 டிகிரி மதிப்பீட்டில் ஒரு ஊழியரை எடை போட யார் யார் கலந்துகொள்வார்கள்?

• ஊழியர் (சுய மதிப்பீடு)

• அவருடைய மேல் அதிகாரி

• அவர் கீழ் வேலை பார்ப்பவர்கள்

• ஊழியரின் சக அதிகாரிகள்

• ஊழியரின் பணியோடு நெருங்கிய தொடர்புகொண்ட பிற ஊழியர்கள்

சில நிறுவனங்களில் வெளியாட்களையும் பங்குபெறச் செய்வதுண்டு. விற்பனைப் பிரதிநிதிகளின் சாதனைகளை எடை போட வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டையும் எடுத்துக்கொள்வதுண்டு.

360 டிகிரி மதிப்பீடு பாரபட்சமற்றதாக, பயனுள்ளதாக இருப்பதால், ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள், இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல்., விப்ரோ போன்றவை இந்த முறையைப் பின்பற்றுகின்றன.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இந்தச் செயல்முறை மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு சின்ன பயிற்சி தருகிறேன். தமிழகத்தில் எட்டு நகரங்களில் சூப்பர் மார்க்கெட் நடத்தும் நீங்கள் பர்ச்சேஸ், மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ் வேலைகளை தலைமையேற்று செய்ய ஒரு ஜெனரல் மேனேஜரைத் தேடுகிறீர்கள். நீண்ட ஆலோசனைக்குப் பின், நான்கு பேரைத் தேர்வு செய்கிறீர்கள்.  

1. குமார் - வயது 36. பட்டதாரி. பர்ச்சேஸ் துறையில் எட்டு ஆண்டு அனுபவம். மகா திறமைசாலி; அடிமாட்டு விலைக்குச் சாமான்கள் வாங்குவார். ஆனால், சப்ளையர் களிடம் லஞ்சம் வாங்குகிறாரோ என்று சந்தேகம்.

2. ரவி - மார்க்கெட்டிங் மேனேஜர். வயது 42. படிப்பு ப்ளஸ்2. பத்து வருட வேலை அனுபவம் கொண்ட  இவருக்கு கற்பனாசக்தி அபாரம். வாடிக்கையாளர்களிடம் அன்பாகப் பழகுவார். ஆனால், கோபம் வந்தால் ஊழியர்களை அடிப்பார்.  

3. மணி - ஃபைனான்ஸ் மேனேஜர். வயது 50. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸி படித்த ஆடிட்டர். பன்மொழி வித்தகர். கம்பெனிப் பணத்தைத் தன் பணமாக நினைப்பார். விளம்பரம் வெட்டிச் செலவு என்று நம்புபவர்.  

4. பாலாஜி - வயது 27. எம்.பி.ஏ. படித்தவர். நமக்கு சப்ளை செய்யும் பன்னாட்டுக் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்.  

இவர்களில் யாரை நீங்கள் ஜெனரல் மேனேஜர் ஆக்குவீர்கள், ஏன்? உங்கள் பதில்களை 100 வார்த்தை களுக்கு மீறாமல் pdf word document attachment-ஆக வருகிற 29-ம் தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய முகவரி: mba@vikatan.com.

தேர்ந்தெடுக்கப்படும் 3 சிறந்த பதில்களுக்குப் பரிசு உண்டு.

படம்:  ரா.நரேந்திரன்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்