மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

படங்கள்: பீரகா வெங்கடேஷ்.

 ##~##

நாம் ஏன் பிஸினஸைப் பந்தயமாகவோ, யுத்தமாகவோ நினைக்கிறோம்? ஏனென்றால், நம் எல்லோரையும் பொறுத்தவரை, பிஸினஸில் ஒரே ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியும். அதாவது, மற்ற எல்லோரும் தோற்கவேண்டும். இந்தக் கண்ணோட்டமே தவறு என்கிறார் மைக்கேல் போர்ட்டர்.

டிசம்பர் மாதம் சென்னையில் மியூசிக் அகாடமி, நாரத கான சபா போன்ற ஏராளமான அரங்கங்களில் சுதா ரகுநாதன், அருணா சாயிராம், ஜேசுதாஸ், நித்யஸ்ரீ, ஓ.எஸ்.அருண், டி.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் இன்னிசை விருந்து படைக்கிறார்கள். ஒவ்வொரு சபாவும் அதிகமான ரசிகர்களை போட்டி போட்டுக்கொண்டு தங்கள் அரங்கங்களுக்கு ஈர்க்க முயற்சி செய்கின்றன. ஆனால், இந்தப் போட்டி எப்போதும் பந்தயமாகவோ, யுத்தமாகவோ ஆவதில்லை.

ஏன் தெரியுமா? மியூசிக் அகாடமியில் சுதா தன் மயக்கும் குரலால் ரசிகர்கள் மனங்களைக் கொள்ளை கொள்கிறார். பாரத் கலாச்சாரில் அருணா தன் கணீர் குரலால் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார்.  

சுதாவும் அருணாவும் நம் இதயங்களில் இடம் பிடிக்க முந்தும் போட்டியாளர்கள்தாம். ஆனால், ஒருவர் ஜெயிக்க இன்னொருவர் தோற்கவேண்டிய அவசியமில்லை. தங்கள் வித்தியாச பாணிகளால், இருவருமே ஜெயிக்க முடியும் என்று ஆண்டாண்டு காலமாக நிரூபித்து வருகிறார்கள். இப்படி, கலை நிகழ்ச்சிகளில் எல்லாப் போட்டியாளர்களும் ஜெயிக்க முடியும். பிஸினஸும் பந்தயமல்ல, யுத்தமுமல்ல, கலைநிகழ்ச்சிதான் என்கிறது போர்ட்டரின் கொள்கை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

இந்த மேனேஜ்மென்ட் கொள்கையை 1979-ல் 'போட்டியில் அனுகூலம்’ (சிஷீனீஜீமீtவீtவீஸ்மீ கிபீஸ்ணீஸீtணீரீமீ) என்கிற சித்தாந்தமாக வெளியிட்டார் போர்ட்டர். இந்தக் கொள்கை என்ன சொல்கிறது? ஓர் உதாரணம் வழியாகப் பார்க்கலாம்.  

நீங்கள் முருகன் கபே ஓட்டல் நடத்துகிறீர்கள். இட்லி, வடை, பொங்கல், தோசை, காபி என நம் ஊர் உணவு வகைகள் மட்டுமே மெனு. நியாயமான விலை. ஏராளமான கஸ்டமர்கள்.

உங்கள் தெருவில் சாந்தி நிவாஸ் என்ற பெயரில் இன்னொரு ஓட்டல். அங்கே, சப்பாத்தி, குருமா, பூரி, சாட் ஐட்டங்கள், மசாலா பால் என்று வட இந்திய ஐட்டங்கள். மக்கள் அங்கேயும் போகத் தொடங்குகிறார்கள்.

நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் வழக்கமான மெனுவோடு, சாந்தி நிவாஸைவிடக் குறைவான விலையில் சப்பாத்தி, குருமா, சாட் ஐட்டங்கள், மசாலா பால் பரிமாறத் தொடங்குவீர்கள்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

அவர் சும்மா இருப்பாரா? அவரும் தன் ஐட்டங்களின் விலையைக் குறைப்பார்: இட்லி, வடை, பொங்கல், தோசை, காபியை உங்களை விடக் குறைவான விலையில் விற்பார்.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆறு மாதங்கள் கழித்து... உங்கள் மாத விற்பனை மாதம் 60,000 ரூபாய். இப்போது 80,000 ரூபாய். சாந்தி நிவாஸ் விற்பனையும் இதே லெவலில் இருக்கும். ஆனால், உங்கள் மாத லாபம் 20,000-த்திலிருந்து 8,000 ரூபாயாகக் குறைந்துவிட்டது. அவர்களுக்கும் இதே கதிதான். அதிக லாபம் பார்ப்பதுதானே உங்கள் இருவருடைய குறிக்கோள்? சாந்தி நிவாஸைத் தோற்கடிக்க நீங்களும், உங்களைத் தோற்கடிக்க சாந்தி நிவாஸும் போட்டாப் போட்டி போட்டீர்கள். கடைசியில் இருவருமே தோற்றுப்போய்விட்டீர்கள். நீங்கள் மட்டுமல்ல, காலம் காலமாக ஏகதேசம் எல்லா கம்பெனிகளும் இதைத்தான் செய்கின்றன. இதைத் தவிர்க்க, மைக்கேல் போர்ட்டரின் கொள்கை என்ன சொல்கிறது தெரியுமா?

பிஸினஸில் தொடர்ந்து வெற்றி காணவேண்டு மானால், உங்கள் யுக்தி, போட்டியாளர்களைத் தோற்கடிப்பதாக மட்டுமே இருக்கக்கூடாது: உங்கள் திறமைகளைப் பட்டை தீட்டிக்கொண்டிருப்பதாக அமையவேண்டும்  

போர்ட்டரின் கண்ணோட்டப்படி, நீங்கள் நடத்துவது இமயம் வெல்டிங்ஸ் என சிறிய தொழில் நிறுவனமாக இருந்தாலும் சரி, ரிலையன்ஸ் கம்பெனி மாதிரி பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி, பிஸினஸில் ஜெயிக்க நீங்கள் போட்டியாளர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஐந்து சக்திகளைப் பயன்படுத்த வேண்டும். இதை ஐந்து சக்தி மாடல் (திவீஸ்மீ திஷீக்ஷீநீமீs விஷீபீமீறீ) என்று போர்ட்டர் விளக்கினார்.  

அந்த ஐந்து சக்திகள் என்னென்ன?

(கற்போம்)

MBA - மூன்றெழுத்து மந்திரம்