நடப்பு
Published:Updated:

நாளைய மிட் கேப் பங்குகள் !

நாளைய மிட் கேப் பங்குகள் !

##~##

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விப்ரோ பங்கில் ஆரம்பத்தில் முதலீடு செய்திருந்தால் இந்நேரம் பல கோடிகளை சம்பாதித்திருக்கலாம் என்பதை பங்குச் சந்தையில் பலரும் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதேபோல, லார்ஜ் கேப் பங்குகளில் முதலீடு செய்யும்பட்சத்தில் ஸ்திரமான வளர்ச்சி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கேட்டிருப்பீர்கள்.

ஆனால், ஒரு விஷயத்தை நம்மில் பலரும் மறந்திருப்போம். இன்றைக்கு லார்ஜ் கேப் பங்குகளாக இருப்பவை கடந்த காலத்தில் மிட் கேப் பங்குகளாகவே இருந்திருக்கிறது. அதேபோல, இன்று ஸ்மால் கேப் பங்குகளாக இருக்கும் பங்குகள்தான் நாளைக்கு மிட் கேப் பங்குகளாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. நாளைக்கு மிட் கேப் பங்காக இருக்கும்போது முதலீடு செய்வதை இன்று ஸ்மால் கேப்

நாளைய மிட் கேப்  பங்குகள் !

பங்காக இருக்கும்போது தேர்ந்தெடுத்து முதலீடு செய்துவிட்டால் நிறைய லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

நாணயம் விகடன் வாசகர்களுக்காக தரமான 'நாளைய மிட் கேப் பங்குகளை’ தேர்ந்தெடுத்து தரமுடியுமா  என்று பங்குச் சந்தை ஆலோசகர் அம்பரிஷ் பாலிகாவிடம் கேட்டிருந்தோம். நமக்காக ஐந்து பங்குகளையும், சந்தையின் தற்போதைய நிலை பற்றியும் சொன்னார் அவர். பங்குகளை பார்ப்பதற்கு முன் சந்தையின் தற்போதைய நிலைமையைப் பார்த்துவிடுவோம்.

சந்தையின் தற்போதைய நிலைமை !

சென்செக்ஸ் 20000 புள்ளிகளையும், நிஃப்டி 6050 புள்ளிகளையும் தாண்டி வர்த்தகமாகி வருகிறது. சமீப காலங்களில் இல்லாத ஒரு புதிய ரேஞ்சில் சந்தை வர்த்தகமாகி வருகிறது. இந்த உயர்வுக்குக் காரணம், மத்திய அரசு பல துணிச்சலான முடிவுகளை எடுத்ததுதான். 'கார்’ (நிகிகிஸி) சட்டத்தை தள்ளிப்போட்டது, டீசல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியது உள்ளிட்ட முடிவுகள் முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்ததால் சந்தை உயர்ந்தது.

மேலும், இதுவரை வந்துள்ள முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சந்தையின் எதிர்பார்ப்புக்கு மேலாக வந்திருக்கிறது. குறிப்பாக, ஐ.டி. துறை பங்குகள் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும், நிதி அமைச்சர் பட்ஜெட்டில் பல நடவடிக்கைகளை எடுத்து முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவார் என்றும் சந்தை நம்புகிறது.

தற்போது அரசு எடுத்திருக்கும் இந்த 'மேக்ரோ’ நடவடிக்கைகள் காரணமாக ஏற்றத்தில் இருக்கும் சந்தை இன்னும் ஏறுவதற்கே வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் முடிவுகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் சாதகமாக இருக்கும்பட்சத்தில் இந்த ஏற்றம் தொடரவே வாய்ப்பு அதிகம்.

நாளைய மிட் கேப்  பங்குகள் !

இந்த ஏற்றத்துக்கு அந்நிய முதலீட்டாளர்கள் காரணமாக இருந்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் கணிசமான அளவில் இந்தியச் சந்தையில் முதலீடு செய்திருக் கிறார்கள். மற்ற முதலீடுகள், குறிப்பாக மெட்டல்கள் சரிந்திருப்பதை வைத்து பார்க்கும்போது அங்கிருந்து பங்குச் சந்தைக்கு பணம் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. இருந்தாலும்கூட இன்னும் பல சிறு முதலீட்டாளர்கள் கடந்த வருட (சுமார் 27%) வளர்ச்சியை தவறவிட்டுவிட்டார்கள். இப்போது சந்தை 6000 புள்ளிகளைக் கடந்திருக்கும் பட்சத்தில் அவர்களும் சந்தைக்கு வரும்போது சந்தை இன்னும் மேலே செல்லவே வாய்ப்பு இருக்கிறது.

இருந்தாலும் சர்வதேச அளவில் கொஞ்சம் பிரச்னை இருக்கவே செய்கிறது. அமெரிக்கக் கடன் உச்சவரம்பு பிரச்னை பிப்ரவரியில் மீண்டும் வரும். அதேபோல ஐரோப்பிய பிரச்னையும் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில், உள்நாட்டில் எந்தவிதமான பிரச்னையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், ஏப்ரல், மே மாதவாக்கில் அடுத்த வருடம் நடக்கும் தேர்தலை பற்றிய யூகங்கள் வர ஆரம்பித்து விடும். அப்போது சந்தை சரிய வாய்ப்பு இருக்கிறது. தற்போது எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகளை நிறுத்திவிட்டால், சந்தை சரிய வாய்ப்பு இருக்கிறது; அதுவரை சந்தை உயர்வதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

நாளைய மிட் கேப்  பங்குகள் !

இனி ஐந்து ஸ்மால் கேப் பங்குகளைத் தந்திருக்கிறேன். 9 முதல் 12 மாதங்களுக்குள் இந்தப் பங்குகள் இலக்கு விலையை அடையலாம். முதலீட்டாளர்கள் நன்கு ஆராய்ந்து தங்களது சொந்த முடிவை எடுக்கவும்.