நடப்பு
Published:Updated:

கமாடிட்டி

பானுமதி அருணாசலம்

( மெட்டல் - ஆயில்)

##~##

இந்த வாரம் கச்சா எண்ணெய் குறித்து மும்பை காம்டிரென்ட்ஸ் ரிஸ்க் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஞானசேகர் தியாகராஜன் கூறுகிறார்...

கமாடிட்டி

''சென்ற வாரத்தில் பொருளாதாரம் குறித்த தகவல்கள் நல்லவிதமாக வந்ததால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வர்த்தகமானது. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் குறித்த புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்ததால் விலை அதிகரித்தது. 'ஒபேக்’ கூட்டமைப்பு நாடுகளில் சவுதி அரேபியா எண்ணெய் சுத்திகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச நாடுகளில் பொருளாதார நிலவரங்கள் தற்போது நன்றாக இருப்பதால் சவுதி அரேபியாவில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்திவைக்க ஆலோசனை நடந்து வருகிறது. அதன்படி சவுதி அரேபியாவில் உற்பத்தி நிறுத்தப்பட்டால் கச்சா எண்ணெய் விலை உயரும். எனினும், சர்வதேச விலையில் மட்டுமே ஏற்றம் இருக்கும். சமீப நாட்களாக ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருவதால் இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை வரும் வாரத்தில் குறையவே செய்யும். ரூபாய் மதிப்பு குறைந்தால் மட்டுமே இந்தியாவில் விலை ஏறும். ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து வர்த்தகர்கள் வர்த்தகம் செய்யவும்.''

கமாடிட்டி

தங்கம் !

ஆசியாவில் பிஸிக்கல் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது போன்ற காரணங்களால் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை சென்ற வாரத்தில் அதிகரித்தது. அமெரிக்காவில் வேலை இல்லாதவர்கள் குறித்த புள்ளிவிவரம் மற்றும் வீடு விற்பனை புள்ளிவிவரங்கள் சாதகமாக வந்திருப்பதும் இதற்கு முக்கிய காரணம். எனினும், பாதுகாப்பான முதலீடு என்ற வகையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையவில்லை.

கமாடிட்டி

இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி இந்தாண்டின் காலாண்டில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசு இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அனலிஸ்ட்கள் கூறுகின்றனர். அமெரிக்காவின் பொருளாதார நிலவரம் மற்றும் டாலரின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை இந்த வருடத்தில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் சர்வதேச அனலிஸ்ட்கள் ஆரூடம் சொல்கிறார்கள். மொத்தத்தில் வரும் வாரத்தில் இந்திய ரூபாயின் மதிப்பைப் பொறுத்தே தங்கத்தின் விலை இருக்கும்.

அடிப்படை உலோகம் !

அமெரிக்காவின் வீடு கட்டுவது குறித்த புள்ளிவிவரம் மற்றும் வேலையில்லாதவர்கள் குறித்த விவரங்கள் சாதகமாக வந்திருப்பது அடிப்படை உலோகங்களுக்குச் சாதகமாக இருக்கிறது. சீனாவின் ஜி.டி.பி. புள்ளிவிவரம் மற்றும் டாலரின் மதிப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் காப்பரின் விலை அதிகரித்தது.

ஜப்பானின் பான் பசிபிக் காப்பர் மற்றும் சீனாவின் ஜியாங்சி காப்பர் உள்ளிட்ட நிறுவனங்கள் காப்பரை சுத்திகரித்து எடுப்பதற்கான கட்டணங்களை 10 சதவிகிதம் அதிகம் பெற்றுள்ளன. இது காப்பர் சுரங்கங்கள் மீண்டு வருவதைக் காட்டுகின்றன. சீனா தனது பங்களிப்பாக 40 சதவிகிதம் வரை உலோகங்களை பயன்படுத்துகிறது.

கமாடிட்டி

ஐரோப்பாவில் காப்பரை டெலிவரி எடுப்பதற்கான கட்டணங்களைக் குறைத்துள்ளது. எல்.எம்.இ. இன்வென்ட்டரி குறைந்துள்ளதும் உலோகங்கள் விலை உயர்வுக்குக் காரணமாக அமைகிறது. காப்பரின் தேவை சர்வதேச அளவில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, விலை வரும் வாரத்தில் அதிகரிக்கக்கூடும். அலுமினியம் கையிருப்பு அதிகமாக இருப்பதால் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு அலுமினியத்தின் விலை பெரியளவிற்கு அதிகரிக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இயற்கை எரிவாயு !

எதிர்பார்க்காத அளவிற்கு இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி குறைந்ததை அடுத்து சென்ற வாரத்தில் விலை அதிகரித்தது. சீனாவில் தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் அமெரிக்காவில் வீடு கட்டுவது குறித்த சாதகமான புள்ளிவிவரங்களால் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. குளிர் அதிகரித்தால் இயற்கை எரிவாயுக்கான தேவை அதிகரிக்கும்.

கமாடிட்டி

அல்ஜீரிய பாலைவனப் பகுதிகளில் வெளிநாட்டு வேலையாட்களை கொல்வது அதிகரித்து வருவதால், வட ஆப்பிரிக்காவில் இருக்கும் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி பாதித்துள்ளது. அந்த நாட்டின் வருவாயில் எண்ணெய் சுத்திகரிப்பு முக்கிய பங்கு வகிப்பதால் கூடிய விரைவில் பிரச்னைகள் சரி செய்யப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உற்பத்திக் குறைவு மற்றும் தேவை அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில் இயற்கை எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.