மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA -மூன்றெழுத்து மந்திரம்

நீங்கள்தான் நம்பர் 1 மேனேஜர்! எஸ்.எஸ்.வி.மூர்த்தி,படம்: க.ரமேஷ்

##~##

சென்ற வாரம் நீங்கள் எழுதிய பதிலைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த விடைகளைக் கீழ்க்கண்ட நான்கு பெட்டிகளிலும் பதிவு செய்யுங்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? ரொம்ப சிம்பிள்.

கேள்வி எண் 1

என் கீழ் வேலை பார்ப்பவர்களின் பணியைத் தொடர்ந்து கண்காணிப்பேன்.

உங்கள் பதில் 5 என்று வைத்துக்கொள்வோம். கேள்வி எண் 1 எந்தப் பெட்டியில் வருகிறது? 1. ஆகவே,  ஒன்றாம் நம்பர் பெட்டியில் கேள்வி 1-க்கு எதிராக 5 என்று எழுதுங்கள்.

கேள்வி எண் 23

ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கும் போதே, அவற்றை எடை போடமாட்டேன்.

உங்கள் பதில் 3 என்று வைத்துக்கொள்வோம். கேள்வி எண் 23 எந்தப் பெட்டியில் வருகிறது? 3. ஆகவே, மூன்றாம் நம்பர் பெட்டியில் கேள்வி 23-க்கு எதிராக 3 என்று எழுதுங்கள்.

MBA -மூன்றெழுத்து மந்திரம்

இப்படி 24 கேள்விகளுக்குமான பதில்களின் மதிப்பெண்களை அவற்றுக்கான 4 பெட்டிகளில் எழுதிவிட்டீர்களா? ஒவ்வொரு பெட்டியிலும் 6 கேள்விகளுக்கான மதிப்பெண்கள் இருக்கும்.  

இப்போது பெட்டிகளை மதிப்பெண்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துங்கள். உங்கள் மார்க் இப்படி வருகிறதென்று வைத்துக் கொள்ளலாம்.

MBA -மூன்றெழுத்து மந்திரம்

பெட்டி 2 - 40 மதிப்பெண்கள்
பெட்டி 3 - 30 மதிப்பெண்கள்
பெட்டி 1 - 20 மதிப்பெண்கள்
பெட்டி 4 - 10 மதிப்பெண்கள்

ஒவ்வொரு பெட்டியும் ஒவ்வொரு மேனேஜ்மென்ட் ஸ்டைலைக் குறிக்கிறது.

MBA -மூன்றெழுத்து மந்திரம்

பெட்டி 1 - கட்டுப்படுத்தும் மேனேஜர்.
பெட்டி 2 - பயிற்சி அளிக்கும் மேனேஜர்
பெட்டி 3 - துணை செய்யும் மேனேஜர்    
பெட்டி 4 - பொறுப்பை ஒப்படைக்கும் மேனேஜர்.

டாப் மதிப்பெண்கள் வாங்கிய மூன்று ஸ்டைல்கள்தாம் உங்கள் ஸ்டைல்கள். அதாவது, மேலே உங்களுக்குக் கிடைத்துள்ள மார்க்குகளின்படி, நீங்கள் உங்களின் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர். அதற்காக அவர்களோடு கலந்து ஆலோசிக்கத் தயங்கமாட்டீர்கள். அதேசமயம், பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கமாட்டீர்கள். ஊழியர்கள் எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும், அவர்கள் எப்போது என்னென்ன செய்கிறார்கள் என்பது

MBA -மூன்றெழுத்து மந்திரம்

தெரியவேண்டும் என்கிற மனப்போக்கு உடையவர். இந்த ஸ்டைல் உங்களை நம்பர் 1 மேனேஜர் ஆக்குமா? அல்லது உங்கள் ஸ்டைலில் ஏதாவது மாற்றங்கள் தேவையா? பால் ஹெர்ஸி, கென் ப்ளான்சர்டு ஆகியோரின் சூழ்நிலை தலைமைக் கொள்கை என்ன சொல்கிறது?

உங்களிடம் மூன்று மேனேஜ்மென்ட் ஸ்டைல்கள் இருக்கின்றன. எவற்றை யாரிடம் பயன்படுத்தவேண்டும்? என்பதற்கு சூழ்நிலை தலைமைக் கொள்கை வழிகாட்டுகிறது.

உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் நான்கு வகையிலான மனப்பக்குவ நிலைகளில் (Maturity) இருப்பார்கள். அந்த நிலைகள்:

M 1  - இவர்கள் அறிவு, திறமை, தன்னம்பிக்கை ஆகிய அனைத்துமே குறைவானவர்கள். தனியாக எதுவுமே செய்யத் தெரியாதவர்கள். தெளிவான கட்டளைகள், உந்துதல் ஆகியவை இருந்தால் மட்டுமே இவர்கள் வேலை செய்வார்கள்.

M 2  - இவர்கள் வி 1 – ஐ விட ஒரு படி மேலானவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். ஆனால், திறமை பத்தாது.

M 3  - இவர்கள் வி 2 – ஐ விட ஒரு படி மேலானவர்கள். உழைப்பும், திறமையும் கொண்டவர்கள். ஆனால், தன்னம்பிக்கை போதாது.

M 4  - இவர்கள் உழைப்பும், திறமையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சுதந்திரம் இவர்களுக்கு முக்கியம். தங்கள் வேலையில் யாராவது தலையிட்டால் இவர்களுக்குப் பிடிக்காது.

இவர்களில் யார் யாரிடம் எத்தகைய மேனேஜ்மென்ட் ஸ்டைலைக் கடைப்பிடிக்க வேண்டும்?

MBA -மூன்றெழுத்து மந்திரம்

உங்களின் கீழ் வேலை பார்ப்பவர்களின் மனப்பக்குவநிலையைக் கண்டுபிடிப்பது இதில் முக்கியமான அம்சம். ஒவ்வொருவரையும் நீங்களே எடைபோட்டு அவர்களின் பக்குவநிலையைத் தீர்மானியுங்கள். தேவைப்பட்டால், நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் சக மேனேஜர் அல்லது உங்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனையையும் நீங்கள் தேடிக்கொள்ளலாம்.

MBA -மூன்றெழுத்து மந்திரம்

முதலில் படிக்கும்போது, இந்த அத்தியாயமும், முந்தைய அத்தியாயமும் கொஞ்சம் கடினமான தாக உங்களுக்குத் தோன்றலாம். அப்படித் தோன்றினால், மறுபடியும் ஒருமுறை இரண்டு அத்தியாயங்களையும் படியுங்கள். ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், தயங்காமல் கேளுங்கள்.ஏனென்றால், இந்த இரண்டு அத்தியாயங்களில் நான் சொல்லியிருக்கும் பால் ஹெர்ஸி, கென் ப்ளான்சர்டு ஆகிய இருவரின் சூழ்நிலை தலைமைக் கொள்கையைக் கடைப்பிடித்தால், நீங்கள் நம்பர் 1 மேனேஜராவது நிச்சயம்!  

(கற்போம்)

இந்த தொடரில் இதுவரை வந்த அத்தியாயங்களை vikatan.com/mba என்ற இணையதளத்திலும் படிக்கலாம். இந்த தொடர் பற்றி நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை, சந்தேகங்களை vikatan.com/mba என்ற இணையதளத்தில், அதற்கான இடத்தில் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங் களுக்கும் மேனேஜ்மென்ட் நிபுணர் எஸ்.எல்.வி.மூர்த்தியே பதில் சொல்வார்.