மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

கல்வி சிக்ஸ் சிக்மா - சர்வரோக நிவாரணி! எஸ்.எஸ்.வி.மூர்த்தி படங்கள்: தே.தீட்ஷித்.

##~##

நண்பர் கோபால் கையில் லட்டுடன், 'சார்,  நான் பிளாக் பெல்ட் வாங்கிட்டேன்' என்றார் பெருமை பொங்க சிரித்தபடி.

'பிளாக் பெல்ட்டா?' கோபாலை ஏற இறங்கப் பார்த்து விட்டு, 'நம்பவே முடியலியே? நீங்க எப்படி கராத்தேயில பிளாக் பெல்ட் வாங்கினீங்க?' என்று கேட்டார் லட்டை வாங்கியபடி.

'சார், நான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கலே. நான் வாங்கியிருக்கிறது மேனேஜ்மென்டிலே.  குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்னும் தரக் கட்டுப்பாட்டு நிர்வாகத்தில் 'சிக்ஸ் சிக்மா’ என்னும் கொள்கை இருக்கிறது. கராத்தேயில் வெவ்வேறு தேர்ச்சிநிலைகளையும் குறிக்க, வெள்ளை பெல்ட், பச்சை பெல்ட், கறுப்பு பெல்ட் என்னும் அடையாளங்கள் இருக்கின்றன. இவற்றைப்போல் சிக்ஸ் சிக்மா பயிற்சியிலும்,

மஞ்சள் பெல்ட், பச்சை பெல்ட், கறுப்பு பெல்ட், மாஸ்டர் கறுப்பு பெல்ட் என்னும் தேர்ச்சி நிலைகள் இருக்கின்றன'' என்று கோபால் சொன்ன கதை சிக்ஸ் சிக்மா வட்டாரத்தில் படுபாப்புலர்.

செல்போன்கள் தயாரிக்கும் மோட்டோரோலா கம்பெனியை உங்கள் எல்லோருக்கும் தெரியும். மோட்டோரோலா கம்பெனிதான் 1986-ல் சிக்ஸ் சிக்மா கொள்கையைக் கண்டுபிடித்தது. சிக்ஸ் சிக்மா, கம்பெனிகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் மேனேஜ்மென்ட் கொள்கை.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1. நகைக் கடை நடத்துகிறீர்கள். சேதாரம் அதிகமாக இருக்கிறது. சேதாரம் என்பது நஷ்டம். சேதாரத்தைக் குறைக்க என்ன செய்யலாம்?

சிக்ஸ் சிக்மாவை பின்பற்றலாம்.  

2. நீங்கள் நடத்தும் ஜெராக்ஸ் கடையில் செலவு எகிறிக்கொண்டே போகிறது. என்ன செய்யலாம்?

சிக்ஸ் சிக்மாவை பின்பற்றலாம்.  

3. உங்கள் ஓட்டலில் லாபம் மாதத்துக்கு மாதம் குறைகிறது. என்ன செய்வீர்கள்?

சிக்ஸ் சிக்மாவை பின்பற்றலாம்.  

இப்படி உங்கள் பிஸினஸ் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக விளங்குவதுதான் சிக்ஸ் சிக்மா. பல அன்றாட நிகழ்வுகளுக்கும், பிஸினஸ் பிரச்னைகளுக்கும் சிக்ஸ் சிக்மா கொள்கை தீர்வுகள் தருகிறது. இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தால், நம் செயல்பாட்டைச் செம்மைப்படுத்தலாம்; நம் தயாரிப்புகளில் உயர்ந்த தரத்தை எட்டலாம்; அதிக லாபத்தையும்  வாடிக்கையாளர் சந்தோஷத்தையும் சம்பாதிக்கலாம். இதற்கு மேல் வேறென்ன வேண்டும்?    

சிக்மா என்பது புள்ளிவிவரக் கணக்கில் ஒரு சூத்திரம். புள்ளிவிவரம் மட்டுமல்லாமல், பொருளாதாரம், கணிதம், அறிவியல், மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் சிக்மா பயன்படுத்தப்படுகிறது. கிரேக்க அகர வரிசையில் (ணீறீஜீலீணீதீமீt) பதினெட்டாவது எழுத்தாக வரும் (சிக்மா), இந்தச் சூத்திரத்தின் குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

உங்கள் கம்பெனியில் சோப் தயாரிக்கிறீர்கள். வருடத் தயாரிப்பு 10 லட்சம் கட்டிகள். இந்த 10 லட்சம் கட்டிகளும், நீங்கள் நிர்ணயித்த தரத்தில் வராது. எடையில் கூடுதல், குறைச்சல், வடிவத்தில் மாற்றம் போன்ற குறைகள் வருவது நிச்சயம். இப்படிப்பட்ட தரம் குறைவான சோப் கட்டிகளை விற்க முடியாது என்பதால் இவை வேஸ்ட். இந்தத் தரக் குறைவை அளக்க சிக்மா பயன்படுத்தப்படுகிறது. 1 சிக்மா, 2 சிக்மா,

3 சிக்மா, 4 சிக்மா, 5 சிக்மா, 6 சிக்மா ஆகிய ஆறு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1 சிக்மா என்பது தரம் மிகக் குறைவான நிலை, அதாவது, அதிகமான சோப்கள் தரக் குறைவு காரணமாக நிராகரிக்கப்படும் நிலை.

1 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில் 6,97,700 சோப்கள் தரக் குறைவு.

2 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில் 3,08.700.

3 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில்  66,810.

4 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில் 6,210.

5 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில் 233.

6 சிக்மா - 10 லட்சம் உற்பத்தியில் 3.4 சோப்கள்தான் தரக் குறைவு.

சோப் தயாரிப்பில் நீங்கள் இன்று

MBA - மூன்றெழுத்து மந்திரம்

1 சிக்மா நிலையில் இருக்கிறீர்கள். சிக்ஸ் சிக்மா கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலமாக உங்கள் தரக் குறைவு 6.97.700 சோப்களிலிருந்து வெறும் 3.4 சோப்களாகக் குறையும். அதாவது, 6,97,696 சோப்களை நீங்கள் அதிகமாக விற்கலாம். இவற்றை விற்பதால் பல கோடி ரூபாய் உபரி வருமானம் வரும். இந்தப் பணம் முழுக்க முழுக்க லாபம் - சிக்ஸ் சிக்மா கொள்கையைப் பின்பற்றியதால் வந்த லாபம்.

சோப் தயாரிப்பில், நீங்கள் இடும் பொருட்கள் (மிஸீஜீut), சோடா உப்பு, ஸ்டீயரிக் அமிலம் (ஷிtமீணீக்ஷீவீநீ கிநீவீபீ), எண்ணெய், வாசனைப் பொருட்கள் போன்றவை. நீங்கள் எடுக்கும் பொருள்

(ளிutஜீut) சோப். குறைந்த இன்புட்டுக்கு அதிக அவுட்புட்டை எடுப்பதுதான் பிஸினஸ் திறமை. இதற்கு சிக்ஸ் சிக்மா கொள்கை உதவுகிறது.

சோப் தயாரிப்பில் மட்டுமல்ல, லேத் ஒர்க்ஷாப்கள், ஜெராக்ஸ் கடை, நகைக் கடை, போன்ற எல்லா உற்பத்தி நிறுவனங்களிலும் சிக்ஸ் சிக்மா கொள்கையைப் பயன்படுத்தலாம்.

உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். உங்கள் வங்கியில் செக் கொடுத்துப் பணம் வாங்குவதற்கு ஆகும் நேரத்தைக் குறைக்க, சிக்மா கொள்கையைப்

MBA - மூன்றெழுத்து மந்திரம்

பயன்படுத்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். வங்கியில், இன்புட் என்பது கேஷியரின் நேரம். அவுட்புட் என்பது திருப்தியடைந்த கஸ்டமர்கள். சிக்ஸ் சிக்மா கொள்கையைப் பயன்படுத்தினால், குறைந்த நேரத்தில் அதிக கஸ்டமர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும்.  

ஆகவே, எல்லா உற்பத்தி நிறுவனங்களுக்கும், எல்லா சேவை விற்பனை நிறுவனங்களுக்கும் பயன்தரும் கொள்கை சிக்ஸ் சிக்மா.

உலகின் பெரும்பாலான முன்னணி கம்பெனிகள் சிக்ஸ் சிக்மா பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் ஏஷியன் பெயின்ட்ஸ், ஜி.இ., எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ், எல் அண்ட் டி. ஸ்விட்ச் கீயர், ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.வி.எஸ். மோட்டார்ஸ், வேர்ல்பூல் ஆகியோர் சிக்ஸ் சிக்மா பயன்படுத்துவதில் முக்கியமானவர்கள்.        

MBA - மூன்றெழுத்து மந்திரம்

ஆனால், இவர்கள் எல்லோரையும்விட, மும்பையில் இருக்கும் ஓர் இந்திய அமைப்புதான் சிக்ஸ் சிக்மா கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக உலகப் புகழ் பெற்றிருக்கிறது. இந்த அமைப்பில் 5,000 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களும், இந்த அமைப்பின் அத்தனை நிர்வாகிகளும், உயர் அதிகாரிகளும், மஹாராஷ்ட்ரா கிராமங் களிலிருந்து, பிழைப்பு தேடி மும்பை வந்தவர்கள், பள்ளிப் படிப்பையே முடிக்காதவர்கள். இவர்களின் அனுபவங்கள் எம்.பி.ஏ. படிப்பில் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பாடத்தில் ஒரு பகுதியாக இருக்கிறது. அவர்கள் வேறு யாருமல்ல, மும்பை நகரில் எறும்புகள்போல சுற்றித் திரியும் டாபாவாலாக்கள் (ஞிணீதீதீணீஷ்ணீறீணீs).

டாபா என்னும் வார்த்தை மராத்தி, இந்தி என்னும் இரண்டு மொழிகளிலும் இருக்கிறது. கொச்சைத் தமிழில் டப்பா என்று சொல்லலாம். சாப்பாடு எடுத்துப்போகும் டப்பா என்று அர்த்தம். இந்த அடிப்படையில், டாபாவாலாக்கள் என்றால், சாப்பாடு எடுத்துப் போகிறவர்கள். வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து காலையில் அவர்களுடைய மதிய உணவு டப்பாக்களை வாங்கி, உரியவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் இவர்கள். காலி டப்பாவை மாலையில் அந்தந்த வீடுகளில் கனகச்சிதமாகக் கொண்டு சேர்த்துவிடுவார்கள்.        

இரண்டு லட்சம் வாடிக்கையாளர்களுக்குத் தினம் செய்யும் சேவையில் ஒரு வருடத்தில் நடக்கும் தவறுகள் எத்தனை தெரியுமா? எட்டு! ஆமாம், எட்டே எட்டுதான்! வருடத்தில் சனி, ஞாயிறு விடுமுறை என 165 நாட்களை விலக்கினால், 200 நாட்கள் இவர்கள் சேவை உண்டு. ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் வாடிக்கையாளர்கள். அதாவது, வருடம்

2 ஜ் 200 = 400 லட்சம், அதாவது 4 கோடி பரிவர்த்தனைகளில், தப்பு எட்டே எட்டுதான்.  

டாபாவாலாக்களின் வெற்றி, நாம் எல்லோருமே சிக்ஸ் சிக்மா போன்ற மேனேஜ்மென்ட் கொள்கைகளைக் கடைப்பிடிக்க முடியும் என்னும் நம்பிக்கையை நம் மனங்களில் வளர்க்கும் உற்சாக டானிக்.  இந்த சிக்ஸ் சிக்மா கொள்கையை நிறைவேற்ற உங்களுக்குத் தேவை, இந்தக் கொள்கையில் உயர்பயிற்சி பெற்ற ஒரு மாஸ்டர் பிளாக் பெல்ட்.

(கற்போம்)

இந்த தொடரில் இதுவரை வந்த அத்தியாயங்களை ஸ்வீளீணீtணீஸீ.நீஷீனீ/னீதீணீ  என்ற இணையதளத்திலும் படிக்கலாம். இந்த தொடர் பற்றி நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை, சந்தேகங்களை ஸ்வீளீணீtணீஸீ.நீஷீனீ/னீதீணீ என்ற இணையதளத்தில், அதற்கான இடத்தில் பதிவு செய்யலாம். உங்கள் கேள்விகளுக்கும், சந்தேகங் களுக்கும் மேனேஜ்மென்ட் நிபுணர் எஸ்.எல்.வி.மூர்த்தியே பதில் சொல்வார்.