மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்?

வா.கார்த்திகேயன்.

##~##

இன்றைய தலைமுறைக்கு ஒரே நிறுவனத்தில் ஐந்தாண்டு களுக்கு மேலே வேலை செய்வது என்றாலே வியப்பிற்குரிய விஷயமாக இருக்கிறது. ஐந்தாறு ஆண்டுகளிலேயே நிறுவனம் அலுத்துப்போய் அடிக்கடி வேலை மாறத் தொடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் ஆண்டுக்கு ஒரு நிறுவனம் என்கிற ரீதியில் வேலை மாறுகிறார்கள்.

அதிலும், ஐ.டி. துறையில் வேலை மாறுபவர்களின் விகிதம் (attrition ratio) கிட்டத்தட்ட 15 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. மெள்ள மெள்ள இந்தப் பழக்கம் பிற துறை சார்ந்தவர்களையும் பற்றி வருகிறது. ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறும்போது முறையாகச் செய்யவேண்டிய விஷயம் என்னென்ன என 'போலாரிஸ்’ நிறுவனத்தின் மனிதவளத் துறை அதிகாரி பாலமுருகனிடம் பேசினோம். விளக்கமாகவே எடுத்துச் சொன்னார் அவர்.

''ஒரு பணியாளர் தன் வேலையை ராஜினாமா செய்த வுடன் செய்யும் முதல் காரியம், தாமதமாக அலுவலகத்துக்கு வருவது. சீக்கிரமே வேலையை முடித்துவிட்டு சென்றுவிடுவது. உயரதிகாரி யாராவது கேட்டால், 'நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்! இனியும் என்னை ஏன் கன்ட்ரோல் செய்கிறீர்கள்?’ என்கிற மாதிரி பேசுவார்கள். இந்தத் தவறை யாரும் செய்யக் கூடாது. நாமாக வேலையைவிட்டு போவதாக இருந்தாலும் அல்லது நிறுவனமே நம்மை வேலையைவிட்டு அனுப்புவதாக இருந்தாலும் அலுவலக ஒழுங்கை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

நாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்?

அடுத்து, தவிர்க்கவேண்டிய முக்கிய விஷயம், இதுவரை செய்த வேலை பற்றி தவறாகப் பேசுவது. இதெல்லாம் ஒருவேலையா, இதெல்லாம் ஒரு கம்பெனியா என்கிற ரீதியில் சிலர் பேசுவார்கள். தவிர, புது நிறுவனத்தைப் பற்றி பெருமை பீற்றிக்கொள்வார்கள். இங்கு ஒரு சலுகையும் இல்லை; அந்த நிறுவனத்தில் ஐபேட் தருகிறார்கள் என்பார்கள். ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனம் மீது இருக்கும் வெறுப்புதான் இப்படி பேச வைக்கிறது. வேலையைவிட்டு போகப் போகிறோம் என்று முடிவெடுத்தப் பிறகு வேலையையோ, உயரதிகாரிகளையோ அல்லது நிறுவனத்தையோ குறை சொல்ல நமக்கு உரிமையும் இல்லை; அது நேர்மையாகவும் இருக்காது. மற்றவர்களும் அந்தப் பேச்சை ரசிக்கமாட்டார்கள்.

இன்னும் சிலர் ராஜினாமா கடிதம் தந்தபிறகு ஏன் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்தில் நக்கலாகப் பேசி, வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பார்கள். இப்படி செய்வதால் பணியாளர் தனக்குத் தெரியாமலே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறார். ஒரு பணியாளரை வேலையிலிருந்து விடுவிக்கும் போது, அந்தப் பணியாளரின் நடத்தைப் பற்றி விடுவிப்புக் கடிதத்தில் சில வார்த்தைகள் சொல்லப்படும். தவிர, பணியாளரின் வேலை செய்யும் திறன் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்வார்கள். ஓ.கே., நன்று,

நாணயம் ஜாப் : வேலையை விட்டபிறகு... எப்படி இருக்கவேண்டும்?

மிக நன்று என எப்படிவேண்டுமானாலும் எழுதலாம். வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது குதர்க்கமாகப் பேசி பிற பணியாளர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலோ, நம் ஒழுக்கத்தைப் பற்றி மோசமாக ஏதாவது எழுதிவிட வாய்ப்புண்டு. அதனால் புதிதாக வேலைக்குச் செல்லும் இடத்திலும் கெட்டபெயர் ஏற்படலாம்.

மாறாக, ராஜினாமா தந்தபிறகும் உங்கள் வேலையைச் சரியாகச் செய்து, அலுவலக விதிகளை முறையாகப் பின்பற்றினால், புதிய அலுவலகத்தில் உங்களுக்குக் கிடைக்கும் அதே சம்பளத்தைப் பழைய நிறுவனமே தர வாய்ப்புண்டு. புதிய அலுவலகம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பழைய அலுவலகத் திலேயே மீண்டும் சேர இது நிச்சயம் உதவும்.

ராஜினாமா செய்தபிறகும் நீங்கள் வேலை செய்ய ஒரு மாத காலம் அனுமதிக்கப்படுவதன் நோக்கமே, உங்கள் பொறுப்பு களை மற்றவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.  அடுத்த ஊழியரை நீங்கள் பொறுப்போடு தயார் செய்வது உங்கள் உயரதிகாரிக்குத் தெரிவது அவசியம்.

காரணம், நீங்கள் தயார்படுத்தும் நபருக்கு நீங்கள் சொல்லித் தரும் விஷயம் புரியவில்லை எனில், உங்கள் பெயர்தான் கெடும்.  எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜினாமா செய்த பிறகு உங்கள் உணர்வுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. காரணம், அந்தச் சமயத்தில் நீங்கள் காட்டும் சின்ன ரியாக்ஷன் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம். நீங்கள் செய்யும் வேலைதான் உங்கள் எதிர்காலத்துக்கான சான்றிதழ் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டாலே போதும், எந்தத் தவறும் செய்யமாட்டீர்கள்!'' என்றார்.

இனி விழிப்போடு இருப்பீர்கள்தானே?