MBA - மூன்றெழுத்து மந்திரம்
##~## |
நாம் எம்.பி.ஏ. பிரயாணத்தைத் தொடங்கி, ஏறக்குறைய எட்டு மாதங்கள் முடிந்துவிட்டன. பண்டமாற்று முறையில் மட்டுமே பிஸினஸ் நடந்துகொண்டிருந்த காலத்தில் தொடங்கினோம். இன்று, மூன்றாம் தொழில் புரட்சிக்கு வரவேற்பு சொல்லும் 2013 வரை வந்துவிட்டோம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் ஏராளமான மேனேஜ்மென்ட் கொள்கைகள் பற்றிப் பேசினோம். உலகப் பொருளாதாரத்தையே தலைகீழாக மாற்றிய தொழில்நுட்பங்களைப் பார்த்தோம். இதுவரை என்னென்ன கற்றுக்கொண்டோம் என்று 'சுருக்’ பார்வை பார்க்கலாமா?
1769 - ஜேம்ஸ் வாட் நீராவி இயந்திரம் கண்டுபிடிக்கிறார்.
1760-க்கும் 1830-க்கும் இடைப்பட்ட காலகட்டம் - முதல் தொழில் புரட்சி.
1776 - ஆடம் ஸ்மித் கண்டுபிடித்த உழைப்புப் பங்கீடு (Division of Labour)சித்தாந்தம்.
1787 - ஜான் ஃபிச் (John Fitch) நீராவியால் ஓடும் படகை வெள்ளோட்டம் விடுகிறார்.
1814 - ஜார்ஜ் ஸ்டீபன்ஸன் (George Stephenson ) நீராவியால் ஓடும் ரயிலை வடிவமைக்கிறார்.
1836 - சாமுவேல் மோர்ஸ் கண்டுபிடித்த தந்தி மூலமான செய்தித் தொடர்பு வசதி (Telegraph) 160;
1848 – கார்ல் மார்க்ஸ், ஃப்ரெடரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) இருவரும் சேர்ந்து வெளியிட்ட பொதுவுடமைக் கட்சியின் கொள்கை அறிவிப்பு. (Manifesto of the Communist Party).
1854 - டேவிட் மெக்கல்லம் (David McCallum) அமெரிக்க ரயில் கம்பெனியில் மேனேஜ்மென்ட் கொள்கைகளை அறிமுகம் செய்கிறார். உலகின் முதல் மேனேஜர் என்று அனைவரும் அழைப்பது இவரைத்தான்.
1875 முதல் 1905 வரை - இரண்டாம் தொழில் புரட்சிக் காலம்.
1876 - அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் டெலிபோன் கண்டுபிடிக்கிறார்.
1879 - தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த எலெக்ட்ரிக் பல்ப்.

1892 - எடிசனின் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி அமெரிக்காவில் தொடங்கிய மின்சக்தி விநியோகம்.
1897 - மார்க்கோனியின் ஒயர்லெஸ்.
1901 - அமெரிக்காவின் நேஷனல் கேஷ் ரெஜிஸ்டர் கம்பெனியில் ஊழியர் நிர்வாகத் துறை (Personnel Department) பிறந்தது. ஊழியர் நலம் காக்க, பிஸினஸ் உலகம் எடுத்த முதல் அடி இதுதான்.

1903 - ரைட் சகோதரர்கள் ஆகாய விமானம் கண்டுபிடிக்கிறார்கள்.
1903 - ஹென்றி ஃபோர்டு அசெம்பிளி லைன் உற்பத்தி முறை தொடங்கினார்.
1906 - வில்ஃபிரெடோ பாரெட்டோ (Vilfredo Pareto) தந்த பாரெட்டோ கொள்கை.
1911 - ஃப்ரெடரிக் டெய்லரின் (Frederick Taylor) நேர நுணுக்க நுண்ணாய்வுக் (Time and Motion Study) கொள்கை.
1916 - ஹென்றி ஃபாயல் (Henry Foyal), Management is to plan, organise, command, coordinate and control என்று விளக்கம் தருகிறார்.
1933 - எல்டன் மேயோ (Elton Mayo) வெளியிட்ட The Human Problems of an Industrialized Civilization புத்தகம், தொழிலாளிகளின் முக்கியத்துவத்தை பிஸினஸ்மேன்களுக்கு உணர்த்தியது. மனிதவளத் துறையின் தந்தை என்று மேயோ வரலாற்றில் இடம் பிடிக்கிறார்.
1939 - பீட்டர் டிரக்கர். முதல் மேனேஜ் மென்ட் குரு. மேனேஜ்மென்ட் என்றால் என்ன என்று வரையறுத்தவர். இலக்குகள் வழி நிர்வாகம் (Management by Objectives) 160; என்னும் கொள்கையை உருவாக்கியவர்.
1948 - 1975: ஜப்பானின் டொயோட்டா கம்பெனி Toyota Production System என்னும் உற்பத்திமுறையை உருவாக்குகிறது.
1954 - ஆபிரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) எடுத்துச் சொன்ன தேவைகளின் படிநிலை அமைப்பு (Hierarchy of Needs)160;
1960 - டக்ளஸ் மெக்கிரகர் (Douglas McGregor)தந்த எக்ஸ், ஒய் சித்தாந்தம் (X, Y Theory)
1960 - எட்மண்ட் ஜெரோம் மெக்கார்த்தி (Edmund Jerome McCarthy) அளித்த 4 P மார்க்கெட்டிங் கொள்கை.

1962 - கௌரு இஷிகாவா (Kaoru Ishikawa) என்னும் ஜப்பானியப் பேராசிரியர் தர வட்டங்கள் (Quality Circles) என்னும் தரமேம்பாட்டு முறையை உருவாக்குகிறார்.
1967 - எட்வர்ட் டீ போனோ (Edward de Bono)உருவாக்கிய மாத்தி யோசிப்புக் கொள்கை (Lateral Thinking)
1970 - ஆல்பர்ட் ஹம்ப்ரே (Alfred Humphrey) தந்த ஸ்வாட் ஆராய்ச்சி (SWOT Analysis)
1970 - பீட்டர் பிர் (Peter Phyrr) அளித்த Zero-based Budgeting கொள்கை.
1970 - பல அமெரிக்க நிறுவனங்கள் மென்ட்டரிங் (Mentoring) பயிற்சி முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்குகின்றன.
1973 - டாக்டர் கிளார்க் வில்சன் (Doctor Clark Wilson) 360 டிகிரி மதிப்பீடு (360 Degree Assessment) அறிமுகம் செய்கிறார்.
1970 - கார்ப்பரேட் உலகத்துக்குப் பெண்கள் தகுதியற்றவர்கள் என்னும் ஜார்ஜ் கில்டர் (George Gilder) கருத்து.
1973 - மோட்டரோலா கம்பெனியில் பணியாற்றிய டாக்டர் மார்ட்டின் கூப்பர் செல்போன் கண்டுபிடிப்பு.
1976 - சாதாரண மனிதனும் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டர்களை ஆப்பிள் கம்பெனி அறிமுகம் செய்தல்.
1979 - மைக்கேல் போர்ட்டர் (Michael Porter) படைத்த ஐந்து சக்திகள் மாடல் (Five Forces Model)
1985 - பால் ஹெர்ஸி (Paul Hersey), கென் ப்ளான்சர்ட் (Ken Blanchard) இருவரும் இணந்து படைத்த சூழ்நிலை தலைமைக் கொள்கை (Situational Leadership Theory)
1985-ல் தொடங்கி, இன்றுவரை தொடரும் மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டம்கள்.
1986 - மோட்டரோலா கம்பெனி கொண்டு வந்த சிக்ஸ் சிக்மா (Six Sigma) கொள்கை.
1989 - களில் ராபர்ட் காம்ப் (Robert Camp) வெளியிட்ட பென்ச்மார்க்கிங் (Benchmarking)
1990 - சி.கே. பிரகலாத்தின் அடிப்படைத் திறமைக் கொள்கை (Core Competence).. இதனால், வளர்ந்த அவுட்சோர்ஸிங்.
1990 - மைக்கேல் ஹாமர் ((Michael Hammer) ஆராய்ச்சி தந்த Business Process Re-engineering.
1991 - அமெரிக்க ராணுவத்தின் கண்டு பிடிப்பான வேர்ல்டு வைட் வெப் (World Wide Web – WWW),, இன்டர்நெட் ஆகியவற்றைப் பொதுமக்கள் பயன்படுத்த அமெரிக்க அரசின் அனுமதி.
1992 - ராபர்ட் காப்லான் (Robert Kaplan) – Balanced Score Card.

1993 - முழுத் தர மேலாண்மை (Total Quality Management) குறித்து எட்வர்ட்ஸ் டெமிங் (Edwards Deming) தந்த 14 கட்டளைகள்.
1995 - டேனியல் கோல்மேன் (Daniel Goleman) - Emotional Intelligence.
2004 - சி.கே.பிரகலாத் - Bottom of the Pyramid.
2005 - சான் கிம் (Chan Kim),, ரெனி மாபோர்ன் (Renee Mauborgne) ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய நீலக் கடல் யுக்தி (Blue Ocean Strategy). .
2011 - ஜெரெமி ரிஃப்கின் (Jeremy Rifkin) கணிக்கும் மூன்றாம் தொழில் புரட்சி.
(குறிப்பு: வரலாற்றின் எல்லாத் தொழில்நுட்ப மாற்றங்களையும், மேனேஜ்மென்ட் கொள்கை களையும் பற்றி இங்கே குறிப்பிட்டால், நம் எம்.பி.ஏ. தொடர் தடம் மாறிவிடும். அதனால், தொடரின் போக்குக்கு ஏற்ற முக்கியமானவற்றை மட்டுமே, இந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருக்கிறேன்.)
பிஸினஸ் உலகில் மட்டுமே சுழன்று கொண்டிருந்த இந்தக் கொள்கைகள் எப்படி கல்லூரிகளில் புகுந்தன, எம்.பி.ஏ. பாடங்களாயின? அதைத்தான் இனிமேல் சொல்லப்போகிறேன்.
(கற்போம்)
படங்கள்: கே.குணசீலன்,
சாய் தர்மராஜ்.
