மற்ற எபிசோடுகள்
Published:Updated:

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட் !

##~##

நம்முடைய இன்றைய உலகம் மிக வேகமானது. எல்லாத் துறைகளிலும் நொடிக்கு நொடி மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவற்றுக்கு ஏற்றபடி நிறுவனங்கள் தங்கள் இலக்குகளையும், பாதைகளையும் மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் காலவெள்ளம் நிறுவனங்களை அடித்துக்கொண்டு போய்விடும்.

உங்கள் அப்பா, அம்மா குழந்தைகளாக இருந்தபோது, வீட்டுக்கு வீடு ரேடியோக்கள் இருந்தன. அப்போது ரேடியோ உலகில் மர்ஃபி கம்பெனிதான் ராஜா. டிரான்சிஸ்டர்களும், எம்பி.த்ரீ ப்ளேயர்களும் வந்தபின் ரேடியோக்கள் அவுட். மர்ஃபி போன்ற கம்பெனிகளும் அவுட். ஐபேட் வந்தவுடன், டிரான்சிஸ்டர்கள், எம்.பி.த்ரீ ப்ளேயர்கள் காணாமல் போய்விட்டன.    

சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால், வீடுகளில் பிறந்தநாள் போன்ற விழாக்கள் கொண்டாடும்போது பலர் கேமராக்களோடு வலம் வருவார்கள். இன்று, ஓரிருவர் தவிர மற்றவர்கள் கைகளில் செல்போன் கேமராக்கள்! கேமராக்கள் விற்பனை சரிந்துகொண்டிருக்கிறது. 1888 முதல் கேமரா உலகில் சாம்ராஜ்ஜியம் நடத்திய கோடக் கம்பெனி 2012-ல் திவாலாகிவிட்டது.

வியாபாரம் இன்று உலகமயமாகிவிட்டது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால், வெளிநாட்டுப் பொருட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இன்றைக்கு நீங்கள் சுவிட்சர்லாந்து சாக்லேட் சுவைக்கிறீர்கள்; அமெரிக்க வாஷிங்டன் ஆப்பிளை ரசிக்கிறீர்கள்; ஆஸ்திரேலிய ஜூஸ் குடிக்கிறீர்கள்; சீனப் பொம்மைகளோடு விளையாடுகிறீர்கள்.

இந்த வேளைகளில் ஓர் உண்மையை நாம் மறந்துவிடுகிறோம். சுவிட்சர்லாந்து சாக்லேட் வாங்கும்போது, காட்பரீஸ் கம்பெனிக்கு அந்த விற்பனை குறைகிறது. வாஷிங்டன் ஆப்பிள் வாங்கும்போது, காஷ்மீர் விவசாயி வருமானம் இறங்குகிறது. பிற நாட்டு ஜூஸ் நாம் வாங்கும்போது, சீனப் பொம்மைகளை நாம் வாங்கும்போது இந்திய ஜூஸ், பொம்மை தயாரிப்பாளர்களின் விற்பனைப் பாதிக்கப்படுகிறது.

MBA - மூன்றெழுத்து மந்திரம்

முன்பெல்லாம் யார் போட்டியாளர்கள் என்று கம்பெனிகளுக்குத் தெரியும். அதற்கு ஏற்றபடி, தங்கள் திட்டங்களைத் தீட்டுவார்கள்; வியூகங்களை வகுப்பார்கள். இன்று கதையே வேறு. ஏறத்தாழ எல்லாப் பொருட்களும் தங்குதடை இல்லாமல் நம் நாட்டுக்குள் வர முடிகிறது. சமூக ஊடகங்கள், இணையதளங்கள், இ-மெயில், ஏகப்பட்ட டி.வி. சேனல்கள் ஆகியவை மூலமாக தகவல் புரட்சியே நடக்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகின்றன. ஓர் உதாரணம் பார்ப்போம்.

உங்களுக்கு ஐஸ்க்ரீம் பிடிக்கும். உங்கள் ஊர்க் கடைகளில் வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி தினுசுகள் கிடைக்கும். இவற்றில் ஸ்ட்ராபெரிதான் உங்களுக்கு அதிகமாகப் பிடிக்கும். பெங்களூருவுக்குப் போகிறீர்கள். அங்கே ஒரு பத்திரிகையில் ஐஸ்க்ரீம் கடை விளம்பரம் பார்க்கிறீர்கள். கலர் கலராக, விதம்விதமாக கப், கோன் ஐஸ்க்ரீம் படங்கள். ஆரஞ்சு ஐஸ்க்ரீம் ரசிகனாகிறீர்கள். உங்கள் ஊருக்குத் திரும்புகிறீர்கள். இப்போது ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் முன்னைப்போல் உங்களுக்குப் பிடிக்கவில்லை. மனம் ஆரஞ்சு ஐஸ்க்ரீமுக்கு ஏங்குகிறது. பெங்களூருவுக்குப் போனதால், விளம்பரம் மூலமாக ஆரஞ்சு ஐஸ்க்ரீம் இருக்கிற தகவல் உங்களுக்குக் கிடைத்ததால், உங்கள் எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.  

MBA - மூன்றெழுத்து மந்திரம்

உங்களைப்போல் பலருடைய விருப்பமும் மாறிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். இந்த மாற்றத்தை நீங்கள் போகும் பார்லர் முதலாளி புரிந்துகொண்டால், அவரும் ஆரஞ்சு ஐஸ்க்ரீம் விற்கத் தொடங்குவார். சரி, உங்கள் புதிய விருப்ப மாற்றத்தை அவர் புரிந்துகொள்ளவில்லை. இன்னொரு கடைக்காரர் ஆரஞ்சு போன்ற நீங்கள் விரும்பும் சுவைகளை விற்கத் தொடங்குகிறார். நீங்களும் நண்பர்களும் புதிய கடையின் வாடிக்கை யாளர்கள் ஆகிவிடுவீர்கள்.

பழைய கடைக்கு விற்பனை குறைந்தது. ஏன்? வாடிக்கையாளர்களின் விருப்பம் மாறிவிட்ட தகவலை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே, தொடர்ந்து ஜெயிக்கவேண்டுமானால், கம்பெனிக்கு இந்தச் சேதிகள் தொடர்ந்து கிடைக்கவேண்டும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, தங்கள் யுக்திகளை வகுக்கவேண்டும். தகவல்களைச் சேகரித்து, வரைமுறைப்படுத்தி, ஆராய்ச்சி செய்து ஆலோசனை தருபவர்கள் சிஸ்டம்ஸ் மேனேஜர்கள். இந்த வேலை, கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு நிர்வாகம் (Computer & Information Systems Management) என்றும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சாதாரணமாகத் தேடிச் சேர்க்கும் பற்பல தகவல்களில், உதாரணமாகச் சில இதோ:

தொழில்நுட்ப மாற்றங்கள், போட்டியாளர் களின் யுக்திகள் (அவர்கள் விலை குறைக்கலாம். அதிரடி விளம்பரங்கள் தரலாம். விற்பனையாளர் கள் கமிஷனைக் கூட்டலாம். உங்கள் திறமை யான ஊழியர்களை ஆசைகாட்டி இழுக்கலாம். உங்களைப் பாதுகாத்துக்கொள்ள, எதிர் தாக்குதல் செய்ய, இந்தச் சேதிகள் உங்களுக்கு உடனே எட்டவேண்டும்).

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் இருக்கிறதா அல்லது இறங்குமுகமா?

பொருளாதாரம் வளரும்போதுதான், மக்களிடம் பணம் அதிகமாக இருக்கும். நிறையப் பொருட்கள் வாங்குவார்கள்.

நீங்கள் திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்திருக்கிறீர்களா? எந்த நாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறீர்கள்? அமெரிக்காவுக்கா? அப்படியானால், அமெரிக்கப் பொருளாதாரம் உயருகிறதா, தாழ்கிறதா? கம்பெனி வாங்கும் கச்சாப் பொருட்களின் விலை ஏறுமா, இறங்குமா? அவை தடையின்றிக் கிடைக்குமா அல்லது தட்டுப்பாடு வருமா?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

சிஸ்டம்ஸ் மேனேஜர்கள் பல இடங்களிலிருந்து இத்தகவல்களைச் சேகரிக்கிறார்கள்: அரசாங்க ஆவணங்கள், வெளியீடுகள், இணையதளங்கள், தொழில் சம்பந்தமான கூட்டமைப்புகள்

(Industry Associations)பொருளாதார நிபுணர்களின் கணிப்புகள், நாளிதழ்கள், பொதுவான பத்திரிகைகள், தொழில் தொடர்பான பத்திரிகைகள், சி.என்.என்., என்.டி.டி.வி. போன்ற சேனல்கள் இன்னும் பல.

கம்பெனிக்குள்ளேயே தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக சில: விற்பனைப் பிரதிநிதிகள்தாம் வாடிக்கையாளர்களோடும், விற்பனைக் கடைகளோடும் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். தங்கள் செயல்பாடு, வாடிக்கையாளர் விருப்புவெறுப்புகள், போட்டியாளர் நடவடிக்கைகள் ஆகியவைப் பற்றி இவர்கள் தெரிவிக்கும் தகவல்கள்.

முக்கிய வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களின் விவரம். கடந்த சில ஆண்டு களில் அவர்கள் என்னென்ன பொருட்கள், எவ்வளவு வாங்கினார்கள் என்ற அடிப்படையில் அவர்களுடைய வருங்கால வாங்குதலை மதிப்பீடு செய்ய முடியும். கடந்த சில ஆண்டுகளில் கம்பெனி பயன்படுத்தும் மூலப் பொருட்களின் விலைகளில் இருக்கும் ஏற்ற, இறக்கம்.

நிறுவனம் பல பொருட்களைத் தயாரிக்கிறதா? அவற்றின் தயாரிப்புச் செலவுகளின் ஏற்ற, இறக்கம். அதிக லாபம் தரும் பொருட்கள் எவை? எந்தப் பொருளின் விற்பனையாவது நஷ்டம் கொடுக்கிறதா?

மார்க்கெட்டிங் ஆராய்ச்சிகளில் கிடைக்கும் ஆதாரங்கள், உண்மைகள். கம்பெனிகள் முடிவு எடுப்பதற்குத் தேவையான தகவல்கள் கிடைக்காமல் திணறிய காலம் உண்டு.  இன்றோ, தகவல்கள் பிரளயமாக (information explosion) பல்வேறு இடங்களிலிருந்து  வந்து கொட்டுகின்றன. நாம் ஒவ்வொருநாளும் உருவாக்கும் தகவல்களின் அளவு எத்தனை தெரியுமா?

2,500,000,000,000,000,000 பைட்ஸ் (Bytes). இது எத்தனை பெரிய நம்பர் உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

MBA - மூன்றெழுத்து மந்திரம்

உலகில் நாகரிகம் சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கியது என்று வரலாற்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இந்த 8,000 ஆண்டு களில் நாம் சேகரித்துள்ள தகவல்களில், 90 சத விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் சேமிக்கப்பட்டுள்ளது என்பது கம்ப்யூட்டர் அறிஞர்களின் கருத்து. ஊடகங்கள், கூகுள், யாஹூ, யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், பிற சர்வர்கள் ஆகியவற்றில் அடங்கியிருக்கும் தகவல்கள் இந்தக் கணக்குக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றன.

இவற்றுக்கு, ஙிவீரீ ஞிணீtணீ என்று அறிவியல் உலகம் பெயர் வைத்திருக்கிறது. பிசினஸில் மனித உழைப்பு முக்கியமாக இருந்த காலகட்டம் ஒன்று இருந்தது. அடுத்து, இயந்திரங்கள் இந்த இடத்தைப் பிடித்தன. பிறகு, மூலதனம் முக்கியமானது. இன்று, பிசினஸ் வெற்றிக்கு அறிவுதான் ஆயுதம். பில்கேட்ஸ், திருபாய் அம்பானி, நாராயண மூர்த்தி போன்றவர்கள்  பிசினஸ் மகாராஜாக்கள் ஆனது பணபலத்தால் அல்ல - தங்கள் அறிவால்! அறிவு என்பது என்ன? நமக்குத் தேவையான தகவல்கள் எவை என்று கண்டுபிடிப்பது, அவற்றை பிசினஸில் பயன்படுத்துவது.

வரும் நாட்களில் பிசினஸில் வெற்றி காணப் போகிறவர்கள், இந்த ஙிவீரீ ஞிணீtணீ-வை அலசி ஆராய்ந்து, தங்களுக்குப் பொருத்தமானவற்றை இனம் கண்டு, அவற்றைத் தங்கள் பிசினஸ்களில் பயன்படுத்துபவர்கள். ஆமாம், இவர்கள் சிஸ்டம்ஸ் மேனேஜர்கள்தாம்!

இந்த சவால்களைச் சமாளிக்க, எம்.பி.ஏ. படிப்பு, மாணவர்களைப் பல பாடங்கள் மூலம் தயாராக்குகிறது. சாம்பிளுக்குச் சில: முதல் வருடத்தில், Information Technology for Management, Information Systems for Business.

இரண்டாம் வருடத்தில், Information Technology for Management, Information Systems for Business. Þó‡ì£‹ õ¼ìˆF™, Technology Trends and Cloud Computing, Business Intelligence, Knowledge Management, IT Strategy, Enterprise Resource Planning, IT enabled Services, IT Products & Service Management, Business Analysis & Design என்று வகை வகையாக!  

(கற்போம்)
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்.