பணத் தேவைக்கு கைகொடுக்கும் சொந்த வீடு!
##~## |
'சொந்தமா ஒரு வீடு இருந்தா போதுங்க, எந்தக் கவலையும் இல்லாம இருக்கலாம்’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். இது நூற்றுக்கு நூறு நிஜம். சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது எனில், அதை வைத்து பல வழிகளில் நமக்குத் தேவையான பணத்தைத் திரட்ட முடியும். அவசரகாலத்தில் அதிக வட்டியில் பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு கடன் போன்ற கடன்களை வாங்கி சிக்கிக்கொள்வதைவிட நமக்கிருக்கும் சொந்த வீட்டை வைத்து எளிதாகப் பணம் பெற்றுவிடலாம். சொந்த வீட்டை வைத்து பணம் பெற என்னென்ன வழிகள் இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
1.வீட்டு அடமானக் கடன்!
எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
உங்கள் மற்றும் குடும்பத்தி னரின் மருத்துவச் செலவு, படிப்பு செலவு, திருமணம், மருத்துவம், வணிகம் என எந்த செலவுக்கும்.
கடன் தொகை:
சொத்தின் மதிப்பில் 50% - 65% வரை
வட்டி விகிதம்: 13% - 16%
திரும்பச் செலுத்தும் காலம்:
சுமார் 10 ஆண்டுகள்

2.வீட்டு மேம்பாட்டுக் கடன்!
எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
வீட்டை உள்ளே மற்றும் வெளியே அழகுபடுத்த இந்தக் கடன் தரப்படுகிறது. வீட்டை புதுப்பிக்க, பழுதுபார்க்க, வாட்டர் ஃப்ரூப்பிங் செய்ய, தரை அமைக்க, மின்சார மற்றும் மர வேலைபாடுகள், குழாய் பராமரிப்பு, சமையல் அறையை வசதியாக மாற்ற என பல தேவைகள்.
கடன் தொகை:
மொத்த செலவில் 75% - 85%
வட்டி விகிதம்: 12.5% - 14%
திரும்பச் செலுத்தும் காலம்: 10 - 15 ஆண்டுகள்.
3.வீடு விரிவாக்கக் கடன்!

எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
கூடுதல் அறைகள்/ கூடுதல் தளம் கட்ட, பால்கனி, கார் பார்க்கிங், குளியல் அறை விரிவாக்கம்.
கடன் தொகை: மொத்த செலவில் 80% - 85%
வட்டி விகிதம்: 12.5% - 14%
திரும்பச் செலுத்தும் காலம்: 10-15 ஆண்டுகள்.
4.டாப்-அப் லோன்!
ஏற்கெனவே வீட்டுக் கடன் வாங்கி முறையாகச் செலுத்தி வருகிறவர்களுக்கு கடன் வாங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த டாப்-அப் கடன் கிடைக்கும்.
எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?

ஃபர்னிச்சர், கம்ப்யூட்டர் வாங்க, இதர கடனை அடைக்க என எந்தத் தேவைக்கும்.
கடன் தொகை: வீட்டுக் கடன் வாங்கி ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை என்றால், ஏற்கெனவே வாங்கிய மொத்தக் கடன் தொகையில் 10%, ஓராண்டுக்கு மேல் இரண்டு ஆண்டுகள் வரை 20%, அதற்கு மேற்பட்ட காலத்தில் 75% வரை கடனாகப் பெறலாம். இது வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பைப் பொறுத்தும் மாறுபடும்.
வட்டி விகிதம்: ஏற்கெனவே வாங்கி உள்ள வீட்டுக் கடனுக்கான வட்டியைவிட 0.5 முதல் 1.5% கூடுதல்.
திரும்பச் செலுத்தும் காலம்: வீட்டுக் கடனை முடிக்கும் வரையில்.
5. குறுகிய கால பிரிட்ஜ் லோன்!
எதற்கு இந்தக் கடன்?

இப்போதுள்ள வீட்டை விற்றுவிட்டு, பெரிய வீட்டை வாங்க விரும்பினால், பழைய வீட்டை அவசரமாக விற்கும்போது குறைந்த விலைக்குக் கேட்கக்கூடும். அதுபோன்ற சூழ்நிலையில் நஷ்டப்படாமல் வீட்டை விற்க கைதருவதுதான் வீட்டுக் குறுகிய கால பிரிட்ஜ் லோன் (ஹோம் ஷார்ட் டேர்ம் பிரிட்ஜ் லோன்).
எவ்வளவு கிடைக்கும்?
புது வீட்டின் மொத்த மதிப்பில் 80% - 85%
வட்டி விகிதம்:
வீட்டுக் கடனுக்கான வட்டியைவிட சுமார் 0.5% அதிகம்.
திரும்பச் செலுத்தும் காலம்:
அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அதுவரைக்கும் வட்டி கட்டிவர வேண்டும்.
6.கடன் மாற்றுக் கடன்!
எதற்கு இந்தக் கடன்?
தற்போதுள்ள வீட்டுக் கடனுக்கு வட்டி அதிகமாக இருக்கிறது என்றால், வட்டி குறைவாக இருக்கும் வேறு வங்கிக்கு கடனை மாற்றிக்கொள்ள.
கடன் தொகை: பாக்கி உள்ள கடன் தொகை அல்லது சொத்தின் மதிப்பில் சுமார் 80% வரை.
வட்டி விகிதம்:
வீட்டுக் கடனுக்கான வட்டி (10.5 முதல் 11.5%).
திரும்பச் செலுத்தும் காலம்:
அதிகபட்சம் 20 ஆண்டுகள்.
7.ப்ராபர்ட்டி ஓவர் டிராஃப்ட் அக்கவுன்ட்!
வீட்டுக் கடன் வாங்கிய வங்கியில் சொத்து ஓவர் டிராஃப்ட் அக்கவுன்ட் என்ற பெயரில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துக்கொள்ளும் வசதி இது.

எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
எந்தப் பணத்தேவைக்கும் இந்தக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
கடன் தொகை: சொத்தின் மதிப்பில் 65% வரை.
வட்டி விகிதம்:
13% - 15%
திரும்பச் செலுத்தும் காலம்:
அதிகபட்சம் 5 ஆண்டுகள் - இந்தக் கடன் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுசீரமைப்பு செய்யப்படும்.
8. வாடகை வருமானக் கடன்!
சொந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும்பட்சத்தில் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் வாங்கும் கடன் இது.
எதற்கெல்லாம் கடன் கிடைக்கும்?
எந்தப் பணத்தேவைக்கும் இந்தக் கடனை வாங்கிக்கொள்ளலாம்.
கடன் தொகை:
ஒப்பந்தகாலத்துக்கான மொத்த வாடகையில் 70% - 80%
வட்டி விகிதம்:
13.5% - 15%
திரும்பச் செலுத்தும் காலம்:
அதிகபட்சம் 10 ஆண்டுகள்.
9. ரிவர்ஸ் மார்ட்கேஜ்!
சொந்த வீடு இருந்து, அதேநேரத்தில் வருமானம் எதுவும் இல்லாத 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தக் குடிமக்கள், தங்களின் வீட்டை அடமானம் வைத்து ஆயுள் முழுக்க மாதாமாதம் அல்லது மொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக்கொள்வது ரிவர்ஸ் மார்ட்கேஜ். இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.

தம்பதிகளின் இறப்புக்குப் பிறகு கடன் வழங்கிய நிறுவனம் அந்த வீட்டை எடுத்துக்கொள்ளும். அப்போது, கடன் தொகை போக மீதமுள்ள தொகை வாரிசுகளுக்கு வழங்கப்படும். வாரிசுகள் விரும்பினால் வட்டியுடன் முழுத்தொகையை கட்டி வீட்டை மீட்டுக்கொள்ளலாம்.
எதற்கு இந்தக் கடன்?
மாதக் குடும்பச் செலவை ஈடுகட்ட.
கடன் தொகை:
சொத்து மதிப்பில் 50% - 65%
வட்டி விகிதம்:
12% - 13.5%
தொகுப்பு: சி.சரவணன்.