பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மத்திய பட்ஜெட் 2022... பங்கு, ஃபண்ட் முதலீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

பட்ஜெட்

ஶ்ரீநாத் எம்.எல், சீனியர் ரிசர்ச் அனலிஸ்ட், https://www.fundsindia.com/

மத்திய பட்ஜெட் 2022-23 முதலீடு சார்ந்த வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறது. வழக்கமாக, ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் எங்கு, எதில் முதலீடு செய்வது அல்லது இப்போது செய்திருக்கும் முதலீடுகளை எப்படி மாற்றி அமைப்பது என்பது குறித்த பல கேள்விகள் நம்மில் எழுவது வழக்கம்.

இந்தச் சூழலில், முதலீடு செய்வதற்கான நமது அணுகுமுறை எப்போதும் நமது தனிப்பட்ட நிதி இலக்குகளின் (Financial Goals) அடிப்படையிலும், சொத்துப் பிரிவு (Asset Class) பற்றிய நமது நீண்ட காலப் பார்வையின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

மத்திய பட்ஜெட் என்பது பொதுவாக, பொருளாதாரத்தின் அடிப்படை விஷயங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி ஆகும். பட்ஜெட்டை அடிப்படையாகக்கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுப்பது சரியான உத்தியாக இருக்காது. எனவே, எப்போதும் போல், முதலீடுகளைப் பிரித்து மேற்கொள்ளும் சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) என்பதே ஒருவரின் முதலீட்டு செயல்முறையின் முதல் நிலையாக இருக்க வேண்டும்.

பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மத்திய பட்ஜெட் 2022... பங்கு, ஃபண்ட்   முதலீட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள்..!

நிலை 1: உங்களின் சொத்து ஒதுக்கீட்டை முடிவு செய்யுங்கள்

உங்கள் சொத்து ஒதுக்கீட்டை முடிவு செய்யும்போது கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில், உங்கள் முதலீட்டுக் காலத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். நிதி இலக்கை அடைவதற்காகக் காலக்கெடு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதற்கேற்ப உங்கள் முதலீட்டைப் பங்குச் சார்ந்த திட்டங்களில் (நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) செய்ய வேண்டும்.

இரண்டாவது, உங்கள் பங்கு சார்ந்த முதலீட்டுக் கலவையில் (Portfolio) எவ்வளவு தற்காலிக சரிவை அதாவது, மதிப்புக் குறைவை நீங்கள் தாங்கிக்கொள்ள முடியும் என்பதைக் கணிக்க வேண்டும்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 10% - 20% சரிவு நிகழக்கூடும். மேலும், ஒவ்வொரு 7 முதல் 10 ஆண்டுகளில் 30% - 60% வரை பெரிய சரிவுகள் நிகழக்கூடும். உங்களால் தற்காலிக சரிவுகளை எளிதாகக் கையாள முடியும் எனில், உங்கள் முதலீட்டில் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் ஒதுக்கீடு அதிகமாக இருக்கலாம்.

அப்படி இல்லையெனில், ஈக்விட்டி ஒதுக்கீடு குறைவாக இருக்க வேண்டும். முக்கியமான விஷயம், உங்கள் போர்ட் ஃபோலியோ மூலம் கிடைக்கும் வருமான எதிர்பார்ப்பும் குறைவாக இருக்க வேண்டும். அதிக வருமானம் வேண்டும் என்று எதிர்பார்த்தால், அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும் என்பதைப் பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த இரண்டின் அடிப் படையில், பங்கு சார்ந்த திட்டங்கள் மற்றும் நிலையான வருமான திட்டங்களில் (Fixed Income) ஆகியவற்றில் முதலீட் டைப் பிரித்து மேற்கொள்ள வேண்டும்.

நிலை 2: உங்கள் பங்கு சார்ந்த முதலீடுகளை அமைத்தல்

மத்திய பட்ஜெட்டுக்கு முன், பங்குச் சந்தை மதிப்பீடுகள் அதிகமாகவும் மற்றும் சந்தை உணர்வுகள் (Market Sentiment) கலவையாகவும் இருந்தன. எனினும், அடுத்த சில ஆண்டு களில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 - 7 வருட காலகட்டத்தில் இந்தியப் பங்குகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் எனக் கருதலாம்.

மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது மேற்கூறிய கண்ணோட்டத்துக்கு மேலும் வலுசேர்க்கிறது. நிதி ஆண்டு 2022-23-க்கு ஒதுக்கப்பட்ட அதிக மூலதன விரிவாக்கச் செலவுகளின் விளைவாக, வரும் ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயானது வளர்ச்சி அடையக்கூடும். இது பங்குச் சந்தைகளுக்குச் சாதகமானதாக இருக்கும்.

எப்படி முதலீடு செய்வது?

பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டைப் பரவ லாக்கம் (Diversified) செய்ய முன்னுரிமை கொடுக்கலாம். தரம், நியாயமான விலையில் வளர்ச்சி (Growth at A Reasonable Price GARP), மிட்கேப் ஃபண்டுகள், ஸ்மால்கேப் ஃபண்டுகள் மற்றும் பன்னாட்டு ஃபண்டுகள் என ஐந்து வெவ்வேறு முதலீட்டு ஸ்டைல் களைப் பின்பற்றி முதலீட்டுத் தொகையைச் சமமாகப் பிரித்து முதலீடு செய்யலாம். இந்தப் பரவலாக்கம் செய்யப்பட்ட அணுகுமுறை குறைந்த ஏற்ற இறக்கத்து டன் ஐந்து வருடத்துக்கு மேற்பட்ட முதலீட்டுக் காலத்தில் நல்ல வருமானத்தைப் பெற உதவும்.

நிலை 3: உங்கள் ஃபிக்ஸட் இன்கம் முதலீடுகளை உருவாக்குதல்

பட்ஜெட்டுக்கு முன்பு, ஃபிக்ஸட் இன்கம் திட்டங் களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழலில் இருந்தோம். அடுத்த 12 - 18 மாதங்களில் வட்டி விகிதம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். இப்போது மத்திய பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) என்பது நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி யில் (GDP) 6.4 சதவிகிதமாக இருக்கும் என்றும், நிதி ஆண்டின் நிகர சந்தைக் கடன் 11 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. இவை இரண்டும் கடன் சந்தை (Bond Market) எதிர் பார்த்ததைவிட அதிகமாக இருக்கிறது. எனவே, பணவீக்க விகித அதிகரிப்பு, அதிக அரசு கடன் பத்திரங்கள் வெளியீடு, சர்வதேச அளவில் வட்டி விகித உயர்வு போன்றவற்றின் காரணமாக பாண்ட் சந்தையில் யீல்டு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

எப்படி முதலீடு செய்வது?

அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, ஃபிக்ஸட் இன்கம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் முதலீட்டுக் கலவையில் சுமார் 80% அளவுக்கு ஏஏஏ (AAA) தரக்குறியீடு கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருக்க வேண்டும். இந்தக் கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலம் (Modified Duration) 1 வருடம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். குறைந்த முதிர்வுக் காலமுள்ள ஃபண்டுகளில் வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழ்நிலையில் (Rising Yield Environment) விலை இறக்கங்கள் குறைவாக இருக்கும். அவை, வட்டி விகிதங்கள் அதிகரித்த பின் அதிக யீல்டுகளுக்கு விரைவாக அட்ஜஸ்ட் செய்துகொள்வதால், வருமானமும் அதிகரிக்கும்.

பட்ஜெட்க்குப் பிறகு, ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் இன்கம் ஃபண்டு களில் இந்த மாற்றங்களை எல்லாம் நீங்கள் செய்துகொண்டால், உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மனம் நிறைந்ததாக இருக்கும் என்பதைக் கூடியவிரைவில் நீங்களே உணர்வீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!