நடப்பு
Published:Updated:

மாதம் ரூ.4,000 முதலீடு.. 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் சேர்த்த டாக்ஸி டிரைவர்! கூட்டு வட்டி தந்த லாபம்!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

I N V E S T M E N T

ஆகாஷ்

மாதம்தோறும் சில ஆயிரங்கள் முதலீடு செய்தாலே போதும்; மியூச்சுவல் ஃபண்டில் நீண்டகாலத்தில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு டாக்ஸி டிரைவர். பெங்களூரில் மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகராக இருக்கும் பசவராஜ் தொனகட்டியை காரில் அழைத்துச் செல்வது இந்த டாக்ஸி டிரைவரின் வழக்கம்.

ஒருமுறை காரில் செல்லும்போது, தனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானதாகவும், சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், இந்தக் குழந்தைக்காக பணம் சேர்த்து வைக்க விரும்புவதாகவும் சொன்னார் அந்த டாக்ஸி டிரைவர். அவருக்கு இரண்டு ஃபண்டுகளைப் பரிந்துரைத்து, மாதம்தோறும் 4,000 ரூபாயை அந்தத் திட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தாமல் முதலீடு செய்யும்படி சென்னார் பசவராஜ்.

முதலீடு
முதலீடு

அவர் சொன்னபடி, அந்த டாக்ஸி டிரைவர் 2011-ல் தனது முதலீட்டைத் தொடங்கினார். கடந்த பத்து ஆண்டுகளில் இரு திட்டங்களும் அவர் முதலீடு செய்த தொகை ரூ.4,69,998. இன்று அதன் மதிப்பு ரூ.9,87,986. அவரது முதலீடு 14.78% என்கிற அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தாலும், அதை விடாமல் சேர்த்ததால், இன்று அந்த டாக்ஸி டிரைவரிடம் ஓரளவுக்குப் பணம் சேர்த்திருக்கிறது. இவரைப் போல, நீங்களும் செய்யத் தொடங்கலாமே!