தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வருமான வரிச் சலுகை, வருமான வரி அனுகூலம்... என்ன வித்தியாசம்?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

திவ்யா அபிஷேக், சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட்

நம்மில் பெரும் பாலானோர் வருமான வரிச் சலுகை (Income Tax Benefit), வருமான வரி அனுகூலம் (Income Tax Efficiency) என இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளாமல் குழம்புகிறார்கள். இந்த இரண்டும் வேறு வேறு ஆகும். இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம் என்பதைப் பார்ப்போம்.

திவ்யா அபிஷேக்
திவ்யா அபிஷேக்

வருமான வரிச் சலுகை...

ஒருவர் ஈட்டும் மொத்த வருமானத்தில் கட்ட வேண் டிய வருமான வரியை மிச்சப் படுத்தும் முதலீடு அல்லது செலவை வருமான வரிச் சலுகை எனக் குறிப்பிடலாம். அதாவது, குறிப்பிட்ட சில முதலீடுகள் அல்லது செலவு களைச் செய்துவிட்டு, அந்தத் தொகையை வருமானத்தி லிருந்து கழித்துக்கொள்வது தான் வருமான வரிச் சலுகை.

உதாரணமாக, வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் பணியாளர் பிராவிடென்ட் ஃபண்ட் (EPF), பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF), ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்வதன் மூலம் கட்ட வேண்டிய வருமான வரியைக் குறைப்பது வருமான வரிச் சலுகை எனப்படும்.

இதே போல், மேலும் பல பிரிவுகளின்கீழ் செய்யப்படும் செலவுகளையும் ஒருவர் வருமானத்தில் கழித்து வருமான வரிச் சலுகை பெற்று குறைவான வரியைக் கட்டலாம் அல்லது வரியைத் தவிர்க்கலாம். உதாரணமாக, மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்துக்குக் கட்டும் தொகைக்கு 80டி பிரிவின்கீழ் கிடைக்கும் வருமான வரிச் சலுகையைக் குறிப்பிடலாம்.

வருமான வரிச் சலுகை, வருமான வரி அனுகூலம்... என்ன வித்தியாசம்?

வருமான வரி அனுகூலம்...

ஃபிக்ஸட் டெபாசிட்டைப் (எஃ.டி) பொறுத்தவரை, அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும். இதில், முதலீட்டை எத்தனை ஆண்டுகள் வைத்திருந்தாலும் வரிச் சலுகை கிடையாது. அதாவது, ஃபிக்ஸட் டெபா சிட்டுகள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு, முதலீட்டை எத்தனை ஆண்டுகள் தொடர்ந்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) அதற்கேற்ப அவர் வருமான வரியைக் கட்ட வேண்டும். இதை வருமான வரி அனுகூலம் இல்லாத முதலீடு என்பார்கள்.

எஃப்.டி மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு ஆண்டுதோறும் வருமான வரியைக் கட்ட வேண்டும். உதாரணமாக, ஒருவர் ரூ.1 லட்சம் ரூபாயை 10% வட்டி வருமானம் தரும் எஃப்.டி-யில் முதலீடு செய்கிறார் எனில், அவருக்கு ஓராண்டில் ரூ.10,000 வட்டி வருமானமாகக் கிடைக்கும். அவர் 30% வருமான வரி வரம்பில் வந்தால், ரூ.3,000 வருமான வரியாகக் கட்ட வேண்டும். இப்படியே ஒவ்வோர் ஆண்டும் வட்டி வருமானத்துக்கு அவர் வருமான வரியைக் கட்ட வேண்டும். மூன்றாண்டுகளில் மொத்தம் ரூ.9,000 வருமான வரியாகக் கட்டியிருப்பார்.

இதுவே அவர் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருக்கிறார் என வைத்துக்கொள்வோம். 10% வருமானத்தில் மூன்றாண்டுகள் கழித்து அவருக்கு ரூ.33,100 வருமானம் கிடைக்கும். மூன்றாண்டுகளில் சராசரி பணவீக்க விகிதம் 7% என்று வைத்துக்கொள்வோம். கடன் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, மூன்றாண்டு கழித்து யூனிட்டுகளை விற்று லாபம் பார்க்கும்போது நீண்ட கால மூலதன ஆதாய வரி (Long Term Capital Gains Tax-LTCG) கட்ட வேண்டும். அதாவது, லாபத்தில் பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வருமான வரியைக் கட்டினால் போதும். (மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் விலைவாசி குறியீட்டை (Cost Index) அறிவிக்கும். அதன் அடிப்படையில்தான் பணவீக்க விகித சரிக்கட்டலை மேற்கொள்ள வேண்டும்.)

அந்த வகையில் நீண்ட கால மூலதன ஆதாயமான ரூ.33,100-ல் ஆண்டுக்கு 7% (மூன்றாண்டு மொத்த பணவீக்கம் 21%) என்பது ரூ.6,951 ஆகும். மீதி உள்ள ரூ.26,149-ல் 20% என்பது ரூ.5,230 ஆகும். இந்த 5,230 ரூபாய்தான் வரி. அதாவது, ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வருமான வரியைவிட ரூ.3,770 குறைவாகும். இங்கே ஒரே முதலீட்டுத் தொகை, ஒரே வருமானம், ஒரே முதலீட்டுக் காலம். ஆனால், கட்டும் வருமான வரிகுறைவு. இதைத்தான் வருமான வரி அனுகூலம் என்று சொல்கிறோம்.

இதேபோல், நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளும் வருமான வரி அனுகூலம் கொண்டவை ஆகும். அவற்றில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்குக் கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்டு கிடைக்கும் லாபத்துக்கு 10% வரி கட்டினால் போதும்.

வருமான வரிச் சலுகை, வருமான வரி அனுகூலம் - இந்த இரண்டு இடையே இருந்த குழப்பம் நீங்கியதா?