Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்: எந்த வயதினர் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்? கிடைக்கும் லாபம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் லாபங்கள் என்கிற போது, குறைவான முதலீட்டுத் தொகையாக ரூ.100 கூட முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். முதலீட்டை தேவைக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.

Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்: எந்த வயதினர் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்? கிடைக்கும் லாபம் என்ன?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் லாபங்கள் என்கிற போது, குறைவான முதலீட்டுத் தொகையாக ரூ.100 கூட முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். முதலீட்டை தேவைக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்களில் சுமார் 35 சதவிகிதம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  இந்த சதவிகிதம் 2021-22-ம் ஆண்டிலும் இதே அளவுக்குதான் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இதே அளவாகத்தான் இருக்கிறது. இது முதலீட்டுக் கணக்குகளின் (Folios) அடிப்படையிலான கணக்கீடு ஆகும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

முதலீடு அதிகரிப்பு..!

மேலும், இந்தப் பிரிவு முதலீட்டாளர்கள் கிட்டத்தட்ட அவர்களின் முதலீட்டுத் தொகையை ஏற்கெனவே முதலீடு செய்து வரும் முதலீட்டுக் கணக்கில் அதிகரித்து வருபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏற்கெனவே தேர்ந்தெடுத்த ஃபண்ட்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள்.

 2022-23-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்களில் 36 முதல் 45 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 24 சதவிகிதமாக இருந்தது. இது முந்தைய நிதி ஆண்டில் 19 சதவிகிதமாக இருந்தது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி (AMFI) வெளியிட்டுள்ள தகவல் ஆகும்.

மியூச்சுவல் ஃபண்டின் லாபங்கள்..!

2022-23 ஆம் நிதி ஆண்டில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருப்பவர்களில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் 59% ஆகும். அதாவது, முதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் (Mature Investors) தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்து வருகிறார்கள் என்றே கூறலாம். இந்த முதலீட்டாளர்கள், அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டின் லாபங்களை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும், இந்த முதலீட்டாளர்களில் மிக அதிகமானவர்கள் கணிசமான தொகுப்பு நிதியை வைத்திருக்கிறார்கள்.

சிவகாசி மணிகண்டன்.  நிறுவனர், Aismoney.com
சிவகாசி மணிகண்டன். நிறுவனர், Aismoney.com

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் லாபங்கள் என்கிற போது, குறைவான முதலீட்டுத் தொகையாக ரூ.100 கூட முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; தேவைக்கு எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

முதலீட்டை தேவைக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம். அதேபோல், தேவைக்கு பகுதி பணத்தை கூட எடுத்துக் கொள்ளலாம்.

பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களின் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட சுமார் 2 மடங்கு லாபத்தை பெற உதவும். மேலும், வருமான வரி அனுகூலமும் கொண்ட முதலீடாகும்.  பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட்களின் யூனிட்களை ஓராண்டுக்கு மேல் விற்று லாபம் பார்க்கும் பட்சத்தில், நிதி ஆண்டில் நீண்ட கால ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் லாபத்துக்கு 10% வரிக் கட்டினால் போதும்.

இளைஞர்களின் பங்களிப்பு..!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகதான் இருக்கிறது. 2022-23 ஆம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்களில் 18 வயதுக்கு கீழுள்ளவர்களின் எண்ணிக்கை 3% ஆகதான் உள்ளது. இது முந்தைய 2021-22 ஆம் நிதி ஆண்டில் 6 சதவிகிதமாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருப்பவர்களில் 18 வயதுக்கு மேல் 24 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 3% ஆகதான் உள்ளது. இது முந்தைய 2021-22-ம் நிதி ஆண்டில் 4 சதவிகிதமாக இருந்தது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்

பெற்றோர்கள், காப்பாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கின் மூலமாகவே மியூச்சுவல் ஃபண்டில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யலாம் என்று செபி அமைப்பு அனுமதி கொடுத்திருக்கிறது. இனி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பெயரில் எந்தத் தடையும் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்பதால் வரும் காலத்தில் சிறுவர்களின், இளைஞர்களின் முதலீடு மியூச்சுவல் ஃபண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் வயது விவரம்..

மியூச்சுவல் ஃபண்ட்: 
எந்த வயதினர் அதிகமாக முதலீடு செய்கிறார்கள்? கிடைக்கும் லாபம் என்ன?

2022-23 முதலீட்டுக் கணக்குகளின் அடிப்படையில், இதில் 9% பேர் பிறந்த தேதி கொடுக்கவில்லை.