
கேள்வி - பதில்
உ.தங்கர், இ-மெயில் மூலம்.
கேம்ஸ் (CAMS) மற்றும் கேஃபின் டெக்னாலஜிஸ் (KFin Technologies) இடையேயான ஒற்றுமை, வேற்றுமை என்ன? மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இவர்களின் பணி என்ன?
ஶ்ரீகாந்த் மீனாட்சி, இணை நிறுவனர், Primeinvestor.in
‘‘இந்த இரண்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தொழிற்சேவை புரிபவை. முதலீட் டாளர்களின் பட்டியலை நிர்வகித் தல், அவர்களுக்கு நுகர்வோர் சேவைகளை அளித்தல், அவர்களின் ஃபண்ட் யூனிட்டுகளைக் கணக்கு வைத்தல் போன்ற பல நிர்வாகரீதி யான விஷயங்களை இந்த நிறுவனங் கள் கவனித்துக்கொள்கின்றன. இதனால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஃபண்ட் மற்றும் முதலீட்டு நிர்வாகத்தில் மட்டும் கவனம் செலுத்த ஏதுவாகிறது.
செய்யும் வேலை ஒன்று என்றாலும் இந்த நிறுவனங்கள் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு தனது சேவைகளை அளிக்கின்றன. இது மட்டுமே அவற்றுக்கு இடையேயான வேற்றுமை ஆகும்.
முதலீட்டாளர்களுக்கு ஃபோலியோ நிர்வாகம், முதலீட்டு விண்ணப்பங்களை நிர்வகித்தல், முதலீட்டு ஆவணங்களை அளித்தல் போன்ற சேவைகளையும் இந்த நிறுவனங்கள் அளிக்கின்றன."

மாணிக்கம், கள்ளக்குறிச்சி.
மூன்று ஆண்டுகளுக்குள் வீடு கட்டுவதாகச் சொல்லி வீட்டு வசதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கினேன். அதற்கு வீட்டுக் கடனுக்குரிய வட்டியே நிர்ணயிக்கப்பட்டது. இப்போது என்னால் வீடு கட்ட முடியவில்லை எனில், என்ன நடக்கும்?
ஆர்.கணேசன், முதன்மைச் செயல் அதிகாரி, Navarathnahousing.com
“உடனடியாக அல்லது சில ஆண்டுகளில் வீடு கட்டும் நோக்கத்துடன் வாங்கப்படும் மனைக் கடன்களுக்கான வட்டி வீட்டுக் கடனுக்கான வட்டி அளவே இருக்கும். அந்த மனையில் வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தைப் பொறுத்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வீடு கட்ட வேண்டும்.
அப்படி இல்லை எனில், கடனுக்கான வட்டி, வீட்டுக் கடன் வட்டியிலிருந்து மனைக் கடனுக்கான வட்டியாக அதிகரிக்கப்படும். அதாவது, வீட்டுக் கடனுக்கான வட்டி 7 - 8% எனில், அது மனைக் கடனுக்கான வட்டி 10 - 12% என்பதுபோல் அதிகரிக்கப்படும்.
சில வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் ஏற்கெனவே வீட்டுக் கடனுக்கு வசூலித்த வட்டியை மனைக் கடனுக்கான வட்டியாக மாற்றி அதிக வட்டி கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. இது போன்ற கடன்களை வாங்கும்போது நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக ஒரு முறைக்கு இரு முறை தெளிவாகப் படித்து புரிந்துகொள்வது நல்லது.”

வி.கிருபாகரன், புதுக்கோட்டை.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் நிதி ஆண்டில் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வரி கிடையாது. அதற்கு மேற்படும் தொகைக்கு 10% வரி கட்ட வேண்டும் என்பதைக் கொஞ்சம் விளக்கிச் சொல்லவும்.
கோபால் கிருஷ்ண ராஜு, ஆடிட்டர்.
“நிதி ஆண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31) ஒருவர் பங்கு முதலீடு மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயத் துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரிக் கிடையாது. அதற்கு மேற்படும் தொகைக்கு பணவீக்க சரிகட்டல் (இண்ட்க்ஸ் சேஷன்) இல்லாமல், 10% வரி கட்ட வேண்டும். இந்தக் கணக்கீடு ஒருவர் செய்திருக்கும் அனைத்து பங்கு முதலீடுகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீட்டுக்குப் பொருந்தும்.”
ஏ.கண்ணன், இ-மெயில் மூலம்.
பைசா பங்குகள் என்கிற பென்னி ஸ்டாக்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்குமா?
ரெஜி தாமஸ், பங்குச் சந்தை நிபுணர்.
“பங்கின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது; குறைந்த தொகைக்கு அதிக எண்ணிக்கை யில் பங்குகள் கிடைக்கும் என்கிற எண்ணத்துடன் இந்தப் பைசா பங்குகளில் பலரும் முதலீடு செய்கிறார்கள். இது லாபகரமான முதலீடாக இருக்காது. நிறுவனத் தின் அடிப்படை எதுவும் தெரியாமல் ஒரு நிறுவனப் பங்கை வாங்குவது சூதாட்டமாக மாறும்.
எனவே, நிறுவனத்தின் வணிகச் செயல்பாடு, அதன் வருமானச் செயல்பாட்டின் அடிப்படையில் பங்குகளை வாங்குவதுதான் சரியான அணுகுமுறையாகும்.தேவைப்பட்டாலோ, குறுகிய கால முதலீடு என்றாலோ டெக்னிக்கல் அனாலிசிஸ் பயன் படுத்திக்கொள்ளலாம்.”
ரஞ்சித் குமார், இ-மெயில் மூலம்.
என் வயது 29. என் மாதச் சம்பளம் ரூ.35,000. இதுவரையில் நான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வில்லை. மாதம் ரூ.15,000 மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பு கிறேன். இந்தப் பணம் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் ஓய்வுக்காலத்துக்கு தேவை. நான் எந்த வகை மற்றும் எத்தனை ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்?
வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in
“நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு புதியவர் என்பதால், எளிய திட்டத்தில் முதலீட்டை ஆரம்பிக்கலாம். காரணம், இந்த வகை ஃபண்டுகளை அடிக்கடியும் அதிக மாகவும் கவனிக்கத் தேவையில்லை.
உங்களின் முதலீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை நிஃப்டி 50, நிஃப்டி 500 இண்டெக்ஸ் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம். இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகளை அதிகம் கவனிக்கத் தேவையில்லை. இவை கிட்டத்தட்ட பங்குச் சந்தை எந்த அளவுக்கு லாபம் தருமோ, அதே அளவுக்கு தரும்.
மீதி 50% தொகையை பொது சேமநல நிதியில் (பி.பி.எஃப்) முதலீடு செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே பி.பி.எஃப்பில் முதலீடு செய்திருக்கிறீர்கள் எனில், குறைவான ரிஸ்க் கொண்ட கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்யலாம். அல்லது பாதிப் பணம் பி.பி.எஃப், பாதித் தொகை கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இப்படிச் செய்யும்போது கிடைக்கும் லாபம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
கடன் ஃபண்டுகள் என்கிறபோது, ஆக்ஸிஸ் பேங்கிங் & பி.எஸ்.யூ டெப்ட் ஃபண்ட் மற்றும் ஏ.பி.எஸ்.எல் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் ஆகியவற்றைக் கவனிக்கலாம்.
ஈக்விட்டி ஃபண்டுகளின் மூலம் லாபம் ஈட்ட பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம் கண்டு கவலைப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்து வர வேண்டும். மேலும், சந்தை இறக்கத்தில் முதலீட்டை வெளியே எடுக்காமல் இருப்பது அவசியம். முடிந்தால் அந்தக் காலகட்டத்தில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.
ஈக்விட்டி ஃபண்டுகளில் குறைந்தபட்சம் ஏழு ஆண்டு களுக்கு முதலீட்டை வைத்திருக்கும்பட்சத்தில், நல்ல லாபம் ஈட்ட முடியும். உங்களால் ரிஸ்க் எடுக்க முடியும் எனில், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீட்டை 60 - 65% அளவுக்கு அதிகரித்துகொள்ளலாம். மேலும், மிட்கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம்.”