Published:Updated:

எத்திராஜ் கல்லூரி மாணவிகளின் கலக்கல் பிசினஸ் முயற்சி... 17 ஆண்டுகளாகத் தொடரும் `ED-Bazaar'

பெண்கள் தேசத்தின் மையமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் தன்னிறைவு பெற்றவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பது முக்கியம். இதை நோக்கமாகக் கொண்டு எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ED-Bazaar திட்டம் மாணவிகளை சரியான திசையில் தயார்படுத்துகிறது.

Published:Updated:

எத்திராஜ் கல்லூரி மாணவிகளின் கலக்கல் பிசினஸ் முயற்சி... 17 ஆண்டுகளாகத் தொடரும் `ED-Bazaar'

பெண்கள் தேசத்தின் மையமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் தன்னிறைவு பெற்றவர்களாகவும் திறமையானவர்களாகவும் இருப்பது முக்கியம். இதை நோக்கமாகக் கொண்டு எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ED-Bazaar திட்டம் மாணவிகளை சரியான திசையில் தயார்படுத்துகிறது.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதைவிடவும், சொந்தமாக நிறுவனம் தொடங்கி நான்கு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் இன்றைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளது. ஆனால், பிசினஸ் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டால்தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறமுடியும்!

படிக்கும்போதே கல்லூரி மாணவிகள் பிசினஸ் செய்யும் வாய்ப்பை எத்திராஜ் மகளிர் கல்லூரி `ED Bazaar' என்கிற பெயரில் கடந்த 17 ஆண்டுகளாக உருவாக்கிக் கொடுத்து வருகிறது. இளம்வயதிலேயே மாணவிகளிடம் பிசினஸ் ஆர்வத்தையும், அவர்களுடைய யோசிக்கும் திறன், செயல்படுத்தும் திறனை ஊக்கப்படுத்தவும் இந்த இ.டி பஜார் திட்டம் நடத்தப்படுகிறது.

எத்திராஜ் மகளிர் கல்லூரி
எத்திராஜ் மகளிர் கல்லூரி

இந்த ED-Bazaar மூலம் ஆண்டுதோறும் கண்காட்சி மற்றும் விற்பனையகங்கள் அமைக்கும் திட்டத்தை எத்திராஜ் மகளிர் கல்லூரியின் பி.காம் வங்கி மேலாண்மைத் துறை செயல்படுத்தி வருகிறது.

2023-ம் மார்ச் 7-ம் தேதி 75-ம் ஆண்டு விழாவைக் கொண்டாடு வதையொட்டி, எத்திராஜ் மகளிர் கல்லூரி 17-வது `ED-Bazaar' நிகழ்ச்சியைச் சிறப்பான முறையில் நடத்தியது. முழுக்க முழுக்க மாணவிகளால் மட்டுமே செயல்படுத்தக்கூடிய இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் மேலான விற்பனையகங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 500 மாணவிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை வேஸ்ட்வின் (Wastewinn) அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஐ.பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார்.

அழகு சாதனப் பொருள்கள், சுயமாகத் தயாரிக்கப்பட்ட பொருள்கள், மூலிகைப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், கலைப்படைப்புகள், ஆரி வேலை, டெரகோட்டா நகைகள், பட்டு நூல் பாகங்கள் மற்றும் பல புதிய, அதிநவீன தயாரிப்புகள் என பல தரப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடைகளை மாணவிகள் அமைத்திருந்தனர். மேலும், புகைப்படம், மெஹந்தி மற்றும் நகங்களில் செய்யப்படும் கலை வேலைப்பாடுகள் உள்ளிட்ட சேவைகளையும் மாணவர்கள் விற்பனையங்களாக அமைத்திருந்தனர்.

கூடுதலாக, கலைஞர்கள் சிலர் தங்கள் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தி அவற்றை விற்பனை செய்தும் பணம் சம்பாதித்தனர். மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் பதிவுகள் மூலம் விற்பனையை அதிகரிக்கும் விளம்பர நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.

ED-Bazaar எத்திராஜ் கல்லூரி மாணவிகள்
ED-Bazaar எத்திராஜ் கல்லூரி மாணவிகள்

இந்த பஜாரில் ரூ. 5 முதல் ரூ.5,000 வரையிலான விலைகளில் பொருள்கள், சேவைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ED-Bazaar திட்டத்தின் முதன்மையான நோக்கம், மாணவிகள் ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கும், இயக்குவதற்கும் என்னென்ன தேவை என்பதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள உதவுவதுதான்.

அதோடு, தனிப்பட்ட முறையிலும், குழுப்பணி மற்றும் கூட்டுறவு முறையிலும் தொழில் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி, எப்படி அணுகுவது, சந்தைப்படுத்துவது போன்ற விஷயங்களையும் வருவாய், லாபப் பகிர்வு போன்ற நுட்பமான விஷயங்கள் பலவையும் கற்றுக்கொள்ள மாணவிகளுக்கு உதவுகிறது. மேலும், பாசிட்டிவ் உமன் நெட்வொர்க் (Positive Women's Network) அமைப்பினரும் இந்த பஜாரில் தங்களுடைய கடைகளை நிறுவியது கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.

ED-Bazaar
ED-Bazaar

இந்த பஜாரில் சிறந்த படைப்பாற்றல், உற்பத்தித்திறன் மற்றும் விற்பனைத் திறன் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய மாணவிகளைப் பாராட்டி காசோலை பரிசுகள் வழங்கப்பட்டன.

பெண்கள் தேசத்தின் மையமாக இருந்துவருகின்றனர். அந்த வகையில் பெண்கள் தன்னிறைவு பெற்றவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருப்பது முக்கியம். இதை நோக்கமாகக் கொண்டு எத்திராஜ் மகளிர் கல்லூரியின் ED-Bazaar திட்டம் மாணவிகளை சரியான திசையில் தயார்படுத்துவது வரவேற்கத்தக்கது.

தமிழகம் முழுக்க உள்ள கல்லூரிகள் தங்கள் மாணவ, மாணவிகள் பிசினஸ் தொடங்கி நடத்துவது தொடர்பான பயிற்சிகளைக் கட்டாயமாகக் கற்றுத் தர வேண்டும்!