Published:Updated:

புதிய 2000 ரூபாய் நோட்டு வெளியாகிறதா.... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் என்ன?

2000 ரூபாய் நோட்டு

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜ்மணி படேல், ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்போகிறதா, 2000 ரூபாய் நோட்டை விநியோகிக்க வேண்டாமென வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

Published:Updated:

புதிய 2000 ரூபாய் நோட்டு வெளியாகிறதா.... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன பதில் என்ன?

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜ்மணி படேல், ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்போகிறதா, 2000 ரூபாய் நோட்டை விநியோகிக்க வேண்டாமென வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

2000 ரூபாய் நோட்டு

2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அது தொடர்பாகப் பல சர்ச்சைகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீப காலமாக எந்த ஏ.டி.எம்-களிலும் ரூ.2,000 நமக்குக் கிடைப்பதில்லை. அப்படி எங்காவது ஒரு 2,000 ரூபாய் கிடைத்து, அதை ஏதாவது ஒரு கடையில் கொடுத்தால், நம்மை ஏற, இறங்கப் பார்ப்பதும்தான் இப்போது நடக்கிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ராஜ்மணி படேல் 2000 ரூபாய் நோட்டு தொடர்பாக அரசிடமும், நிதி அமைச்சகத்திடமும் சில கேள்விகளை எழுப்பினார். ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடப்போகிறதா, 2000 ரூபாய் நோட்டை விநியோகிக்க வேண்டாமென வங்கிகளுக்கு அரசு உத்தரவிட்டிருக்கிறதா என்று கேள்விகளை அவர் எழுப்பினார். இதற்கு நிதி அமைச்சகத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

2000 ரூபாய்
2000 ரூபாய்

மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி கூறுகையில், ``இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2000 ரூபாய் நோட்டுகளை 2016-ல் வெளியிட்டது. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டாம் என வங்கிகளுக்கு அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை" என்றார்.

இதே கருத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தெரிவித்துள்ளார். ``வங்கி ஏ.டி.எம்-கள் மூலம் 2000 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க ரிசர்வ் வங்கி தடை எதுவும் விதிக்கவில்லை. வங்கிகளுக்கு இது போன்ற எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2019-20 நிதி ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தேவை இருப்பதாக எந்த கோரிக்கையும் இல்லாத காரணத்தால் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடவில்லை'' என்று அவர் கூறினார்.

ரூ.2000 நோட்டு பற்றி பல்வேறு கருத்துகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், உயர் மதிப்பிலான அந்த நோட்டுகளை அதிக அளவில் நாம் கையில் வைத்திருக்கத் தேவை இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.