நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு... செபி அதிரடி முடிவு..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய விதித்திருந்த தடையை தற்போது நீக்கியுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டு பங்குச் சந்தை களில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகப் பல முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளிநாட்டு பங்குச் சந்தை யில் முதலீடு செய்ய அனுமதி பெற்றன. என்றாலும், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தையில் அதிகபட்சமாக 7 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.55,000 கோடி) முதலீடு செய்ய மட்டுமே செபி அனுமதி வழங்கியிருந்தது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

புதிய முதலீடுகள்...

இந்த உச்சவரம்பு அளவு முதலீட்டை இந்திய மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் எட்டின. இதன் காரணமாக புதிய முதலீடுகளை மேற் கொள்வதற்கு புதிய அனுமதி கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டுச் சந்தையில் முதலீடு செய்யும் திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக இந்திய பங்குச் சந்தை உட்பட உலகில் உள்ள அனைத்து முன்னணி பங்குச் சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. சராசரியாக 20 - 30% சரிவை அனைத்து பங்குச் சந்தை குறியீடுகளும் சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்களில் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக மியூச்சுவல் ஃபண்ட் கட்டமைப்பின் சார்பாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய அனுமதி கோரப்பட்டது. தற்போது அந்தக் கோரிக்கை ஏற்கப் பட்டு மீண்டும் 7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.55,000 கோடி) என்ற உச்சவரம்பு வரை முதலீட்டை மேற்கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு செபி அனுமதி அளித்துள்ளது. அதனால் இந்திய முதலீட் டாளர்கள் தற்போது மீண்டும் உலகச் சந்தைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் 
முதலீடு... செபி அதிரடி முடிவு..!

கரன்சி நிலவரங்கள்...

வெளிநாட்டுச் சந்தைகளில் முதலீடு செய்யும் போது கரன்சி நிலவரங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதால், உலக நாடுகளில் குறிப்பாக, அமெரிக்க பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டு அளவு அதிகரிக்கும். இது முதலீட்டாளர் களுக்கு அதிக லாபத்தை வழங்க வாய்ப்பளிக்கும்.

பொதுவாக, டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால், முதலீட்டு அளவு உயர்வு மற்றும் டாலர் மதிப்பு உயர்வு ஆகிய இரட்டைப் பலன்கள் வெளிநாட்டு குறியீடுகளின் முதலீடு செய்யும்போது முதலீட் டாளர்களுக்கு கிடைக்கும்.

ஆனாலும், அனைத்து வெளிநாட்டு பங்குச் சந்தை களும் எப்போதும் சிறப்பாகச் செயல்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக, ஜப்பான் பங்குச் சந்தை முக்கியமான குறியீடுகள், கடந்த 30 ஆண்டுகளாக நெகட்டிவ் வருமானத்தை முதலீட் டாளர்களுக்கு வழங்கி வருகிறது. உதாரணமாக, 1990-களில் ஜப்பான் பங்குச் சந்தையில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், 30 ஆண்டுகளான பிறகும் அதிக லாபம் கிடைத்திருக்காது. அதனால் வெளி நாட்டு பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தால் நிச்சய லாபம் கிடைக்கும் என்று ஒரேடியாகச் சொல்லி விடவும் முடியாது.

வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் 
முதலீடு... செபி அதிரடி முடிவு..!

நீண்ட கால முதலீடு...

கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தை கரடியின் பிடியில் கடுமையாகச் சிக்கியுள்ளது. முதலீட்டின் முக்கியமான அளவுகோல்களில் ஒன்று, அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காமல் இருப்பதாகும். அதனால் நமது முதலீட்டின் ஒரு பகுதியை இந்திய பங்குச் சந்தைகளில் மட்டுமல்லாது, வெளிநாட்டு பங்குச் சந்தைகளிலும் வைத்திருப்பது நீண்டகால நோக்கில் லாபம் தரும். அதனால் வெளி நாட்டுப் பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளர்கள் தற்போது தகுதி வாய்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைத் தேர்வுசெய்து தமது முதலீட்டை மேற்கொள்வது சரியாக இருக்கும்!