நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு... முந்தும் பங்குச் சந்தை ஃபண்டுகள்..!

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2022 செப்டம்பர் இறுதியில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் மொத்த சொத்து மதிப்பு 7% அதிகரித்து, ரூ.40 லட்சம் கோடியைத் தொட்டிருக்கிறது. அதாவது, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு ரூ.39.88 லட்சம் கோடியாக உள்ளது. கூடவே மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளின் கணக்கு (ஃபோலியோ) எண்ணிக்கை 13.81 கோடியாக அதிகரித் துள்ளது.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர்,  https://www.wmsplanners.com/

எஸ்.ஐ.பி பங்களிப்பு...

சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகளின் பங்களிப்பு 5.84 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2021 செப்டம்பரில் 5.72 கோடியாக இருந்தது.

2022 செப்டம்பரில் மட்டும் புதிதாக 23.66 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அந்த மாதத்தில் திட்ட முதிர்வு மற்றும் முழுமையாகப் பணம் எடுத்தது மூலம் 11.50 லட்சம் எஸ்.ஐ.பி கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த செப்டம் பரில் நிகரமாக 12.16 லட்சம் எஸ்.ஐ.பி ஃபோலியோக்கள் அதிகரித்துள்ளன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.13,000 கோடியை எட்டவுள்ளது. அதாவது, ரூ.12,976 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் (MFDs) மூலம் முதலீடு செய்யப்பட்டது 77% அதாவது, ரூ.9,960 கோடி ஆகும். மீதி 33%, ரூ.3,016 நேரடித் திட்டம் மூலம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.பி முதலீடு... முந்தும் பங்குச் சந்தை ஃபண்டுகள்..!

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள்...

எஸ்.ஐ.பி முதலீடு என்பது பங்குச் சந்தை சார்ந்த திட்டங் களில் மிகவும் லாபகரமாக உள்ளது. அதாவது, சந்தையின் ஏற்ற இறக்கத்தில் சராசரியாக அதிக யூனிட்டுகள் ஒதுக்கப் படுவது ஆதாயமாக உள்ளது. அந்த வகையில், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் மொத்த முதலீட்டுக் கணக்கு களில் 85% ஈக்விட்டி ஃபண்டு களாக உள்ளன. அதாவது, 4.94 கோடி எஸ்.பி.ஐ கணக்கு கள் மூலம் ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்யப் படுகிறது. (பார்க்க, அட்டவணை)

அடுத்த இடத்தில் கலப்பின ஃபண்டுகள் உள்ளன. இந்தப் பிரிவில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்படும் முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கை பங்களிப்பு 6 சதவிகிதமாக (34,45,503) உள்ளது.

எஸ்.ஐ.பி முதலீடு... முந்தும் பங்குச் சந்தை ஃபண்டுகள்..!

அடுத்த இடங்களில் இண்டெக்ஸ் ஃபண்டுகள் 3% (16,51,199), கடன் சந்தை ஃபண்டுகள் 2 சதவிகிதமாக (12,97,460) உள்ளன.

மியூச்சுவல் ஃபண்டில் ஒரு தனிநபர் மாதம் தோறும் சராசரியாக முதலீடு செய்யும் தொகை இந்தியாவின் முதல் 30 பெருநகரங்களில் ரூ.2.18 லட்ச மாகவும், அடுத்த 30 நகரங்களில் ரூ.95,000 ஆகவும் உள்ளது.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும்போது, பங்குச் சந்தை நன்றாக இறங்கியிருக்கும் காலத்தில் முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் நீண்ட காலத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியும். மேலும், சந்தை இறக்கத்தில் கூடுதலாக முதலீடு செய்யும்பட்சத்தில் மிக அதிக லாபத்தை ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் பெற வாய்ப்புள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டின் மீது நம் மக்களின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன!