தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எலெக்ட்ரானிக் கோல்டு ரெசிப்ட்... எப்படி வாங்கி, விற்பது?

தங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம்

தங்கம்

தங்கத்தை நகைகளாக, பார்களாக, இ.டி.எஃப் மூலமாக எனப் பல வழிகளில் வாங்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது, இ.ஜி.ஆர் என்கிற புதிய முறையின் மூலமும் தங்கம் வாங்கி, முதலீடு செய்ய வழி பிறந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் ‘எலெக்ட்ரானிக் கோல்டு ரெசிப்ட்’ (Electronic Gold Receipt - EGR) என்கிற விண்டோ வழியாக பட்டியல் இடப்பட்டுள்ளது. இதை வாங்கி, விற்க முடியும். எப்படி என்று கேட்கிறீர்களா?

முதலீடு செய்யப்படும் தங்கத்தைக் கட்டியாக ‘வால்ட்’ என்று சொல்லபடுகிற தங்க சேமிப்பு அறையில் வைக்கப்படும். இதில் வைக்கப்படும் தங்கத்துக்கு இணையாக, ‘வால்ட்’ நடத்தும் நிறுவனத்தால் எலெக்ட்ரானிக் வடிவத்தில் ரசீது வழங்கப்படும். இப்படி வழங்கப்படும் ரசீதுக்கு இணையாக யூனிட்டுகள் ‘டீமேட்’ கணக்கில் வரவு வைக்கப்படும். ‘வால்ட்’டில் உள்ள சேமிப்பின் அளவுக்கான வழங்கப்பட்ட ரசீதின் அடிப்படையில் வழங்கப்பட்ட யூனிட்டுகள் பங்குச் சந்தையில் பட்டியிலிடப் பட்டு வர்த்தகமாகும். பங்குகளை வாங்கி, விற்கிற மாதிரி, இந்த யூனிட்டுகளையும் வாங்கி விற்கலாம்.

எலெக்ட்ரானிக் கோல்டு ரெசிப்ட்...
எப்படி வாங்கி, விற்பது?

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் அனைவரும் இந்த இ.ஜி.ஆர் மூலம் தங்கம் வாங்கலாம், விற்கலாம். இவர்களைத் தவிர, இறக்குமதியாளர்கள், வங்கிகள், தங்க நகை உற்பத்தியாளர்கள், நகை வியாபாரிகள் என அனைவருமே வாங்கி, விற்கலாம்.

சுத்தமான 999.995 தரக்குறியீடு பெற்ற தங்கத் தின் அடிப்படையிலான சேமிப்புத் தங்கத்தின் மீது வர்த்தகம் நடைபெறுவதால், விலை அதற்கேற்ப மாறும். இதில் டிரேடிங் வர்த்தகம் குறைந்தபட்சம் 1 கிராம் (அதன் மடங்காகவும்) என்ற வகையிலும், டெலிவரி வர்த்தகம் 10 கிராம் முதல் 100 கிராம் (அதன் மடங்காகவும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பை பங்குச் சந்தை கடந்த தீபாவளி அன்று வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது.

இ.ஜி.ஆர் வழியாக முதலீடு செய்யும் நுகர் வோர்கள், எலெக்ட்ரானிக் வடிவத்தில் இருக்கும் தங்கத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைத்திருந்து, விற்காலம்!