நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிறு முதலீட்டாளர்களும் அரசு பாண்டுகளில் நேரடியாக முதலீடு செய்யலாம்..!

பாண்ட் முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
பாண்ட் முதலீடு

பாண்ட் முதலீடு

பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு முக்கியமான திட்டங்களை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தொடங்கிவைத்தார். இது போன்ற திட்டங்கள் ஒரு சில வளர்ந்த நாடுகளில் மட்டுமே உள்ளன. அந்த நாடுகளின் வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

இதில் முதல் திட்டத்தின்படி, இனி சிறு முதலீட்டாளர்கள் இணைய வழியில் அரசுக் கடன் பத்திரங்களில் சுலபமாக முதலீடு செய்ய முடியும். முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் எளிதாகப் பணப் பரிவர்த்தனை செய்து, அரசுக் கடன் பத்திரங்களில் சுலபமான முறையில் முதலீடு செய்ய முடியும். வாங்கிய பாண்டுகளை எளிதாக விற்கவும் முடியும்.

பிரதமர் மோடி தொடங்கி வைத்த மற்றொரு திட்டம், ரிசர்வ் வங்கியின் ஒன்றிணைந்த குறைதீர்ப்புத் திட்டம் (Integrated Ombudsman Scheme) ஆகும். இந்தத் திட்டத்தின் வாயிலாக சாமானிய மக்கள் மூன்று விதமான புகார்களை ரிசர்வ் வங்கியிடம் சுலபமாகத் தெரிவிக்க முடியும்.

 வங்கிகள் தொடர்பான புகார்கள்.

 வங்கிகள் அல்லாத பிற நிதித் துறை சம்பந்தமான நிறுவனங்கள் பற்றிய புகார்கள்.

 டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான புகார்கள்.

இந்த மூன்று வரையறையின்கீழ் பயனாளர்கள் புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை இணையவழி மூலமாகவோ, பிரத்யேக டோல் ஃப்ரீ நம்பர் மூலமாகவோ தெரிவிக்க முடியும். புகார் தொடர்பான ஆவணங்களை இணைய வெளியில் பதிவேற்றம் செய்யும் வசதியும் உள்ளது. தெரிவித்த புகாரின் தற்போதைய நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது.

சிறு முதலீட்டாளர்களும் அரசு பாண்டுகளில் நேரடியாக முதலீடு செய்யலாம்..!

ஒரே நாடு, நிதி தொடர்பான அனைத்துப் புகார்களுக்கும் ஒரே திட்டம் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. நிதி தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது.

ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர் களின் நிதி தொடர்பான புகார்களைத் தற்போது மாநிலங்களில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் மூலம் பெற்று வருகிறது. சென்ற ஆண்டில் பல்வேறு வாடிக்கையாளர்களின் 3.3 லட்சம் புகார்களை ரிசர்வ் வங்கி விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி புகார் தெரிவிக்கும் முறையை மேலும் சுலபமாக்கும். வாடிக்கையாளர்கள் எளிதாக இந்த வசதி மூலம் ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொள்ள முடியும். பணப் பரிவர்த்தனை தொடர்பான புகார்களை இனி எளிதாக ஆர்.பி.ஐ-யின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதால், இன்னும் அதிக மக்கள் வங்கி போன்ற அமைப்புகளைப் பயன்படுத்திப் பயன் பெறமுடியும்.

மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான்!

அர்ஜுன் பார்த்தசாரதி
அர்ஜுன் பார்த்தசாரதி

அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய அனைவருக்கும் வாய்ப்பு..!

அர்ஜுன் பார்த்தசாரதி, நிறுவனர், Inrbonds.com

“அரசுக் கடன் பத்திரங்களில் தற்போது முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் இருந்தால்தான் முடியும். ஆனால், தற்போது ரூ.10,000 இருந்தாலே முதலீடு செய்ய முடியும் என்ற நிலையை ஆர்.பி.ஐ கொண்டு வந்திருக்கிறது. அந்த வகையில் இப்போது அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் குறிப்பாக, சிறு முதலீட்டாளர்களுக்கும் கிடைத்திருக்கிறது; அதுவும் எந்தச் செலவும் இல்லாமல். இதனால் இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டில் ஒரு பகுதியைப் பாதுகாப்பான முதலீடான அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, ஓரளவு நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும்.”