தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

சென்செக்ஸ் 62400 புள்ளிகளையும் நிஃப்டி 18560 புள்ளிகளையும் தாண்டி யுள்ளது. இந்த நிலையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்தவர்கள் கணிசமான லாபத்தில் இருக்கிறார்கள். அவர்கள் லாபத்தை வெளியே எடுக்க (Profit Booking) இதுவே சரியான நேரமாகும்.

த.ராஜன் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
த.ராஜன் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

தொடர் கண்காணிப்பு...

ஒரு முதலீட்டாளர் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை வைத்திருப்பது அவசியமாகும். அப்போதுதான் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் பெற முடிவதுடன், குறைவாக வருமான வரியும் கட்ட முடியும்.

அதே நேரத்தில், முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், முதலீட்டாளரின் நிதி நோக்கங்களை, இலக்கு களை அடைய உதவுகிறதா என்பதை அவர் தொடர்ந்து சரிபார்த்து வருவது அவசிய மாகும்.

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து வெளியேறு வதற்கான 5 அறிகுறிகள் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

1. நீண்ட காலமாகக் குறைவான வருமான செயல்பாடு...

முதலீட்டாளர்கள், ஈக்விட்டி போன்ற ரிஸ்க் நிறைந்த சொத்துப் பிரிவுகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வேண்டும். முதலீடுகள் நல்ல வருமானம் தர குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பொறு மையாகக் காத்திருக்க வேண்டும்.

இருந்தாலும், முதலீடு செய் திருக்கும் ஈக்விட்டி ஃபண்ட் தொடர்ந்து இரண்டு ஆண்டு களுக்கு மேல் மோசமான வருமான செயல்பாட்டில் இருந்தால், அந்த ஃபண்டி லிருந்து வெளியேற திட்டமிட வேண்டும். கடன் ஃபண்ட் எனில், ஓராண்டிலும், ஹைபிரிட் ஃபண்ட் எனில், 18 மாதங்களிலும் இந்த முடிவை எடுப்பது நல்லது.

ஓராண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு கள் போன்ற பல்வேறு கால கட்டங்களில் முதலீடு செய்திருக்கும் ஃபண்டின் வருமானத்தையும், அந்தந்த ஃபண்டின் பெஞ்ச்மார்க் குறியீடு தந்திருக்கும் வருமானத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அனைத் துக் காலகட்டத்திலும் ஒருவர் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட், குறைவான மற்றும் மோசமான வரு மானம் தந்திருக்கும்பட்சத் தில் அந்த ஃபண்டின் யூனிட்டுகளை விற்று வெளி யேறுவது நல்லது. அந்தப் பணத்தைத் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும்?

2. மியூச்சுவல் ஃபண்டின் நோக்கங்களில் மாற்றங்கள்...

முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டு நோக்கம் (Objective) மாற்றப்பட்டு ஃபண்டின் மூலம் திரட்டப்பட்ட பணம் வேறு ரிஸ்க்கான துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது, பங்குச் சந்தை மூலதனம் (Market Capitalization) வேறுபாடு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது சில சமயங்களில் நடக்கும். அப்போது முதலீட்டாளரின் முதலீட்டு நோக்கத்துக்கு அந்த மாற்றம் பொருந்தி வராமல் இருக்கலாம்.

முதலீடு செய்திருக்கும் திட்டத்தைக் கொண்டி ருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனம் கையகப்படுத்துதல், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் உரிமை மாற்றம், வேறு திட்டத்துடன் இணைத்தல் ஆகியவை மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க் அளவை மாற்றுகின்றன. முதலீட்டாளராக அவரின் தேவையை இந்த மாற்றங்கள் பூர்த்தி செய்யாது எனில், அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவது நல்லது. யு.டி.ஐ மாஸ்டர் குரோத் ஃபண்டில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்கள், அந்த ஃபண்ட் யு.டி.ஐ டாப் 100 ஃபண்டாக மாறியபோது யூனிட்டுகளை விற்று வெளியேறியதற்கு இதுவே காரணம் ஆகும்.

3. ஃபண்டின் தன்மை மாறுதல்...

ஒரு குறிப்பிட்ட ஃபண்ட், அனைத்துப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளிலும் முதலீடு செய்யும் முதலீட்டு நோக்கத்தை (Investment Objective) கொண்டிருந்தால், லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் பங்குகள் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அண்மைக் காலத்தில் மிக அதிகமாக மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்திருக்கும் நிலையில், அதன் ரிஸ்க் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளருக்கு ஏற்றதாக இருக்காது. எனவே, அவர் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவது நல்லது. எனவே, ஒரு முதலீட்டாளராக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு ஃபண்டுகளின் முதலீட்டுக் கலவையை கவன மாகக் கவனித்துவருவது அவசியமாகும். அதுவும் ஒரு ஃபண்ட் அதன் வகையை மாற்றும்போது, உங்கள் முதலீடு ரிஸ்க்கில் மாட்டிக்கொண்டு, அதிக இழப்பை சந்திப்பதைத் தவிர்க்க தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

4. முதலீட்டின் மதிப்பு மிகவும் அதிகரிப்பு...

முதலீட்டின் மதிப்பு வேகமாக அதிகரித்து இலக்கு மதிப்பீட்டை முன்கூட்டியே அடைய சாத்தியம் உள்ளது. அப்படி அதிகரித்தால், பேராசைப்பட்டு மேலும் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் காத்திருக்க வேண்டாம். அப்படி காத்திருந்தால் இப்போது கிடைத்திருக்கும் ஆதாயத்தைக்கூட இழக்க நேரிடலாம். எனவே, எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைத்திருக்கும் நிலையில், பிராஃபிட் புக்கிங் செய்வதுதான் புத்திசாலித்தனம். குறைந்தபட்சம் லாபத்தை மட்டுமாவது ஈக்விட்டி ஃபண்டிலிருந்து எடுத்து ரிஸ்க் குறைவான கடன் ஃபண்ட், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட் போன்றவற்றுக்கு மாற்றிக் கொள்வது நல்லது.

இன்னும் எட்டு ஆண்டுகளில் உங்கள் மகள் / மகனின் உயர்கல்விக்காக ரூ.20 லட்சங்களைச் சேர்க்கத் திட்டமிட்டிருந்தீர்கள். உங்கள் முதலீடுகள் ஆறு வருட முடிவில் ரூ. 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தப் பணத்தை உடனடியாக பாதுகாப்பான மற்றும் ரிஸ்க் குறைவான முதலீடு களுக்கு மாற்றுவது நல்லது. அதே ஃபண்டில் முதலீடுகளை விட்டு வைத்தால், அடுத்தடுத்த பங்குச் சந்தை வீழ்ச்சியின் காரணமாக அதன் மதிப்பு குறையலாம். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இலக்கு மதிப்பை அடைந்துவிட்டால், தற்போது உள்ள ரிஸ்க்கான திட்டங்களி லிருந்து விலகி, பாதுகாப்பான முதலீட்டுக்குச் செல்வதன் மூலம் உயர்ந்த முதலீட்டு மதிப்பைப் பாதுகாக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டும்?

5. சொத்து ஒதுக்கீட்டின் அடிப் படையில் முதலீட்டை மாற்றி அமைத்தல்...

சில சமயங்களில் உங்கள் முதலீடுகளின் மதிப்பு மிகவும் அதிகரித்திருக்கும். அப்போது, கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவது மூலம் முதலீட்டுக் கலவையில் அஸெட் அலோ கேஷனைப் பராமரிக்க முடியும். கூடவே, லாபத்தை பாதுகாப் பதுடன் ரிஸ்க்கையும் குறைக்கலாம்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடு களில் லாபம் மிகவும் அதிகரித் திருக்கும் நிலையில், ரிஸ்க் கொண்ட ஈக்விட்டி சந்தையில் உங்கள் முதலீட்டு சதவிகிதம் அதிகமாகி இருப்பதை நீங்கள் உணர வேண்டும். மறுசீரமைப்பு மூலம் இதை நிச்சயமாக சரி செய்ய முடியும். அதாவது, அதிகமாக மதிப்பு கொண்ட ஈக்விட்டி முதலீட்டின் ஒரு பகுதியை விற்று, குறைந்த மதிப்புடைய கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வது மூலம் அஸெட் அலொகேஷனை சரியாகத் தொடர்ந்து பராமரிக்க முடியும். அப்படிச் செய்தால், முதலீட்டுக் கலவையின் ரிஸ்க் குறையும்.