மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பேசிவ் ஃபண்ட்... போர்ட்ஃபோலியோவுக்கு ஏன் அவசியம்?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 2

பாவனா ஆச்சார்யா, இணை நிறுவனர், Primeinvestor.in

முதலீடு என்று வந்துவிட்டாலே, ஆக்டிவ் ஃபண்டா, பேசிவ் ஃபண்டா என்பது நீண்ட காலமாக நடக்கும் ஒரு விவாதம். போர்ட்ஃபோலியோவில் நன்றாகச் செயலாற் றக்கூடிய ஆக்டிவ் ஃபண்டுகள் இருந்தாலும், ஓரளவு வருமானம் தரக்கூடிய பேசிவ் ஃபண்டு களிலும் நாம் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. ஏனெனில், மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் வருமானம் தரக் கூடிய சாத்தியக்கூறுகளின் அனாலிசிஸ்படி பார்க்கும்போது சில போக்குகளைக் காண முடிகிறது.

பாவனா ஆச்சார்யா 
இணை நிறுவனர், 
Primeinvestor.in
பாவனா ஆச்சார்யா இணை நிறுவனர், Primeinvestor.in

* பென்ச்மார்க் நிலையைத் தாண்டி ஏற்றம் காண மிகவும் கஷ்டப்படும் ஃபண்டுகள் உள்ளன. சில ஃபண்டுகள் சில ஆண்டுகளுக்கு முன்பைவிடவும் இப்போது இண்டெக்ஸைத் தாண்டி ஏற்றம் காண்கின்றன.

* இண்டெக்ஸைத் தாண்டி ஏற்றம் காணும் ஃபண்டுகளின் தொடர்ச்சியான நகர்வும் வெகுவாகக் குறைந்துள்ளது. அதாவது, ஃபண்டுகள் இண்டெக்ஸுக்கும் கீழே சறுக்கும் வாய்ப்பு அதிகரித்துவருகிறது. மேலும், முன்பு நிலையான வளர்ச்சியைக் கண்டுவந்த ஃபண்டு களின் வேகம் காலப்போக்கில் கணிசமாகக் குறையத் தொடங்கியிருக்கிறது.

* நன்றாகச் செயலாற்றும் ஃபண்டுகளின் லாப வளர்ச்சியும் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு, இண்டெக்ஸைத் தாண்டி ஏற்றம் கண்ட ஃபண்டுகள்கூட இப்போது குறைவான வருமான வளர்ச்சியுடன் காணப்படுகிறது.

போர்ட்ஃபோலியோவின் முக்கியமான பிரிவுகளில் காணப்படும் இந்தப் போக்குகள் உணர்த்துவது என்னவெனில், நம்முடைய போர்ட்ஃபோலியோவின் வருமான வளர்ச்சியை சமநிலையில் வைத்திருக்கும் வகையில் தனியாகவோ, ஆக்டிவ் ஃபண்டு களுடன் சேர்ந்தோ பேசிவ் ஃபண்டுகளை வைத்துக்கொள்வது பயன் தரும். பேசிவ் ஃபண்டுகள் எனில், நாம் குறிப்பிடுவது சந்தை மதிப்பின் பங்களிப்பு அதிகமாக உள்ள இண்டெக்ஸ்களான நிஃப்டி 50, சென்செக்ஸ், நிஃப்டி 100 போன்றவை என்பதை மனதில்கொள்ளுங்கள்.

பேசிவ் ஃபண்ட்... போர்ட்ஃபோலியோவுக்கு ஏன் அவசியம்?

லார்ஜ்கேப் பிரிவில் அதிகரிக்கும் நிலையற்றத்தன்மை...

பேசிவ் ஃபண்டுகள் அதிகம் தேவைப்படுகிற முதல் பிரிவு லார்ஜ்கேப் பிரிவுதான். இதில் ஒரு முக்கியமான அளவீடாக நிஃப்டி 100 டி.ஆர்.ஐ பெஞ்ச்மார்க்கைவிடவும் சிறப்பாகச் செய லாற்றும் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் காணப்படும் நிலையான போக்கை எடுத்துக்கொள்வோம். இந்த அளவீடு இண்டெக்ஸை விடவும் ஃபண்ட் எத்தனை சதவிகிதம் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது என்பதைக் கூறிவிடும். அதிக சதவிகிதத்தில் உள்ள ஃபண்டுகள் நிலையான நீடித்த வருமான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகக் கூறலாம். இந்தக் கணக்கீட்டுக்காக, ஃபண்டுகளின் ஒரு வருட மற்றும் 3 வருட ரோலிங் வருமான வளர்ச்சியை வெவ்வேறு காலகட்டங்களில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. (பார்க்க, அட்டவணை)

பேசிவ் ஃபண்ட்... போர்ட்ஃபோலியோவுக்கு ஏன் அவசியம்?

இந்த அட்டவணையிலிருந்து இரண்டு விஷயங்களை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, நிஃப்டி 100 டி.ஆர்.ஐ அளவீட்டைக் கடக்க முடியாத ஃபண்டுகள் எடுத்துக் கொண்ட கால இடைவெளியில் பாதிக்குமேல் சரியாகச் செயலாற்றாமல் உள்ளன. அதாவது, இவை பெரும்பாலும் இண்டெக்ஸைவிடக் குறைவாகவே செயலாற்றுகிறது. இரண்டு, தொடர்ச்சியாக ஏற்றத்தின் போக்கைத் தக்கவைக்க முடியாத ஃபண்டுகளாக இவை உள்ளன. 2020-21 காலத்தில் ஃபண்டுகள் பலவும் அவற்றின் மோசமான நிலையிலிருந்து மீண்டுவந்தன. இறக்கத்தைத் தாங்கக்கூடிய அவற்றின் திறன் 2020 சரிவின்போது அவற்றுக்கு உதவியாக இருந்தது. அதன் பிறகு, சில காலம் நன்றாகச் செயலாற்றவும் அது காரணமாக அமைந்தது. ஆனால், சந்தை மேல்நோக்கி ஏற்றம் காணும்போது ஃபண்டுகள் மீண்டும் இறக்கம் காணத் தொடங்கின. ஏற்றத்தின் போக்கில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில், அவற்றின் நீண்ட கால அடிப்படையிலான வருமான வளர்ச்சியின் போக்கும் மோசமாக இருக்கும்.

2017 காலகட்டத்தில் ஃபண்டுகளின் 3 வருட செயல்பாட்டைப் பார்க்கும்போது, 10-ல் 8 ஃபண்டுகள் நிஃப்டி 100-யைவிட சிறப்பான செயல்பாட்டைத் தந்திருப்பதைக் காணலாம். ஆனால், இப்போது 10-ல் 3 - 4 ஃபண்டுகள் மட்டுமே சிறப்பான செயல்பாட்டைக் கொண்டிருக்கின்றன.

லார்ஜ் & மிட்கேப் பிரிவுகளில் விருப்பத் தேர்வுகளின் போதாமை...

லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் பிரிவுகள் ஒரு போர்ட்ஃபோலியோ வில் அவசியம் இல்லை. இதன் முக்கிய பங்கு முழுவதுமாக மிட்கேப் வகையாகவே இருப்பதால் வரக்கூடிய ரிஸ்க்கை அதிகப்படுத்தாமல் அதிக வருமானத்தைத் தரக்கூடிய சாத்தியங் களுடன் இருக்க வேண்டும். மேலும் இது மல்ட்டிகேப் வகையை விடவும் சற்றுக் குறைந்த தீவிரத் தன்மையுடன் இருக்கும். இது ஃப்ளெக்ஸிகேப் மற்றும் மிட்கேப் ஆகியவற்றுக்கு இடையே நடுத்தரமான தேவைகள் கொண்டவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். இந்த வகையானது 2018 மறுவகைப்படுத்தலின்போது செபி அறிமுகப்படுத்திய புதிய வகையாகும். இந்த வகையில் உள்ள ஃபண்டு களுக்கு பெரிய வரலாறு இல்லை.

ஆனால், இந்த ஃபண்டுகள் இதுவரை தந்த வருமானத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, இதில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான ஆப்ஷன்கள் இல்லை. இதன் சராசரி செயல்பாடு, பெஞ்ச் மார்க் நிலையைத் தாண்டிய தொடர் செயல்பாடு அடிப் படையில் பார்க்கும்போது லார்ஜ்கேப் பிரிவைப் பிரதிபலிக்கிறது. மூன்று வருடமோ, ஒரு வருடமோ அவற்றின் ரோலிங் ரிட்டர்ன் அடிப்படையில் பார்த்தால், நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இண்டெக்ஸைத் தாண்டிய இதன் செயல்பாடு 50 சத விகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இது பல காலாண்டுகளாகவே அப்படி யேதான் தொடர்கிறது; எந்தவிதமான முன்னேற் றத்தையும் இந்த ஃபண்டு களின் செயல்பாட்டில் பார்க்க முடியவில்லை. 10 ஃபண்டுகளில் 5-க்கும் குறைவான ஃபண்டுகளே இண்டெக்ஸைத் தாண்டிய வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. குறிப்பாக, இந்தப் பிரிவில் சிறந்து விளங்கும் ஃபண்டை அடையாளம் காண்பது கடினம்.

அட்டவணையில் இந்தப் பிரிவில் ஒரு வருடத்தில் சராசரி வருமானம் கொடுத்த ஃபண்டும், ஒரு வருடத்தில் சிறப்பான வருமானம் கொடுத்த ஃபண்டும், கூடவே நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இண்டெக்ஸ் கொடுத்த வருமானமும் தரப்பட்டிருக் கிறது. இதைப் பார்க்கும்போது, இண்டெக்ஸைவிட அதிக வருமானத்தை இந்தப் பிரிவு ஃபண்டுகள் அரிதாகவே தந்திருக்கின்றன. இந்தப் பிரிவில் சிறப்பான வருமானத்தைத் தந்திருக்கிற ஃபண்ட் கூட மிகுந்த நம்பிக்கை தரும் ஃபண்டாக இல்லை.

அதோடு, சிறப்பாக செயலாற்றும் ஃபண்டுகளும் தற்போது தள்ளாட்டம் காண் கின்றன. உதாரணமாக, பல ஆண்டுகள் சிறப்பான வளர்ச்சியைத் தொடர்ச்சி யாகப் பதிவு செய்து வந்த மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் மார்ச் மாதத்துக்குப் பிறகு, ஓராண்டு அடிப்படையில் நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இண்டெக்ஸுக்கும்கீழே இறங்கி வர்த்தகமாகி நீண்டகால வருமான வளர்ச்சியை பாதிப்பதாக மாறியிருக்கிறது. இதற்குக் காரணம், காலாண்டு பிரைம் ஃபண்ட் ரெவியூவில் குறிப்பிட்டபடி, மிட்கேப் பிரிவு தோல்வியால் இருக்கலாம்.

அதே போல், இந்தப் பிரிவில் இன்னொரு டாப் ஃபண்டாக இருந்த ஆக்ஸிஸ் குரோத் ஆப்பர்ச் சூனிட்டீஸ் ஃபண்டும் சமீப காலங்களில் சரிவைச் சந்தித்திருக்கிறது. முந்தைய காலங்களில் ஸ்டார் செயல்பாட்டாளராக இருந்த இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டும் இன்னும் மீண்டு வரவில்லை. இதுபோன்ற சில ஃபண்டுகள்தான் இந்தப் பிரிவில் குறிப்பிடத்தக்க ஃபண்டுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மாற்றாக, இந்தப் பிரிவில் வேறு ஃபண்டுகள் இப்போதைக்கு இல்லை.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இந்தப் பிரிவு புதியது. வரும் காலங்களில் இந்தப் பிரிவுகளில் உத்திகள் மேம்படுத்தப்படலாம். எனவே, இவற்றின் போக்கில் மாற்றங்கள் வரலாம். ஆனால், தற்போதைய நிலையில் இந்தப் பிரிவில் முழுக்க மிட்கேப் ஃபண்டு கள் அல்லது ஃப்ளெக்ஸிகேப் போன்ற பேசிவ் ஆப்ஷன்களும் கொண்ட அதிக அக்ரெசிவ்வான ஃபண்டுகளைத் தேர்வுசெய்வது பயனுள்ளதாக இருக்கும்.

நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவெனில், லார்ஜ் மற்றும் மிட்கேப் பிரிவில் உள்ள ஃபண்டுகள் தொடர்ந்து நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இண்டெக்ஸைத் தாண்டி வருமானம் தர பெரிதும் தடுமாறுகிறது. சமீபத்தில் இந்த இண்டெக்ஸை சார்ந்து இண்டெக்ஸ் ஃபண்ட் அறிமுகப்படுத்தப் பட்டது. லார்ஜ் மிட்கேப் பிரிவில் உள்ள ஆக்டிவ் ஃபண்டுகளுடன் இந்த பேசிவ் ஃபண்டையும் சேர்த்து முதலீடு செய்வது வருமான வளர்ச்சியை சம நிலை யில் வைத்திருக்க உதவும்.

பேசிவ் ஃபண்ட்... போர்ட்ஃபோலியோவுக்கு ஏன் அவசியம்?

பிற பிரிவுகளில் என்ன இருக்கிறது?

மேற்கண்ட இரண்டு பிரிவுகளின் போக்கை யும் ஆராய்ந்ததிலிருந்து போர்ட்ஃபோலியோவின் வருமான வளர்ச்சிக்கு பேசிவ் ஃபண்டுகளின் சேர்க்கை சிறந்த வழி என்பது புரிந்தது. பிற பிரிவுகள் பற்றிப் பார்க்கும்போது, அவற்றிலும் சறுக்கல்கள் காணும் ஃபண்டுகள் உள்ளன. அதே சமயம், சிறப்பாகச் செயல்படும் பல ஃபண்டுகளும் உள்ளன. அந்த வகையில் மிக நெருக்கமாக வரக்கூடிய பிரிவு, ஃப்ளெக்ஸிகேப். இதில் 10 ஃபண்டுகளில் 5 ஃபண்டுகள் நிஃப்டி 500 டி.ஆர்.ஐவிடவும் நல்ல வருமான வளர்ச்சியைத் தருவதில்லை. சொல்லப்போனால், முந்தைய காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சில ஃபண்டுகள் கூட தடுமாறுகின்றன. ஆனால், இதில் ஃபண்டுகளின் தேர்வுகள் மிக அதிகமாகவே உள்ளன. இதனால் நேரடியாக ஒப்பிடக்கூட முடியாத அளவுக்கு கடினமாகவும் உள்ளன. உதாரணமாக, கோட்டக் ஃப்ளெக்ஸிகேப், யூனியன் ஃப்ளெக்ஸிகேப் அல்லது கனரா ராபிகோ ஃப்ளெக்ஸிகேப் ஆகியவை அதிக அளவில் லார்ஜ்கேப் பங்களிப்புடன் உள்ளன. இவை நிஃப்டி 500 இண்டெக்ஸைக் கடினமான அளவீடாக மாற்றியிருக்கின்றன.

பேசிவ் ஃபண்டுகளின் தேவை இருக்கிறதா என்பதை இந்தப் பிரிவு ஃபண்டுகளின் போக்கை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், நீங்கள் சந்தை மதிப்பு அடிப்படையில் பரவலான ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்பினால் அவற்றில் குவிந்த இலக்கு கொண்ட மற்றும் மதிப்பு சார்ந்த பிரிவுகளின் தேர்வுகளையும், புதிய மல்ட்டிகேப் பிரிவையும் கவனத்தில் கொள்ளலாம். இவற்றின் ஒருங்கிணைந்த போர்ட்ஃபோலியோ தொடர்ச்சியாக சிறப்பாகச் செயலாற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போதுமான வாய்ப்பை வழங்கும். ஃப்ளெக்ஸிகேப் பிரிவுக்கு நிஃப்டி 500 இண்டெக்ஸ் பொருத்தமான கலவையாக இருக்கும்.

பேசிவ் ஃபண்டுகளில் மார்க்கெட் கேப் இண்டெக்ஸ்கள் ஏன்?

நிஃப்டி 50 / நிஃப்டி 100 / சென்செக்ஸ் உட்பட மேலே குறிப்பிட்ட அனைத்து இண்டெக்ஸ் ஃபண்டுகளும் நடுத்தர மான ரிஸ்க் கொண்டவை. நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250, நிஃப்டி 500 இரண்டும் தீவிரமான ரிஸ்க் கொண்டவை. இவை அனைத்துமே மார்க் கெட் கேப் இண்டெக்ஸ்தான்.

எங்கள் ஆய்வுப்படி, மார்க் கெட் கேப் அடிப்படை யிலான இண்டெக்ஸ்கள் சிறந்த போர்ட்ஃபோலியோ உருவாக் கத்துக்கு பொருத்தமானவை ஆகும். மார்க்கெட் கேப் சார்ந்த இண்டெக்ஸ்களின் பங்களிப் பால் ஏற்றம் காணக்கூடிய பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பதை உறுதி செய்யும். அதாவது, சந்தையின் போக் குக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கும்.

இண்டெக்ஸ் சார்ந்து குறைந்த ஏற்றத்தாழ்வு, மொமன்டம், தரம் எனப் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்ட பல கவர்ச்சிகரமான பேசிவ் ஃபண்டுகள் உள்ளன. இவை ஆக்டிவ் ஃபண்டுகளுக்கு மாற்றானவை அல்ல. இவை சந்தை சுழற்சிகளுக்கு ஏற்ப செயலலாற்றுபவை என்பதால், போர்ட் ஃபோலியோவில் கூடுதலாகச் சேர்க்கப்படுபவை யாகவோ, போர்ட்ஃபோலி யோவை பரவலாக்கவோ பயன் படுத்தப் பொருத்தமானவை ஆகும்.

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்