பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வரிசைகட்டும் புதிய ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

புதிய ஃபண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய ஃபண்டுகள்

புதிய ஃபண்டுகள்

புத்தாண்டு பிறந்ததும் புதிய மியூச்சுவல் ஃபண்ட் வெளியீடுகள் (New Fund Offers - NFOs) வரிசை கட்டி இருக்கின்றன. நடப்பு 2023 ஜனவரியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட புதிய ஃபண்ட் திட்டங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறு வனங்கள் வெளியிடுகின்றன. இந்தப் புதிய ஃபண்டுகளில் பெரும்பாலானவை குறியீடு களைப் பின்பற்றும் பாசிவ் ஃபண்ட், இண்டெக்ஸ் ஃபண்டுகளாக (Passive Fund, Index Fund) இருக்கின்றன.

சி.பாரதிதாசன் 
நிதி ஆலோசகர், 
https://www.wmsplanners.com/
சி.பாரதிதாசன் நிதி ஆலோசகர்,  https://www.wmsplanners.com/

பங்குச் சந்தை மற்றும் கலப்பின சந்தை சார்ந்த ஃபண்டுகள்...

ஜனவரி மாதத்தில் வெளி யாக உள்ள நான்கு ஃபண்டு கள் பங்குச் சந்தை சார்ந்தது மற்றும் கலப்பின ஃபண்ட் ஆகும். மீதித் திட்டங்கள் எல்லாம் கடன் சந்தை சார்ந்தவையாகும். அதுவும் அதிகமாக பாசிவ் ஃபண்டு களாக இருக்கின்றன.

புதிய ஃபண்டு வெளியீடு களில் சில ஏற்கெனவே முடிந்துவிட்டன. இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய நினைப்பவர்கள், அடுத்த சில வாரங்களில் அந்த ஃபண்டுகளின் யூனிட்டுகள் மறுவிற்பனைக்கு வரும் போது அப்போதுள்ள என்.ஏ.வி அடிப்படையில் முதலீடு செய்யலாம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட், டாடா மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் ஹைபிரிட் ஃபண்டுகளை வெளியிடுகின்றன.

டாடா மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்.எஸ்.பி.சி மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை மல்ட்டி கேப் ஃபண்டை வெளியிடுகின்றன.

வரிசைகட்டும் புதிய ஃபண்டுகள்...
முதலீடு செய்யலாமா?

புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

புதிய ஃபண்டுகள் வருகின்றன என்பதற்காக எந்த முதலீட்டாளரும் அதில் அவசரப்பட்டு முதலீடு செய்யத் தேவையில்லை. அவர்களின் முதலீட்டு இலக்கை நிறைவேற்ற அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் தேவைப் படுகிறது என்கிறபட்சத்தில் மட்டுமே அதில் முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், அதே ஃபண்ட் பிரிவைச் சேர்ந்த இன்னொரு ஃபண்டில் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் புதிய ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

வரிசைகட்டும் புதிய ஃபண்டுகள்...
முதலீடு செய்யலாமா?

ஒருவரது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக் கலவையில் இல்லாத ஃபண்ட் மற்றும் எதிர்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய ஃபண்ட் என்கிறபோது மட்டுமே புதிய ஃபண்டு களில் முதலீடு செய்ய வேண்டும்.

மிகச் சில சமயங்களில் மட்டுமே புதிய ஃபண்டில் முதலீடு செய்யப் பரிசீலிக்கலாம். ஏற்கெனவே நன்கு செயல்படும் ஃபண்டுகள் பல நூறு இருக்கும்போது, கடந்த கால செயல்பாடு எதுவும் இல்லாத புதிய ஃபண்டுகளில் முதலீடு செய்துதான் ஆக வேண்டுமா என்பது முக்கியமான கேள்வியே!