கட்டுரைகள்
Published:Updated:

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? - இந்தக் கணக்கீடுகளை கவனிக்கத் தவறாதீர்கள்!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?
பிரீமியம் ஸ்டோரி
News
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?

கடன் அட்டைகள் 20 வருடங்களுக்கு முன் பரவலாகத் தொடங்கியபோது, அது வங்கிகள் தங்களுக்குத் தரும் அங்கீகாரம் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது

கடன் அட்டைகள் 20 வருடங்களுக்கு முன் பரவலாகத் தொடங்கியபோது, அது வங்கிகள் தங்களுக்குத் தரும் அங்கீகாரம் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஒரு வகையில் இப்போதும்கூட கிரெடிட் லிமிட் (கடன் தொகையின் வரம்பு) குறித்து பலருக்கும் பெருமிதம் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் நிலுவைகள் முழுமையாகச் செலுத்தப்படும்போது கடன் அட்டை பயனுள்ளதாகத் தெரியும். ஆனால், மோசமாக நிர்வகிக்கப்படும்போது அது பேரழிவை ஏற்படுத்தும்.

இந்தியாவில், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் செலுத்தப்படாத நிலுவைத் தொகைக்கு வட்டியாக 3.5% - 4.5% / மாதம் (42% - 52% வருடத்திற்கு) வசூலிக்கின்றன. மேலும், கடன் அட்டையில் குறைந்தபட்சத் தொகையை மட்டும் செலுத்திவந்தால் (புதிய செலவு செய்யாமல்), நிலுவைத்தொகையை அடைக்க 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?

கடன் அட்டைக் கணக்கீட்டின் மாதிரி விளக்கம்: அறிக்கை தேதி - பிரதி மாதம் 2-ம் தேதி; பணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் - ஒவ்வொரு மாதமும் 22-ம் தேதி; நேரந்தவறிய தொகைக்கு வட்டி - மாதம் 3.5%. உதாரணமாக, வாடிக்கையாளர் செப்டம்பர் 20-ம் தேதி ரூ. 12,000-க்குப் புதுத்துணிகள் வாங்குகிறார். செப்டம்பர் 30-ம் தேதி ரூ. 8,000-க்கு ஆன்லைனில் மளிகைச் சாமான் வாங்குகிறார். எனவே, அக்டோபர் 2-ம் தேதி அறிக்கையின்படி செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ. 20,000. இத்தொகை அக்டோபர் 22-ம் தேதிக்கு முன் செலுத்தப்பட வேண்டும். முழுமையாகச் செலுத்தினால் வட்டி கணக்கிடப்படாது. அக்டோபர் 21 அன்று, முழு நிலுவையான ரூ. 20,000-த்தைச் செலுத்தாமல், குறைந்தபட்ச நிலுவைத் தொகையான ரூ. 400-ஐ மட்டும் செலுத்துகிறார். நிலுவைத்தொகை (12,000+8,000) - 400 = 19,600. அக்டோபர் 25-ம் தேதி, கார்டுதாரர் ரூ.5,000-க்குப் புதிதாகப் பொருள்களை வாங்குகிறார். நவம்பர் 2-ம் தேதியிட்ட அறிக்கை பின்வரும் கூறுகளைக் காண்பிக்கும்...

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?

A. செலுத்தவேண்டிய வட்டி = {(மாதாந்திர வட்டி/100) x 12) / 365} x {நிலுவைத் தொகை x நிலுவை நாள்கள்)}

B. நிலுவையில் உள்ள மொத்த அசல் தொகை = கடந்த மாதக் கணக்கீடு காலத்து நிலுவைத் தொகை + புதிய கொள்முதல் = 19,600 + 5,000 = 24,600.

C. வட்டி மற்றும் நிதிக் கட்டணங்கள்மீதான சரக்கு மற்றும் சேவை வரி (GST) 18% - ரூ.199.83

D. செலுத்த வேண்டிய மொத்தக் கட்டணம் = A+B+C = 1,110.18+24,600+199.83 = 25,910.01

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?
கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா?

கடைசித் தேதிக்குள் குறைந்தபட்சத் தொகை செலுத்தப்படவில்லை என்றால், தாமதக் கட்டணங்கள் (late fee) மற்றும் வரிகள் விதிக்கப்படும். நீங்கள் செலுத்தும் பணம் பின்வரும் வரிசையில் கணக்கில் வரவு வைக்கப்படும். குறைந்தபட்ச நிலுவைத் தொகை {மொத்த GST + EMI தொகை(கள்) + 100% கட்டணம்/கட்டணங்கள் + 5% நிதிக் கட்டணங்கள்(ஏதேனும் இருந்தால்)}; செலவுகள் மற்றும் ரொக்க முன்பணம் (ஏதேனும் இருந்தால்); வட்டிக் கட்டணம், நிலுவையில் உள்ள இருப்புப் பரிமாற்றத்தொகை; நிலுவையில் உள்ள தொகை மற்றும் ரொக்க முன்பணம்.

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? - இந்தக் கணக்கீடுகளை கவனிக்கத் தவறாதீர்கள்!

கடன் அட்டை... உங்கள் வாழ்க்கையை எப்போது பாதிக்கக்கூடும்?

கிரெடிட் கார்டுகள் போலியான தன்னம்பிக்கை மூலம் சுய கட்டுப்பாட்டைத் தளர்த்துகிறது. பல பயன்பாட்டாளர்களுக்கு, தங்கள் கடன் அட்டைகளுக்கு எவ்வளவு வட்டி என்பதுகூடத் தெரியாது. அவர்கள் வட்டியின் தாக்கத்தைக் குறைத்து மதிப்பீடு செய்து கடும் நிதி நெருக்கடியில் சிக்குகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள நிதிப் பிரச்னைகளுக்குக் கடன்தான் மிகப்பெரிய காரணமாக உருவெடுத்துள்ளது.

கடன் மதிப்பீட்டு நம்பகத்தன்மை (credit score) குறைந்து, அது உங்களுக்குத் தேவைப்படும் வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்ற முக்கியமான கடன்களை பாதிக்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?

அவசரநிலைகளை நிர்வகிப்பதற்கு கிரெடிட் கார்டுகள் சரியான கருவி அல்ல. அவசரகால நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முதலில் ஒரு நிதி சேமிப்பை உருவாக்குங்கள். போதுமான அளவு பணம் சேர்ந்தவுடன் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை சரண்டர் செய்யுங்கள். முதலில் சமீபத்திய கடன் அட்டைக் கடனையும் பிறகு பழைய கடன் அட்டைக் கடன்களையும் அடையுங்கள். கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைக் குறிப்பிட்ட தேதிக்குள் முழுமையாகச் செலுத்துங்கள்.

Iஅபுபக்கர் சித்திக்
Iஅபுபக்கர் சித்திக்

உங்கள் கடன் அட்டைகளை நண்பர்கள், உறவினர்களுக்கு ஒருபோதும் கடன் கொடுக்காதீர்கள். விரைவிலேயே நீங்கள் இரண்டையும் இழக்கலாம். வருடம் ஒரு முறையேனும் உங்கள் விரிவான கிரெடிட் ஸ்கோர் அறிக்கையைச் சரிபாருங்கள். கடன், பாகுபாடு காட்டாது. மிகவும் பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை விரும்பும் மக்கள் கண்டிப்பாக கடன் அட்டை போன்ற அனைத்து எதிர்மறையான விசயங்களையும் தவிர்க்க வேண்டும்.

அட்டைப்பூச்சிகள் மனிதனின் குருதியை உறிஞ்சிக் குடிப்பவை; அதேநேரம் அவை மருத்துவத்திற்கும் பயன்படுகின்றன. அட்டைகளை எப்படிக் கையாள்வது என்பது நம் கைகளில்தான் உள்ளது!