Published:Updated:

வீட்டுக் கடன் முன்பணம் 20%: சரியாகத் திரட்டுவது எப்படி?பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..!

வீட்டுக் கடன்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, சொத்தின் மதிப்பை கணக்கிட சொத்துப் பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், இதர ஆவணக் கட்டணங்கள், தரகர் கட்டணம் ஆகியவற்றை சேர்க்க மாட்டார்கள். இதற்கான தொகையை வீடு வாங்குபவர்கள் தனியாக சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

Published:Updated:

வீட்டுக் கடன் முன்பணம் 20%: சரியாகத் திரட்டுவது எப்படி?பர்சனல் ஃபைனான்ஸ் பக்கா விதிமுறை..!

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, சொத்தின் மதிப்பை கணக்கிட சொத்துப் பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், இதர ஆவணக் கட்டணங்கள், தரகர் கட்டணம் ஆகியவற்றை சேர்க்க மாட்டார்கள். இதற்கான தொகையை வீடு வாங்குபவர்கள் தனியாக சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

வீட்டுக் கடன்

வீடு வாங்க வீட்டுக் கடன் வாங்கும்போது, வீட்டின் முழுமையான மதிப்புக்குக் கடன் கிடைக்காது. வீட்டை வாங்குபவர், கடன் தொகையைப் பொறுத்து சுமார் 20% முதல் 25 சதவிகித தொகையை கையிலிருந்து முன்பணமாகப் போட வேண்டும். இதை ஆங்கிலத்தில் Down Payment அல்லது Margin Money என்பார்கள்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறை..!

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள்  போன்றவற்றில் வீட்டுக் கடன் வாங்கும்போது வீட்டின் மதிப்பில் கிட்டத்தட்ட20% தொகையை வீடு வாங்குபவர் தன் கையிலிருந்து போட வேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) விதிமுறை ஆகும்.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

கடனுக்கும் வீட்டின் மதிப்புக்கும்  உள்ள விகிதத்தை  (LTV - Loan to Value Ratio) ரிசர்வ் வங்கி, கடன் சந்தையின் சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கும். வீட்டுக் கடன் துறைக்கு ஏற்ப இந்த டவுன் பேமென்ட் தொகை என்பது, கடன் வழங்கும் நிறுவனம், கடன் தொகை, கடனை திரும்பக் கட்டும் காலம், கடன் வாங்குபவரின் நிதி நிலை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடலாம். தற்போது கடன் தொகை ரூ.30 லட்சத்துக்கு கீழ் இருந்தால், வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பில் 10 சதவிகித தொகையை கடன் வாங்குபவர் முன்பணமாகப் போட்டால் போதும். மீதி 90 சதவிகித தொகை கடனாகக் கிடைக்கும்.

 வீட்டின் மதிப்பு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் 75 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், வீடு வாங்குபவர் முன்பணமாக 20 சதவிகித தொகையைப் போட வேண்டும். மீதி 80%  தொகை கடனாகக் கிடைக்கும். வீட்டின் மதிப்பு 75 லட்சம் ரூபாய்க்கு வீடு வாங்குபவர் முன்பணமாக 25 சதவிகித தொகையைப் போட வேண்டும். மீதி 75% தொகை கடனாகக் கிடைக்கும்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, சொத்தின் மதிப்பை கணக்கிட சொத்துப் பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம், இதர ஆவணக் கட்டணங்கள், தரகர் கட்டணம் ஆகியவற்றை சேர்க்க மாட்டார்கள். இதற்கான தொகையை வீடு வாங்குபவர்கள் தனியாகச் சேர்த்து வைத்திருக்க வேண்டும்.

வீட்டுக் கடன் முன்பணம்... எப்படி திரட்டுவது?

வீட்டுக் கடன் முன்பணத்தை வீடு வாங்குபவர், முன்பே தயாராக வைத்துக்கொள்வது அவசியமாகும். உதாரணத்துக்கு, வீட்டின் விலை ரூ.50 லட்சம் என்றால் அதில் 20%, அதாவது ரூ.10 லட்சம் கையிலிருந்து போட வேண்டி இருக்கும். வீடு வாங்குபவர் 20% தொகைதான் கையிலிருந்து போட வேண்டும் என்பதில்லை. அதிக பணம் இருக்கும்பட்சத்தில் முன்பணத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இதனால், கடன் தொகை குறைந்து மாதத் தவணை குறையும்; வட்டியாகக் கட்டும் தொகை குறையும்.

 வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கும்போது, அதிகமாக முன்பணம் போட்டால், குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

வீட்டுக் கடன்  முன்பணம்...
வீட்டுக் கடன் முன்பணம்...

கட்டிய வீட்டை வாங்கும்போதுதான் மொத்தமாக முன்பணம் திரட்ட வேண்டி இருக்கும். அதேநேரத்தில், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டை வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது முன் பணத்தை மொத்தமாகக் கொடுக்க வேண்டியதில்லை. வங்கிக் கொடுக்கும் கடன் தொகையின் விகிதாசாரத்துக்கு ஏற்ப முன்பணத் தொகையை பில்டருக்கு கொடுத்தால் போதும். இப்படி டவுன் பேமேன்ட் தொகையை சில மாதங்கள் வரை பிரித்துக் கட்ட  வங்கிகள் அனுமதிக்கின்றன.

பழைய வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கும்போது, வீடு எந்தளவுக்குப் பழையதோ அந்த அளவுக்கு முன்பணம் அதிகமாக இருக்கும். சுமார் 10 ஆண்டுகள் பழைய வீடு என்றால் வீட்டின் மதிப்பில் சுமார் 65% வரை தான் கடன் கிடைக்கும். மீதி 35% தொகையை வீடு வாங்குபவர் போட வேண்டி இருக்கும். சுமார் 15-20 ஆண்டுகளுக்கு  மேற்பட்ட  பழைய வீடு எனில், 40% முதல் 50% வரை வீட்டு வாங்குபவர் கையிலிருந்து போட வேண்டி வரும்.

முதலீடு மூலம்  முன்கூட்டியே முன்பணம் திரட்டுதல்..!

வீட்டுக் கடன் முன்பணத்துக்கு கடன் வாங்கும்போது, அது வீட்டுக் கடனுக்கான தகுதியைக் குறைப்பதோடு, கிடைக்கும் கடன் தொகையையும் குறைத்துவிடும். இதனால், வீடு வாங்க முடியாமல்கூட போகலாம். எனவே, ஏற்கெனவே திட்டமிட்டு முதலீடு மூலம் முன்பணத்தை திரட்டி வைக்க வேண்டும்.

வீட்டுக் கடன் இ.எம்.ஐ
வீட்டுக் கடன் இ.எம்.ஐ

இன்னும் 3 ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் வாங்கப் போகிறீர்கள் என்றால் ரிஸ்க் இல்லாத ஃபிக்ஸட் டெபாசிட், கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில் பணத்தை மாதந்தோறும் ஆர்.டி அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். இன்னும் 5 ஐந்தாண்டுகள் இருக்கிறது என்றால் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். 8 ஆண்டுகள் இருக்கிறது என்றால் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

 இப்படிச் செய்து வந்தால், முன்பணத்துக்கு எனத் தனியே கடன் வாங்க வேண்டி இருக்காது; வட்டியும் கட்ட தேவையிருக்காது. ஒருபுறம் வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ மறுபுறம் முன்பணத்துக் கான இ.எம்.ஐ என்கிறபோது அதிக கஷ்டமாக இருக்கும்.

கடன் மூலம் முன்பணம்..!

விவரம் தெரியாத சிலர் கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி, வீட்டுக் கடன் முன்பணம் கட்டுகிறார்கள். இது கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம், வட்டி ஆண்டுக்கு சுமார் 36 - 45 சதவிகிதமாக இருக்கிறது. வீட்டுக் கடன் முன்பணத்தை, தனிநபர் கடன் (Personal Loan) மூலம் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், கடனுக்கான வட்டி சுமார் 18% முதல் 22% ஆக அதிகமாக இருக்கும். தங்க நகை அடமான கடனுக்கான வட்டி சுமார் 9 சதவிகிதம் தொடங்கி 15 சதவிகிதம் வரை இருக்கும்.

கட்டுரையாளர்:  ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
கட்டுரையாளர்: ஆர்.வெங்கடேஷ் நிறுவனர், www.gururamfinancialservices.com

நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி வீட்டுக் கடன் முன்பணத்துக்கு ஏற்பாடு செய்யலாம். நிறுவனத்தில் வட்டி இல்லாமல் அல்லது மிகக் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் வாங்கலாம்.

மாத சம்பளம் வாங்குபவர்கள் பிஎஃப் பிடிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு வாங்குவதற்கு கடன் வாங்க முடியும். இந்தக் கடனை திரும்பக் கட்டத் தேவையில்லை. வேறு வழியே இல்லை என்றால் மேலே கூறப்பட்டவற்றில் எதற்கு குறைவான வட்டியோ அந்தக் கடனை வாங்கலாம். கடைசியாகதான் பி.எஃப் கடன் வாங்க வேண்டும். முறையாக முன்கூட்டியே வீட்டுக் கடன் முன்பணத்தை திரட்டி வைத்திருக்கும்பட்சத்தில் மிக சந்தோஷமாக சொந்த வீட்டில் நுழைய முடியும்.