Published:Updated:

ஆசைகளை அனுபவிக்க... சம்பள பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும்? வழிகாட்டும் பர்சனல் ஃபைனான்ஸ்!

முதல் வேலை முதல் சம்பளம்

இன்றைய நிலையில் பலரும் அந்தந்த மாதச் சம்பளத்தை அந்தந்த மாதமே செலவு செய்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் முழுச் சம்பளப் பணத்தையும் செலவு செய்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலம் அல்லது கடன் வாங்கி செலவு செய்வதைப் பார்க்க முடிகிறது.

Published:Updated:

ஆசைகளை அனுபவிக்க... சம்பள பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும்? வழிகாட்டும் பர்சனல் ஃபைனான்ஸ்!

இன்றைய நிலையில் பலரும் அந்தந்த மாதச் சம்பளத்தை அந்தந்த மாதமே செலவு செய்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் முழுச் சம்பளப் பணத்தையும் செலவு செய்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலம் அல்லது கடன் வாங்கி செலவு செய்வதைப் பார்க்க முடிகிறது.

முதல் வேலை முதல் சம்பளம்

சம்பளத்தில், சம்பாத்தியத்தில் எவ்வளவு தொகையை செலவு செய்யலாம் என்பதில் அனைவருக்கும் குழப்பம் இருக்கிறது. இன்றைய நிலையில் பலரும் அந்தந்த மாதச் சம்பளத்தை அந்தந்த மாதமே செலவு செய்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் முழுச் சம்பளப் பணத்தையும் செலவு செய்துவிட்டு, கிரெடிட் கார்டு மூலம் அல்லது கடன் வாங்கி செலவு செய்வதைப் பார்க்க முடிகிறது.

மூன்று வகை செலவுகள்..!

சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம்?
சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்யலாம்?

நாம் சம்பள பணத்தை தற்போதைய அவசிய செலவுகள், ஆசைப்படுவதற்கான செலவுகள், எதிர்கால தேவைக்கான சேமிப்பு என மூன்றாகப் பிரித்துக்கொள்வது கட்டாயமாகும். பணி ஓய்வுக்குப் பிறகு சும்மா இருக்கப்போகிற காலத்துக்கும் சேர்த்துதான் பணிபுரியும் காலத்தில் சம்பாதிக்கிறோம் என்பதால், அந்தப் பணத்தை எதிர்கால தேவைக்காக சேமிப்பது மிக அவசியமாகும்.

சம்பளப் பணத்தை அவசியமான குடும்ப செலவுகளுக்கு 50%, ஆசைப்படுவதற்கான செலவுகள் 20%, எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 30% என ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அளவீடு மாதச் சம்பளம் ரூ.50,000-க்குள் இருக்கும்போதுதான். இதுவே மாதச் சம்பளம் ரூ.50,000-க்கு மேல் என்றால், அவசியமான குடும்பச் செலவுகளுக்கு 40%, ஆசைப்படுவதற்கான செலவுகள் 25%, எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 35% என மாற்றம் செய்து ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவரின் சம்பளம் ரூ.75,000 என்கிற நிலைக்கு உயர்ந்தால் அவசியமான குடும்ப செலவுகளுக்கு 35%, ஆசைப்படுவதற்கான செலவுகள் 25%, எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 40% என ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இதுவே சம்பளம் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் என இருந்தால் அவசியமான குடும்ப செலவுகளுக்கு 30%, ஆசைப்படுவதற்கான செலவுகள் 25%, எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 45% என ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

 சம்பளம்...
சம்பளம்...

சம்பளம் அதிகரிக்க சேமிப்பும் உயர வேண்டும்..!

அதாவது, சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க எதிர்கால தேவைக்காக முதலீடு செய்வதை வேகமாக அதிகரித்துக்கொண்டே வர வேண்டும். அதே நேரத்தில், ஆசைப்படுவதற்கான செலவை நிதானமாகதான் அதிகரிக்க வேண்டும்.

இதை இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போம். ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.50,000 என வைத்துக்கொள்வோம். குடும்பச் செலவுகளுக்கு 50% அதாவது ரூ.25,000 செலவிடலாம். ஆசைப்படுவதற்கான செலவுகள் 20% அதாவது ரூ.10,000 செலவிடலாம். எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 30% அதாவது ரூ.15,000 சேமிக்க வேண்டும்.

நிதி சுதந்திரம்..!

இந்தக் குடும்பத்தின் வருமானம் ரூ.1 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், அவசியமான குடும்பச் செலவுகளுக்கு 30% அதாவது ரூ.30,000 செலவிடலாம். ஆசைப்படுவதற்கான செலவுகள் 25% அதாவது ரூ.25,000 என இருக்கலாம்; எதிர்கால தேவைக்கான சேமிப்புக்கு 45% அதாவது ரூ. 45,000 சேமித்து வர வேண்டும். இதை 35:15:50 அல்லது 30:15:55 என்பது போல் மாற்றி அமைத்து சம்பளத்தைச் செலவு செய்வது மூலம் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் அதே நேரத்தில் எதிர்கால வளமான வாழ்க்கைக்கு கணிசமாகவும் சேமிக்க முடியும்.

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்குபவர் 35:15:50 விதிமுறைப்படி அவசிய செலவுகளுக்கு ரூ.35,000, ஆசைப்படுவதற்கு ரூ.15,000, எதிர்கால தேவைக்கு ரூ.50,000 முதலீடு எனப் பிரித்து செலவு செய்வது சிறப்பாக இருக்கும். முடிந்தால் சம்பளத்தில் 60%, 70% தொகையை சேமிக்கும் பட்சத்தில் விரைவாக கோடீஸ்வரர் ஆக முடியும்.

செலவு
செலவு

செலவு செய்வதற்கான சில விதிமுறைகள்..!

செலவு செய்யும் மனநிலையை மாற்றிக்கொண்டாலே விரைவில் நிதி சுதந்திரம் அடைய முடியும். ஒரு கடைக்கு ஷாப்பிங் சென்றிருக்கும் நிலையில், ஒருவர் அவரின் ஆண்டு மொத்த சம்பளத்தைவிட 1 சதவிகித்துக்கு மேலான தொகைக்கு ஒரு பொருளை வாங்குவதாகத் திடீரென முடிவு எடுத்தால், அந்தப் பொருளை வாங்க ஒரு நாள் (24 மணி நேரம்) முழுமையாக காத்திருக்க வேண்டும் என்பது முன்னணி நிதி ஆலோசகர் கிளென் ஜேம்ஸ் (Glen James) சொல்லும் முக்கியமான ஷாப்பிங் விதிமுறை ஆகும்.

ஒருவரின் மாதச் சம்பளம் ரூ.50,000. அதாவது, அவரின் ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சம் ஆகும். இதில் 1% என்பது ரூ.6,000 ஆகும். இந்தத் தொகைக்கு மேல் மதிப்புள்ள பொருள்களை திடீரென வாங்கத் திட்டமிட்டால், 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்தப் பொருள் உண்மையில் தேவையா? இல்லையா? என்பது குறித்த தெளிவு பிறக்கும்.

இதுவே வாங்கப்போகும் பொருள் அல்லது சேவையின் மதிப்பு, ஆண்டு மொத்த சம்பளத்தில் 5%-க்கு மேல் என்றால் ஒரு வாரம் முழுமையாகக் காத்திருக்க வேண்டும். அப்போது அந்தப் பொருள் அவசியம் தேவையா என்பது தெரிந்துவிடும். அதன் பிறகு வாங்கலாம்.

கட்டுரையாளர்:  ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
கட்டுரையாளர்: ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

பொருள்கள் பட்டியல்..!

பொதுவாக, வீட்டுக்கு என்னென்ன பொருள்களை அவசியம் வாங்க வேண்டும் என்கிற பட்டியலை குடும்பத்தாருடன் சேர்ந்து கலந்து பேசி தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் எந்தப் பொருள் எவ்வளவு சீக்கிரம் தேவை என்பதை 1, 2, 3, 4, 5… எனப் பட்டியல் போடவும். அதன்படி அந்தப் பொருள்களை பணம் சேர்த்து அதாவது பணத்தை சேமித்து, முதலீடு செய்து வாங்கவும். இந்தப் பட்டியலைத் தாண்டி உள்ள பொருள்களை வாங்குவதாக இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து வாங்கவும்.

இப்படிச் செய்யும்போது தேவையில்லாத பொருள்களை வாங்கி பணத்தை வீணாக்க தேவை இருக்காது. மேலும், தேவையான பொருள்களின் பட்டியல் கையில் இருக்கும் நிலையில் தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகளின்போது அந்தப் பொருள் அதிக தள்ளுபடியில் கிடைக்கும்போது சுலபமாக மலிவாகவும் வாங்க முடியும்.