Published:Updated:

How To: உங்களின் EPF நிதி இருப்பை எளிதாக அறிவது எப்படி? |How To Know Your EPF Balance?

வருங்கால வைப்புநிதி

பணியாளர் தன் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை EPF திட்டத்துக்குப் பங்களிப்பார். அவர் பணிபுரியும் நிறுவனம், அத்தொகைக்கு சம மதிப்புள்ள தொகையை சேர்த்து திட்டத்தில் பங்களிக்கும். இதற்கு, பணியாளர் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்.

Published:Updated:

How To: உங்களின் EPF நிதி இருப்பை எளிதாக அறிவது எப்படி? |How To Know Your EPF Balance?

பணியாளர் தன் மாத சம்பளத்தில் ஒரு பகுதியை EPF திட்டத்துக்குப் பங்களிப்பார். அவர் பணிபுரியும் நிறுவனம், அத்தொகைக்கு சம மதிப்புள்ள தொகையை சேர்த்து திட்டத்தில் பங்களிக்கும். இதற்கு, பணியாளர் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்.

வருங்கால வைப்புநிதி

ஒரு பணியாளர் தன்னுடைய மாத சம்பளத்தில் ஒரு பகுதியை EPF திட்டத்துக்குப் பங்களிப்பார். அவர் பணிபுரியும் நிறுவனம், அவர் பங்களிக்கும் தொகைக்கு சம மதிப்புள்ள தொகையை சேர்த்து திட்டத்தில் பங்களிக்கும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு டெபாசிட் செய்யப்பட்டவுடன் (EPFO), பணியாளர் ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தைத் தொடர்ந்து பெறுவார்.

மேலும், பணியாளருக்கு EPFO (UAN - Universal Account Number) எண்ணை ஒதுக்குகிறது. இந்த UAN ஆனது பல்வேறு அமைப்புகளால் ஒரு நபருக்கு வழங்கப்பட்ட பல்வேறு உறுப்பினர் ஐடி-களுக்கான ஒற்றை அடையாளமாகச் செயல்படுகிறது.

பணியாளர் வருங்கால வைப்புநிதியில் பங்களிக்கும் பணியாளர், பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி, எப்போது வேண்டு மானாலும் தங்களுடைய வைப்புநிதியின் இருப்பை சரிபார்க்கலாம். பி.எஃப் இருப்பை சரிபார்க்க பல வழிகள் உள்ளன. அவற்றில் சில வழிகளைக் காண்போம்.

வருங்கால வைப்பு நிதி!
வருங்கால வைப்பு நிதி!

1. EPFO போர்டலை பயன்படுத்துதல்

EPFO வின் அதிகாரபூர்வ இணையதளத்தைத் திறந்துகொள்ளவும். அதில் பணியாளர்களுக்கான (employees section) பகுதிக்குச் சென்று, உறுப்பினர் பாஸ்புக் (member passbook) என்பதை க்ளிக் செய்யவும். உங்கள் UAN எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட வேண்டும். இதன்மூலம் உங்களுடைய PF பாஸ்புக்கை உங்களால் காண முடியும். தொடக்க மற்றும் இறுதி நிலுவைகள், பணியாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்புகள் போன்றவை காண்பிக்கப்படும். மேலும் PF கணக்கின் மொத்த பரிமாற்றங்களும், செலுத்தப்படும் வட்டியின் அளவும் காட்டப்படும். EPF இருப்புத்தொகையையும் உங்களுடைய பாஸ்புக்கில் நீங்கள் பார்க்கலாம்.

2. SMS வழியாகத் தெரிந்துகொள்வது

உங்கள் UAN எண்ணுடன் உங்களுடைய வங்கிக் கணக்கு, ஆதார் மற்றும் PAN இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து EPFOHO UAN ENG என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பவும்.

நீங்கள் விரும்பிய மொழியின் முதல் மூன்று எழுத்துகளை டைப் செய்யவும். உதாரணமாக, ENGLISH - ENG. ஒருவேளை நீங்கள் தமிழில் செய்தியைப் பெற EPFOHO UAN TAM என டைப் செய்து அதே எண்ணுக்கு SMS அனுப்பினால், உங்களின் UAN EPFO-ல் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் EPF-ன் மிக சமீபத்திய பங்களிப்பு மற்றும் PF இருப்பு பற்றிய தகவல்கள் உங்களுக்கு மெசேஜாக வரும்.

யுமாங் ஆப்! #UmangApp
யுமாங் ஆப்! #UmangApp

3. UMANG App

பொதுமக்கள் ஒரே இடத்தில் பலவிதமான அரசு சேவைகளை அணுகுவதற்காக, உமாங் ஆப் (UMANG App) என்ற செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இதில் PF பயனர்கள் தங்களுடைய உரிமைகோரல்களை (claim) சமர்ப்பிக்கலாம், அவர்களின் EPF பாஸ்புக்கைப் பார்க்கலாம் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தி அவர்களின் க்ளெய்ம் குறித்த தகவல்களை follow செய்துகொள்ளலாம். UMANG ஆப்பை பயன்படுத்துவதற்கு உங்களுடைய அலைபேசி எண்ணை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளவும். அதன்பின் உங்களுடைய அனைத்து தகவல் களையும் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

4. Missed call மூலம் இருப்பை தெரிந்துகொள்ளுதல்

நீங்கள் UAN தளத்தில் உங்களுடைய கணக்கை பதிவு செய்திருந்தால், உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும் பட்சத்தில் உங்களுடைய கணக்குக்கான தகவலை தெரிந்துகொள்ளலாம். முன்னதாக உங்களின் வங்கிக் கணக்குத் தகவல், ஆதார் மற்றும் பான் எண் ஆகியவை உங்கள் UAN-ல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தச் சேவைக்கு கட்டணம் இல்லை.